-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

திங்கள், நவம்பர் 28

இளைஞர்களே! சுய இன்பமும் விபச்சாரமே!


இன்றைய நவீன உலகில் பல விதமான பிரச்சினைகள் இருப்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம்.அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி பல வழிகளிலும் மனிதன் முயன்று கொண்டிருக்கிறான் ஆனால் அவனால் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியாமல் அவதிப் படுகிறான்.

ஆனால் இந்த நவீன யுகத்தில் கூட எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் மார்க்கம் என்றால் ஒன்று உண்டென்றால் அது இஸ்லாமிய மார்க்கம் தான் என்பதை பலர் அறியாமலேயே இருக்கின்றார்கள்.

இன்றைய நாட்களில் உள்ள சிக்கள்களில் முதன்மையானதாக இருப்பது உடல் ஆசையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் செக்ஸ் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பலரும் பலதரப்பட்ட விளக்கங்களைச் சொன்னாலும் அந்த விளக்கங்களால் முழுமையான தீர்வு கிடைப்பதில்லை என்பதே உண்மை.அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாவகரமான செயல்தான் சுய இன்பம் என்பதும்.

இந்த சுய இன்பத்தைப் பற்றியோ அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றியோ பெரும்பாலானவர்கள் பெரிதாக எதையும் நினைப்பதில்லை.அதற்க்கு மிக முக்கியமான காரணம் ஒரு சில வைத்தியர்களும்,ஆய்வாளர்களும்,அதுபோல் சில கட்டுரையாளர்களும் இதனால் எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை என்ற கருத்தை மக்களிடம் விதைப்பது தான்.

முதலாவதாக இஸ்லாமிய மார்க்கம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து விட்டு விஞ்ஞான ரீதீயாக இவர்களின் கருத்து எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்போம்.

முதலாவது ஒருவன் சுய இன்பத்தினை நாடுவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி விஞ்ஞான உலகம் கூறும் போது பல காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள்.

1.தான் விரும்புகின்ற அல்லது ஆசைப்படுகின்ற பெண்னை அடைய முடியவில்லை என்பதால் அவளுடன் இருப்பதாக என்னிக் கொண்டு இந்த நிலைக்கு சிலர் சென்று விடுகின்றனர்.

2.தனிமையை அதிகம் விரும்புவது.

3.பாடசாலை,அல்லது கல்லூரியில் தன்னுடன் சேர்ந்திருக்கும் கெட்ட நண்பனின் தீய நடவடிக்கைகளால்.

4.அடிக்கடி ஏற்படுகின்ற தீய எண்ணங்கள்.

5.ஆபாச திரைபடம் அல்லது புகைப்படங்களின் மோகம்.


இது அல்லாத இன்னும் பல காரணங்களைக் கூறினாலும் மிக முக்கியமானவைகளைப் மட்டுமே இங்கு நாம் பட்டியலிட்டுள்ளோம்.

இந்த வகையில் இப்படிப் பட்ட பிரச்சினைக்கு இஸ்லாம் என்ன தீர்ப்பைச் சொல்கிறது?

எந்நேரமும் நம்மை அல்லாஹ் கண்கானிக்கிறான் என்ற பயம் இருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்.அவரிலிருந்து அவரது துனையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.எவனை முன்னிருத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களை கண்கானிப்பவனாக இருக்கிறான்.(4:1)
மனிதர்கள் பாவம் செய்யும் போது அல்லாஹ்வின் பயம் அவர்களிடம் இல்லாமல்ப் போய் விடுகிறது அதன் காரணத்தாத் தான் அல்லாஹ்வை மறந்து சிறு பாவம்,பெரும் பாவம் என எல்லாவெற்றையும் செய்கிறார்கள். இப்படி பாவம் செய்ய துணியும் போது அல்லாஹ் நம்மை கண்கானிக்கிறான் என்பதை நினைத்து உடனே அதை விட்டும் நீங்கி விட வேண்டும்.

ஆனால் இந்த சுய இன்பம் என்ற பாவம் தொடர்ச்சியாக செய்யப்படும் போது அல்லாஹ் நம்மைக் கண்கானிக்கிறான் என்ற பயம் நமது உள்ளத்தை விட்டு அகன்று விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சுய இன்பம் ஒரு வகையான விபச்சாரமே!

(நம்பிக்கை கொண்டோர்)தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் வேறு வழியை)தேடியவர்களே வரம்பு மீரியவர்கள். (23:5,6,7)

மேற்கண்ட திருமறை வசனத்தில் அல்லாஹ் கூறியபடி வாழ்பவர்கள் தம்முடைய இச்சைகளைத் தீர்க்க நாடினால் தங்கள் மனைவியரிடத்தில் அல்லது தமது அடிமைகளிடத்தில் மாத்திரம் தான் தீர்த்துக் கொள்வார்கள் அதுவல்லாத வேறு எந்த வழிகளையும் நாட மாட்டார்கள் என்று இறைவன் கூறுகிறான்.இந்த வசனத்தில் இறைவன் பயன் படுத்தும் வேறு வழிகள் என்ற வாசகத்திலிருந்து சுய இன்பமும் அதிலே அடங்கும் என்பதை அறியலாம்.

அது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைப் பற்றி மிகவும் தெளிவாக கூறியிருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கின்றன, இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன, இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன, மர்ம உருப்போ அதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்ப்படுத்துகிறது. (நூல் : அஹ்மத் 10490)

மேற்கண்ட நபி மொழியில் நபி(ஸல்) அவர்கள் விபச்சாரம் எந்தெந்த உருப்புகளின் மூலம் உருவாகும் என்பதைப் பற்றி தெளிவு படுத்துகிறார்கள்.

அதில் கண்களின் மூலம் விபச்சாரம் நடக்கிறது என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.இஸ்லாம் தடுக்கக் கூடிய காட்சிகளை பார்த்தல்,அண்ணியப் பெண்களை கெட்ட எண்ணங்களில் பார்ப்பது, ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்றவைகள் இதில் அடங்கும்.

இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதில் மேற்குறிப்பிட்ட காரணங்களுக்கு உதவி செய்வதும் அடங்கும், அதிலும் குறிப்பாக நாம் தற்போது பேசிக்கொண்டிருக்கும் சுய இன்பம் தான் இதன் மூலம் நேரடியாக குறிப்பிடப் படுவதையும் நாம் அறியலாம்.

ஏனெனில் இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறது என்றால் அதற்கு மிக முக்கியமானது இந்தக் கைகள் தான் இந்தக் கைகளின் மூலம் தான் இன்றைய இளைஞர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக மருத்துவ உலகம் உருதிப்படுத்துகிறது.

அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடும் போது. (நம்பிக்கை கொண்டோர்) தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் வேறு வழியை)தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.(23:5,6,7)


உண்மையில் அல்லாஹ்வை கடவுளாக ஏற்று தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய ஆபாச உணர்வுக்கான தேவையை அல்லாஹ் கூறிய இரண்டு வழிகளில் மாத்திரம் தான் நிறைவேற்ற வேண்டுமே தவிர வேறு வழிகளை தேடக்கூடாது.

அதிலும் அல்லாஹ் கூறக்கூடிய இரண்டாவது வழிமுறை நம்முடைய காலத்தில் நடைமுறையில் இல்லை என்பதால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்களின் உடலுறவுத் தேவையை தமது மனைவியிடத்தில் மாத்திரம் தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மனைவியல்லாதவர்களுடன் தனது தேவையை பூர்த்தி செய்வதற்கு முனைவதோ அல்லது சுய இன்பம் போன்றவற்றில் ஈடுபடுவதோ அல்லாஹ்விடத்தில் வரம்பு மீறிய குற்றத்தை ஏற்படுத்தும் என்பது மேற்கண்ட திருமறை வசனத்தில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

மறுமை நாளின் விசாரனையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது (மறுமை நாளில்) அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.(24:24)

இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம், அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும், கால்கள் சாட்சி கூறும்.(36:65)

முடிவில் அவர்கள் அங்கே வந்ததும், அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும்,பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி சொல்லும்.(41:20)

மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் மறுமை நாளின் விசாரனை பற்றி மிகத் தெளிவாக இறைவன் எடுத்துரைக்கிறான்.

மறுமையில் ஒவ்வொரு உருப்பும் தாம் செய்தவைகளைப் பற்றி விசாரிக்கப் படும்.அப்போது தாம் செய்த நல்ல கெட்ட காரியங்களுக்கு அந்த உருப்புகளே சாட்சியாகவும் மாறிவிடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

ஆக சுய இன்பம் போன்ற காரியங்களை நாம் செய்வதின் மூலம் மறுமை விசாரனையில் அல்லாஹ்விடத்தில் நமது உருப்புகளே நம்மைக் காட்டிக் கொடுத்து அதன் மூலம் வரம்பு மீறியோராகி, நஷ்டத்திற்குள்ளாகி விடுவோம்.

அதே போல் இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறது என்றும் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.உண்மையில் விபச்சாரம் செய்வதற்காக செல்லுதல் அல்லது அதற்கு உதவி செய்வது, ஆபாசப் படங்கள் பார்ப்பதற்கு செல்லுதல், இஸ்லாம் தடுத்த இடங்களுக்கு செல்லுதல் போன்றவைகள் கால்களால் செய்யும் விபச்சாரத்தில் அடங்கும்.

இதிலிருந்தும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பை கேட்க வேண்டும்.

சுய இன்பத்தின் மூலம் ஏற்படும் (உடலியல்) விபரீதங்கள்

உலக மக்கள் அனைவருக்கும் எதிரான இந்த சுய இன்பம் என்ற மிகக் கொடூரமான மன நோயை பெரும்பாலான மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கூடாது என்று தடுத்தாலும் ஒரு சிலர் இதனை ஆதரிக்கவும் செய்கின்றனர்.

இப்போது அவர்கள் சுய இன்பத்தை ஆதரிப்பதற்கு கூறும் காரணத்தையும், வாதங்களையும் அதில் உள்ள தவறுகளையும் ஆராய்வோம்.

அவர்களின் வாதம்


சுய இன்பத்தின் மூலம் ஒருவன் யாருக்கும் தொந்தரவுகளைக் கொடுக்காமல் தனிமையில் அவனது தேவையை தீர்த்துக் கொள்கிறான் இதன் மூலம் அவன் மற்றவர்களுக்கு நல்லதைத் தான் நாடுகிறானே தவிர யாருக்கும் கெடுதி செய்யவில்லை.

நமது பதில்

ஒருவன் யாருக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்க்காக ஒரு குற்றத்தை ஆதரிப்பது ஒரு அறிவாளியின் செயல் அன்று.அத்துடன் இப்படிப் பட்டவர்கள் இதுவல்லாத மற்ற எல்லா குற்றங்களுக்கும் இந்த அளவுகோளையே வைப்பார்களா? யாருக்கும் எந்தக் கஷ்டமும் கொடுக்காமல் ஒருவன் போதை மாத்திரைகளையோ அல்லது போதை ஊசிகளையோ பயன்படுத்தினால் இவர்கள் அதை ஆதரிக்கிறார்களா? மறுக்கிறார்களா? மறுக்கத் தான் செய்கிறார்கள்.

ஏனெனில் அது உடலுக்கு கேடானது என்பதுதான் அவர்களின் பதில்.அதுபோல் சுய இன்பமும் உடலுக்கு கேடானது என்பதில் சந்தேகமில்லை.(இதைப் பற்றி பின்பு விரிவாக விளக்கப்படும்.) ஆக ஒரு குற்றத்தை தடுத்தல் என்ற முடிவுக்கு வரும் போது அது அவனுடன் மட்டும் தொடர்பு பட்டாலும்,மற்றவர்களுடன் தொடர்பு பட்டாலும் குற்றம்,குற்றமே!

அவர்களின் வாதம்

சுய இன்பத்தில் ஒருவன் ஈடுபடுவதின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்துவதினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆதலால் இதைத் தடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

சுய இன்பத்தின் மூலம் வெளியாக்கப்படும் இந்திரியமும், தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதே! தூக்கத்தில் அறியாமலும், சுய இன்பத்தில் அறிந்த நிலையிலும் இந்திரியம் வெளியாகிறது. இதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

இது நாம் உமிழ் நீரை உமிழ்வதைப் போன்றதே உமிழ் நீர் எப்படி உடனே சுரந்து விடுகிறதோ அது போல்தான் இந்திரியம் வெளியேற்றப்பட்ட சில மணி நேரத்திலேயே சுரந்து விடும். இதனால் எந்த சிக்களும் உடலுக்கு ஏற்படாது.

நமது பதில்

சுய இன்பத்தின் மூலம் வெளியாகும் இந்திரியமும், தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதுதான் அதனால் அதனை தடுக்கத் தேவையில்லை என்பது அவர்களின் வாதம்.

உண்மையில் வெளியாகும் அளவில் வேண்டுமானால் இரண்டும் சமமாக இருக்கலாம். ஆனால் முறைமையில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

தூக்கத்தில் இந்திரியம் வெளியாவது என்பது இயற்க்கை. சுய இன்பத்தின் மூலம் வெளியாவது என்பது இயற்கைக்கு மாற்றமான செயற்கை.

உடலில் ஏற்படும் எந்த மாற்றமும் இயற்கையில் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. (இயற்கை அளவுக்கு அதிகமானாலும் பிரச்சினையாகும். அப்படியிருக்க செயற்கை முறையில் மாற்றம் ஏற்படுவது உடலுக்கு கேடானது என்பதில் எந்த மருத்துவருக்கும் மாற்றுக் கருத்தில்லை) மாறாக செயற்கையில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றால் அது பிரச்சினைதான்.

உதாரணத்திற்கு ஒருவர் மெலிந்தவராக இருந்து, இயற்கையாக (அளவாகக்) கொளுத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆனால் செயற்கை முறைகளை பயன்படுத்தி ஒருவர் தனது பருமனை அதிகரித்துக் கொண்டால் அது உடலுக்கு ஏகப்பட்ட சிக்களை ஏற்படுத்தி விடும்.

அது போல்தான் தூக்கத்தில் ஒருவருக்கு இந்திரியம் வெளிப்பட்டால் அதன் மூலம் உடலுக்கு நல்லது ஏற்படும்.

சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்தினால் உடலுக்கு கேடுதான் விளையும்.

இந்தக் கருத்தில் தான் பெரும்பாலான மருத்துவர்களும், விஞ்ஞான ஆய்வாளர்களும் இருக்கின்றார்கள்.

அத்துடன் உமிழ் நீர் சுரப்பதைப் போல் இந்திரியமும் சுரந்து விடும் என்பதால் இதை ஆதரிக்க முடியாது. ஏனெனில் இந்திரியம் சுரக்கிறதா இல்லையா என்பது பிரச்சினை இல்லை. வெளியேற்றும் முறை சிறந்ததா? சிக்களானதா? என்பதுதான் பிரச்சினை.

சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளியேற்றுவது உடலுக்கு கேடானது என்று உறுதியான பின் இந்திரியம் மீண்டும் சுரந்தாலும், சுரக்கா விட்டாலும் அதை சுய இன்பம் மூலம் வெளியாக்க கூடாது.

அவர்களின் வாதம்

சுய இன்பத்தின் மூலம் உடலுக்கு எந்த கேடும் ஏற்படவில்லையே! பிறகு ஏன் இதைத் தடுக்க வேண்டும்?

நமது பதில்

சுய இன்பத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் இதுதான் மிக முக்கியமானது.

அவர்கள் சொல்லும் இந்த பதில்தான் அதிகமான இளைஞர்களை இந்த கெட்ட நடத்தையின் பக்கம் இழுப்பதற்கு காரணமாக இருக்கிறது.

சுய இன்பத்தில் ஈடுபடுவதின் மூலம், அதில் ஈடுபடுபவர்களின் உடலுறவு நாட்டம் படிப்படியாகவே குறைந்து விடுகிறது. ஏனெனில் சுய இன்பத்தின் மூலம் அதில் ஈடுபடக்கூடியவன் அவசரமாக இந்திரியத்தை வெளிப்படுத்தவே நினைப்பான் அப்படி அவசரமாக வெளிப்படுத்திப் பழகிவிடுபவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது, அவசரமாக இந்திரியம் வெளியாகிவிடுவதால். அவர்களின் இல்லற வாழ்க்கையில் இன்பம் இல்லாமல் ஆகிவிடுவதின் மூலம் அவர்களின் மனைவியர் வேறு வழிகளை நாடி வழிகெட்டுப் போவதற்கு அவர்களே காரணமாகவும் ஆகிவிடுகின்றனர்.

அவர்களின் வாதம் 

தாம் விபச்சாரத்தில் ஈடுபட்டு விடுவோம் என்ற பயம் ஏற்பட்டால் சுய இன்பம் கண்டு கொள்ளலாமா?  

(சகோதரர் பி.ஜெ அவர்கள் இது தொடர்பாக தமது இணையத் தளத்தில் வெளியிட்ட பதிலையே இதற்கு பதிலாக வெளியிடுகின்றோம்.)

நமது பதில்

இமாம் அஹ்மத் பின் ஹம்பல், இப்னு ஹஸ்ம் போன்ற மிகச் சிறந்த அறிஞர்கள் இவ்வாறு (சுய இன்பத்தில்) ஈடுபடுவது குற்றமில்லை என்று கூறியதை அடிப்படையாக வைத்து ஹராமை ஹலாலாக்கும் கொள்கையுடைய யூசுப் அல் கர்ளாவி போன்றவர்கள் இது ஹலால் என்று பத்வா கொடுப்பதால் எவ்வித உறுத்தலும் இல்லாமல் இதைச் சில இளைஞர்கள் செய்து வருகின்றார்கள்.

இவர்கள் அனைவரும் விபச்சாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிர்பந்தத்தைத் தான் காரணம் காட்டுகிறார்கள்.

ஆனால் திருக்குர்ஆனும்,நபி வழியும் இவர்களின் கருத்துக்கு எதிராகவே அமைந்துள்ளன.

(நம்பிக்கை கொண்டோர்) தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீரியவர்கள். (23:5,6,7)

ஆண்கள் தமது மனைவியர் மூலம் அல்லது அடிமைப் பெண்கள் மூலம் தவிர மற்ற வழிகளை விட்டும் கற்பைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றும், இவ்விரு வழிகளில் தவிர மற்ற வழிகளில் இச்சையை தீர்த்துக் கொள்வோர் பழிக்கப் பட்டவர்கள் என்றும், வரம்பு மீறியவர்கள் என்றும் இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன. இப்போது அடிமைப் பெண்கள் இல்லாததால் மனைவியர் தவிர மற்ற வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்வது வரம்பு மீறிய குற்றம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போது ஏற்படுவது போலவே நபியவர்களின் காலத்திலும் இருந்தது. இதற்கு மாற்று வழியை நபி(ஸல்)அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உங்களில் எவர் தாம்பத்தியத்திற்கு சக்தி பெற்றிருக்கிறாறோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப் படுத்தும். கற்பைக் காக்கும்.யார் அதற்கு சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும் அது அவரது இச்சையை கட்டுப்படுத்தும். (புகாரி : 1905)

அப்துர் ரஹ்மான் பின் யஸீத்(ரஹ்)அவர்கள் கூறியதாவது : நானும், அல்கமா மற்றும் அஸ்வத் ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் (பின்வருமாறு) சொன்னார்கள். நாங்கள் (வசதி,வாய்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபியவர்களுடன் இருந்தோம் அப்போது நபியவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் முடித்துக்கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையை கட்டுப்படுத்தும்.கற்பைக் காக்கும்.அதற்கு சக்தி பெறாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில் நோன்பு (ஆசையை) கட்டுப் படுத்தக் கூடியதாகும்.என்று சொன்னார்கள்.(புகாரி : 5066)

நபியவர்களின் ஆட்சியின் துவக்க காலத்தில் ஏற்பட்ட வறுமையைப் போல் இனி ஒரு காலத்தில் வறுமை ஏற்பட முடியாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம் பழம் கூட கிடைக்காத,ஒரு ஆடைக்கு மறு ஆடை இல்லாத அளவுக்கு அந்த வறுமை இருந்தது. பலருக்கு பள்ளிவாசலே வீடாக இருந்தது.

இந்த நிலையில்தான் திருமணம் செய்வதற்க்கான மஹர் இன்ன பிற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நபித்தோழர்களிடம் ஒன்றும் இல்லாததால் திருமணம் செய்ய முடியாத நிலையில் பலர் இருந்தனர். அவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்கள் தம்மைக் கட்டுப் படுத்திக் கொள்ள நோன்பு எனும் ஆயுதத்தை கையில் எடுக்குமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

சுய இன்பம் செய்வதற்கு அனுமதியிருந்தால் அதைச் சொல்வதற்கு பொருத்தமான இடம் இதுதான்.ஆனால் அவ்வாறு கூறாமல் நோன்பு நோற்று உணர்வுகளை கட்டுப் படுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டி விட்டனர்.

நபியவர்கள் காட்டிய இந்த வழியை விட சுய இன்பம் விபச்சாரத்தை தடுக்கக் கூடியதாக இருக்காது. உணர்வுகளைக் கட்டுப் படுத்தும் பயிற்சியில்லாமல் இப்படி நடந்து கொள்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் எளிதில் விபச்சாரத்தில் விழுவதற்குத் தான் இது வழிவகுக்கும்.

நபியவர்களின் காலத்தில் போர் செய்வதற்க்காக வெளியே செல்கின்ற நேரத்தில் மனைவியர் இல்லாததால் விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று நபித்தோழர்கள் அஞ்சினார்கள் எனவே அவர்கள் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதி கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர்
.
இப்னு மஸ்வுத் (ரலி) அவர்கள் கூறியதாவது : நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. எனவே, நாங்கள்,இறைத்தூதர் அவர்களே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? என்று கேட்டோம். அப்போது நபி(ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.(புகாரி : 5071)

கைஸ் இப்னு அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது : அப்துல்லாஹ் இப்னு மஸ்டித் (ரலி) அவர்கள் நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணந்துகொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், (ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா? என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்.இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை(5:87) (புகாரி : 5075)


குறைந்த மஹரைக் கொடுத்தாவது திருமணம் தான் செய்ய வேண்டும் என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

சுய இன்பம் என்பது விபச்சாரமாகவே நபித்தோழர்களால் கருதப்பட்டதால் தான் எந்த நபித்தோழரும் சுய இன்பம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாக காண முடியவில்லை.

மார்க்கத்தில் இது தடை செய்யப்பட்டது என்றாலும் விபச்சாரத்தில் விழுந்து விடாமல் தற்காத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் இவ்வாறு செய்யலாமா? என்று சிலர் வாதிடுகின்றனர். இவ்வாறு வாதிடுவதும் தவறானதாகும்.

மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட வழிகள் இல்லா விட்டால் தான் நிர்ப்பந்தம் என்ற நிலை ஏற்படும்.

நபித்தோழர்களுக்காவது திருமணம் முடிக்க வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது. இன்று அத்தகைய நிலை இல்லை. மேலும் குறைந்த மஹருக்கு வாழ்க்கைப் பட பெண்கள் காத்திருக்கிறார்கள். இளைஞர்கள் தக்க வயது வந்த பின்பும் பொருந்தாத காரணங்கள் கூறி திருமணத்தை தள்ளிப் போட்டு விட்டு அதை நிர்பந்தம் என்று சொல்ல முடியாது.

மேலும் வெளிநாட்டுக்குச் சென்று பல வருடங்கள் தங்கினால் இல்லற இன்பம் கிடைக்காது என்பது சாதாரணமாக அனைவருக்கும் தெரியும். தெரிந்து கொண்டே இந்த நிலையை நாமாக தலையில் போட்டுக் கொண்டால் அது நிர்பந்தம் ஆகாது.

ஒரு ஊரில் பன்றியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. கண்டிப்பாக பன்றியைத் தான் தின்னும் நிலை ஏற்படும் என்று தெரிந்தால் அந்த ஊருக்குச் சென்று பன்றியைச் சாப்பிடுவது நிர்பந்த நிலையில் சேராது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும்,வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை.அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன்.(2:173)


வலியச் செல்லாத நிலையில் இருந்தால்தான் அது நிர்பந்தம்,நாமாக வலியச் சென்று அந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டால் அது நிர்பந்தம் இல்லை என்று மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் இது விபச்சாரத்தை தடுக்காது தூண்டவே செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சரி குடும்ப நிலை காரணமாக வெளிநாட்டுக்கு வந்து விட்டு மனைவியின் துணையில்லாமல் இருக்கிறோம் அந்த நிலையில் இது போன்ற கெட்ட எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள முடியாதா? நிச்சயம் முடியும்.

இந்த நிலை ஏன் ஏற்படுகிறது? விபச்சாரத்தைத் தூண்டும் சினிமாக்கள், பாலியல் காட்சிகளின் வீடியோக்கள் மற்றும் ஆபாசக் காட்சிகளை எவ்வித உருத்தலும் இன்றி பார்ப்பது தான் இதற்கு முதல் காரணமாக உள்ளது. பொதுவாகவே இவை தவிர்கப்பட வேண்டியவை என்றாலும் மனைவியின் துணையின்றி இருக்கும் போது அதிகம் தவிர்கப்பட வேண்டியதாகும். இது போன்ற காட்சிகளைப் பார்ப்பது நம்மை தீய செயலில் தள்ளும் என்பதை உணர வேண்டும்.

மேலும் நபியவர்கள் கற்றுத் தந்த முறையில் நோன்பு நோற்று கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

தனிமையாக இருப்பதால் இது போன்ற எண்ணம் ஏற்பட்டால் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து தங்குவதின் மூலம் தீய எண்ணத்தை மாற்றலாம்.வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுச் சேவைகளில் ஈடுபடுவதின் மூலமும் இது போன்ற செயலை விட்டு ஒழிக்கலாம்.

இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன் தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடுடன் இருக்க சுய இன்பப் பழக்கம் உதவவே செய்யாது. நோன்பு நோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம் விபச்சாரத்தில் இருந்து காப்பாற்றும்.

இதையும் மீறி உடம்பில் ரொம்ப முறுக்கேறிவிட்டால் தூக்கத்தில் ஸ்கலிதம் ஆவதின் மூலமாக அதற்கு அல்லாஹ் இயற்கை வடிகாலை அமைத்துள்ளான் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.

இது போன்ற செயலில் கடந்த காலங்களில் ஈடுபட்டவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

அன்பின் சகோதரர்களே! இளைஞர்களே! இந்த கேடு கெட்ட செயல்பாடு ஒரு குறுகிய நோக்கம் கொண்டதே! இதில் ஈடுபடுவது எதிர்காலத்தையே நாசம் செய்துவிடும் என்பதில் அனுவளவும் சந்தேகமில்லை.

ஆக நம்முடைய சிறிது நேர இன்பத்திற்க்காக எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய காரியங்களை நாம் கண்டிப்பாக தவிர்த்துத்தான் ஆக வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் இலேசாக்குவானாக!

நன்றி ரஸ்மின் MISC

இஸ்லாமிய ஆண்டு உருவான வரலாறு!



மகத்தான படைப்பாளன் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்...

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரென்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி ( 9:36 )

இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி 1433வது ஆண்டு துவங்கியுள்ளது.

ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தை பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில்; கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி. (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு. (கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. 

ஆசூரா நோன்பு


முஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆம் பிறையில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.
ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1592
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1901
மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆஷூரா நோன்பு ஏன்?

ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். "இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3397
நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.

ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.

ஆஷூரா நோன்பின் சிறப்புகள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.

நூல்: புகாரி 2006
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: முஸ்லிம் 1976
நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: முஸ்லிம் 1977
யூதர்களுக்கு மாறு செய்வோம்

ஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.

மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1916, 1917
நபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.



சில முஸ்லிம்கள் கர்பலா எனும் இடத்தில் ஹுசைன் (ரலி) கொல்லப்பட்டது இந்த நாளில் தான்; எனவே இந்த நோன்பு நோற்கிறோம் என்று நினைக்கின்றனர்.


ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்கும் இந்த நோன்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி இந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.


மார்க்கத்தில் ஒரு காரியம் கடமையாகவோ, சுன்னத்தாகவோ ஆக வேண்டுமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் தான் ஆகுமே தவிர அவர்களுக்குப் பின்னால் உலகத்தில் என்ன நடந்தாலும் அதற்காக எந்த ஒரு வணக்கமும் மார்க்கத்தில் நுழைய இயலாது.


ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே, இம்மார்க்கத்தை இன்று நான் முழுமைப்படுத்தி விட்டேன் (அல்குர்ஆன் 5:3) என்று அல்லாஹ் பிரகடனம் செய்து விட்டான்.

ஆக்கம் : ஆன்லைன்பி.ஜே.காம்

புதன், நவம்பர் 23


நபிகளாரின் நற்குணங்கள்!


கண்ணியமிகு ஒழுக்கங்களையும் உயர்ந்த நாகரீகங்களையும் கற்றுத்தரும் கருணையாளனாகிய அல்லாஹ் தன்திருமறையில் கூறுகிறான்...

 நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக! (முஹம்மதே) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக இல்லை. உமக்கு முடிவுறாத கூலி உண்டு. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர் (அல்குர்ஆன் 68 : 1-4)

 நபி(ஸல்) அவர்கள் முழுமைப் பெற்ற தன்மைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். நற்பண்புகளில் அவர்களுக்கு நிகர் கிடையாது. அல்லாஹ் நபியவர்களுக்கு மிக அழகிய முறையில் ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுத்தான். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும் சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி(ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள்...

 மக்களுடைய உள்ளங்களின் ஆழத்தில் அவர்களது கண்ணியம் வேரூன்றி இருந்தது.நபியவர்களைப் பாதுகாக்க மக்கள் தங்களையே அர்ப்பணித்தார்கள்.

 இது போன்றதொரு மரியாதையையும் மதிப்பையும் வேறு எவரிடமும் இவ்வுலகம் கண்டதில்லை. அவர்களோடு வாழ்ந்தவர்கள் அவர்களை ஆழமாக நேசித்தனர். தங்களின் கழுத்துக்கள் வெட்டப்படுவதைக் கூட பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களின் நகத்துக்கு ஓர் இடையூறு ஏற்படுவதைக்கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சிறந்த பண்புகளும், அழகிய குணங்களும் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தது தான் தோழர்களின் நேசத்திற்குரிய காரணமாகும். நபியவர்களின் குணங்களையும், பண்புகளையும் முழுமையாக நம்மால் இங்கு விவரிக்க இயலாது. 

இருந்த போதும் அம்மாமனிதரின் சில அம்சங்களை இங்கே கோடிட்டுக் காட்டுவதன் மூலம் நல்லுள்ளம் கொண்ட மனித சமூகம் அவர்களைப் பற்றி அறிவதிலும், பின்பற்றுவதிலும் இன்ஷாஅல்லாஹ் ஆர்வங்கொள்ளும் என்ற நம்பிக்கையில் சில சொட்டுத்தேன்களை இங்கே கொட்டித் தருகிறோம். 

 நபி(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நாகரீகமில்லாத சமுதாயத்தினர் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். உலகில் உள்ள எல்லா மதங்களையும் ஆய்வு செய்து, இது தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து அவர்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.

 இறைவன் நபி(ஸல்) அவர்களை தூதராக நியமித்ததை கண்ணால் கண்டு விட்டு இறைத்தூதர் என்று நம்பினார்களா? என்றால், இல்லை.

இணைகற்பிக்கும் இமாம்! மத்ஹபின் தீர்ப்பு என்ன?


இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கடந்த பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். இதை ஏற்றுக் கொள்ளாத சிலர் இந்தத் தீர்ப்பின் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தை நாம் பிளவுபடுத்தி விட்டதாகக் கூறி வருகின்றனர்.
யாரும் கூறாத ஒன்றை நாம் கூறினாலும் ஆதாரத்துடன் தான் கூறியுள்ளோம் என்பதால் இந்த எதிர்ப்பை பொருட்படுத்தியதில்லை. இவர்களின் வாதத்தை பொய்யாக்கும் ஒரு பத்வா நம் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது...

உலகில் வாழும் அனைத்து ஹனபி மத்ஹப்காரர்களின் பல்கலைக் கழகமாகக் கருதப்படும் உத்தரபிரதேசத்தில் தேவ்பந்த் நகரில் அமைந்துள்ள தாருல் உலூம் மதரஸாவும் இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று அளித்த பத்வாவே அது...

ஹனபி மத்ஹப்காரர்கள் தங்கள் பள்ளியில் உள்ள இமாம் இணை கற்பித்தால் அவரை உடனே இமாமத் பணியில் இருந்து நீக்கி விட்டு இணை கற்பிக்காத இமாமை நியமிப்பது அவர்களின் கடமையாகும். அதற்கு இயலாவிட்டால் அந்த இமாமைப் பின்பற்றுவதை அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதோ அந்த பத்வா 

செவ்வாய், நவம்பர் 22

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?


நூலாசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தின் இந்த வளர்ச்சியால் கதிகலங்கிப் போன மேற்கத்திய உலகம் இஸ்லாத்தின் எந்தக் கொள்கையையும்கோட்பாட்டையும் குறை காண முடியவில்லை. அவர்கள் ஏற்றிப் போற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் விட இஸ்லாம் சிறந்து விளங்குவதால் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க முடியவில்லை. இஸ்லாத்தை விமர்சித்து அதன் வளர்ச்சியைத் தடுத்திட இரண்டே இரண்டு விமர்சனங்களைத் தான் அவர்கள் செய்து வருகின்றனர்.

1.      இஸ்லாம் தீவிரவாதிகளை உருவாக்குகிறது.
2.      இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது.

இந்த இரண்டுமே பொய்யான விமர்சனங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.

அத போல் தீவிரவாதம் என்ற பிரச்சாரத்துக்குப் பின் தான் உலகம் இஸ்லாத்தின் பால் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

உலகில் இன்று கூட பெண்களுக்கு வழங்க முடியாத உரிமைகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.
இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கீழ்க்காணும் குற்றச்சாட்டுகளைத் தான் முன் வைக்கின்றனர்.

  • ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள அனுமதிக்கிறது.
  • மனைவியைப் பிடிக்காவிட்டால் சர்வ சாதாரணமக விவகரத்துச் செய்ய இஸ்லாம் ஆண்களூக்கு உரிமை வழங்கியுள்ளது
  • விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதையும் இஸ்லாம் மறுக்கிறது.
  • பெண்களை ஹிஜாப் எனும் ஆடையால் போர்த்தி அவர்களின் சஉதந்திரத்தைப் பறிக்கிறது.
  • வாரிரிசுரிமைசச் சட்டத்தில் ஆன்களூக்கு இரு மடங்கும் பெண்களூக்கு ஒரு மடங்கும் என பாரபட்சம் காட்டுகிறது.
  • இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுடைய சாட்ட்சிக்குச் சமமானது என்று பாரபட்சம் காட்டுகிறது.
  • கணவன் இறந்து விட்டால் இத்தா என்ற பெயரில் குற்ப்பிட்ட காலம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைப்பது
  •  பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறி பெண்களின் அரசியல் அதிகாரத்தைலப் பறிக்கிறது.
  • முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில்லை
  •  முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதில்லை.
  •  என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் பெண்கள் தொடர்பாக எடுத்து வைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள்அனைத்துக்கும் முழுமையாகவும்எந்த எதிர்க் கேள்வியும் கேட்க முடியாத வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.
முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்
முஸ்லிமாலாதவரக்ளுக்கு அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூல்

 

அறிமுகம்

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதாஎன்ற இந்த நூலில் பெண்கள் குறித்து எழுப்பப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இது தவிர நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மட்டும் மற்றவர்களை விட அதிகமான பெண்களை மணந்தது ஏன் என்ற கேள்வியும் பலரால் எழுப்பப்படுகிறது. இதற்கான விளக்கத்தை 'நபிகள் நாயகம்(ஸல்) பல திருமணங்கள் செய்தது ஏன்?'என்ற தலைப்பில் தனி நூலாக வெளியிட்டுள்ளோம்.

ஜிஸ்யாமுஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராகப் போர் செய்தல்கஃபாவை வணங்குதல்திசையை வணங்குதல்சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் போன்ற மற்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் விடையாக 'குற்றச்சாட்டுக்களும் பதில்களும்என்ற தலைப்பில் தனி நூலை வெளியிட்டுள்ளோம்.

தத்துவ ரீதியாக இஸ்லாம் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையாக 'அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்எனும் நூலில் விளக்கம் அளித்துள்ளோம். இந்த நான்கு நூல்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் பெறலாம்.

பதிப்புரை 
நல்லவை எங்கே கிடைத்தாலும் அதைத் தேடிப் பெற்றுக் கொள்பவர்களாகவே பெரும்பாலான மனிதர்கள் உள்ளனர்.
குறிப்பாக ஆன்மீகத்தின் பால் மனிதர்களின் தேடுதல் மிகவும் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு தேடியலையும் மக்களுக்கு நல்ல ஆன்மீக வழி தென்படுமானால் தயக்கமில்லாமல் அவ்வழியில் செல்ல அவர்கள் தயாராகவே உள்ளனர்.
அமைதியைத் தேடியலையும் மக்களின் பார்வையில் இஸ்லாம் சிறந்த வாழ்க்கை நெறியாகத் தென்படுகிறது. அதன் கொள்கைகள் அறிவுப்பூர்வமாக உள்ளன. அதன் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்திட எளிதாக உள்ளன.
இதன் காரணமாக அவர்களை இஸ்லாம் ஈர்த்தாலும் இஸ்லாத்தின் சில கொள்கைகளும்கோட்பாடுகளும் தவறானவை;காலத்துக்கு ஒவ்வாதவை என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை உரிய விதத்தில் தெளிவுபடுத்தினால் அவர்களை இஸ்லாம் முழுமையாக ஈர்க்கும்.
முஸ்லிமல்லாத மக்களின் இந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் தமிழில் தகுதியான நூல் இல்லை என்ற குறையை நீக்கும் வகையில் இந்த நூலை வெளியிடுவதில் மனநிறைவு அடைகிறோம்.
இஸ்லாத்தில் பெண்கள் நிலை குறித்துத் தான் அவர்களுக்கு அதிகப்படியான சந்தேகங்கள் உள்ளன.
அந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் 'இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?' என்ற இந்த நூல் ஏழாவது பதிப்பாக உங்கள் கைகளில் தவழ்கிறது.
முந்தைய பதிப்புகளை விட மேலதிகமான விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தேவையான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.
முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்களை நீக்க இந்த நூல் பயன்பட வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.
இவன்,நபீலா பதிப்பகம்

 

முன்னுரை

இன்றைய உலகில் பல்வேறு மதங்கள் மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். எல்லா மதங்களும்மதவாதிகளும் தங்கள் மதமே சிறந்ததுஎன்று அறிவித்துக் கொள்கின்றனர். தங்கள் மதத்தைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.
எனினும் மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகையில் சிறந்து விளங்குவதை சிந்தனையாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லித் தரும் மதமாக இல்லாமல் மனித வாழ்வின் எல்லாப்பிரச்சனைகளையும் கவனிக்கிறது!
அதில் தலையிடுகிறது!
தக்க தீர்வையும் சொல்கிறது!
அன்றிலிருந்து இன்று வரை மனிதக் கரங்களால் மாசு படுத்த முடியாத மகத்தான வேதத்தை இஸ்லாம் மட்டுமே வைத்திருக்கிறது!
என்றெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி நற்சான்று வழங்குபவர்கள் இஸ்லாத்தின் ஒரு சில சட்டங்களைப் பற்றி அதிருப்தி அடைகிறார்கள்.
இத்தகையவர்களின் ஐயங்களைத் தர்க்க ரீதியாகவும்அவர்களின் அறிவு ஏற்றுக் கொள்ளும் வகையிலும் நீக்குகின்ற கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
ஏனெனில் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கமன்று. முழு உலகுக்கும் அருளப்பட்ட மார்க்கமாகும்.
எனவேஇஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானது எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் விடையளிக்கும் வகையில் இந்நூலைத் தயாரித்துள்ளேன்.
ஏனைய குற்றச் சாட்டுக்களுக்கான விளக்கங்கள் மற்ற இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
பெண்கள் குறித்து இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் இந்த பாகத்தை வாசிப்பவர்கள் விடை காணலாம்.
மூன்று பாகங்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் உரிய விளக்கத்தைப் பெறலாம்.
முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்கள் விலக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே இந்நூலை எழுதியுள்ளேன். அந்த நோக்கம் நிறைவேற வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
P.ஜைனுல் ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)




நபிவழி தொழுகை
நபி வழி தொழுகை வீடியோ
  • தொழுகை மற்றும் உளு செய்யும் முறை
  • செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ்
  • வீடியோ - TNTJ

வட்டி பற்றிய குர்ஆனிய எச்சரிக்கைகள். (Video)



வியாழன், நவம்பர் 17

உழு இல்லாமல் குர்ஆனைத் தொடலாமா?


பதில் : உழு இல்லாமலும், மாதவிடாய் காலத்திலும் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற சிலர் வாதிடுகிறார்கள் அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தின் உண்மைத் தன்மையை நாம் ஆய்வு செய்தால் அவர்களின் வாதம் தவறானது என்பதையும், உழு இல்லாமலும், மாதவிடாய் நேரத்திலும் திருமறைக் குர்ஆனைத் தொடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

குர்ஆனைத் தூய்மையின்றித் தொடக்கூடாது என்று வாதிடுபவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்குறிய பதில்களைப் பார்ப்போம்.

தூய்மையில்லாதவர்கள் திருமறைக் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிடுபவர்கள் உமர் (ரலி) அவர்கள் தொடர்பான ஒரு தகவலை ஆதாரமாக் காட்டுகிறார்கள்.

முதல் வாதமும், பதிலும்.
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரியிடம் குர்ஆனின் வசனங்கள் எழுதப்பட்ட ஏட்டைக் கேட்ட நேரத்தில் அவருடைய சகோதரி அவர்களை நோக்கி, "நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது'' என்று கூறினார்கள்.

(முஸ்னத் பஸ்ஸார் – 279)
முதலாவது இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது ஏன் என்றால் மேற்கண்ட செய்தி நபியவர்கள் கூறியதாகவோ, அல்லது நபியவர்களின் நடைமுறையாகவோ அறிவிக்கப்படவில்லை. மாறாக உமர் (ரலி) அவர்களின் சகோதரியின் கூற்றாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இதனை ஆதாரமாகக் ஏற்றுக் கொள்ள முடியாது.

இரண்டாவது விஷயம் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெரும் உஸாமத் பின் ஸைத் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் ஹைஸமீ குறிப்பிடுகின்றார். (மஜ்மவுஸ் ஸவாயித்)

பைஹகியில் இதே ஹதீஸ் இடம் பெற்றுள்ளது அதில் இடம் பெரும் காஸிம் பின் உஸ்மான் அல்பஸரி என்பவர் பலவீனமானவர் என்றும் இவருடைய ஹதீஸ்கள் பின்பற்ற ஏற்றமானது அல்ல என்றும் ஹதீஸ் கலை மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (லிஸானுல் மீஸான்)

இரண்டாவது வாதமும், பதிலும்.

அடுத்ததாக திருமறைக் குர்ஆனின் 56வது அத்தியாயத்தின் 79வது வசனத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். (அல்குர்ஆன் - 56 : 79)
இந்த வசனத்தைத் தான் வலுவான ஆதாரமாக இவர்கள் காட்டுகிறார்கள் இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது குர்ஆனை உலு இல்லாதவர்களும் மாதவிடாய் பெண்களும் திருமறைக் குர்ஆனைத் தொடக்கூடாது என்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தினாலும், இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களையும், இது போல் அமைந்த மற்ற வசனங்களையும் நாம் ஆராய்கின்ற நேரத்தில் இவர்களின் வாதம் தவறானது என்பதை தெளிவாக அறியக் கிடைக்கிறது.

மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்றுள்ள தூய்மையானவர்கள் யார் என்பதையும், அதைத் தொடமாட்டார்கள் என்பது எதைப்பற்றியது என்பதையும் முதலில் அறிந்து கொள்வோம்.

முதலாவது விஷயம் நபியவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருமறைக் குர்ஆன் புத்தக வடிவில் அவர்களுக்கு இறக்கப்படவில்லை. மாறாக ஒலி வடிவில்தான் இறக்கப்பட்டது. திருமறைக் குர்ஆன் இறங்கும் போது நபி (ஸல்) அவர்கள் அதனை மனப்பாடம் செய்து கொள்வார்கள்.

ஒலி வடிவில் திருமறைக் குர்ஆன் இறக்கப்பட்டிருக்கும் போது அதனைத் தொடுதல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லாமல் போகிறது. புத்தக வடிவில் அல்லது தொடும் விதத்தில் அல்லாஹ் திருக்குர்ஆனை இறக்கியிருந்தால் மட்டுமே தொடுதல் என்ற ஆய்வுக்கு இங்கு தேவை ஏற்படும்.

ஆக தொடுதல் என்ற வாதம் நமது கையில் உள்ள குர்ஆனைப் பற்றியதல்ல என்பதை இதன் மூலம் நாம் விளங்க முடியும். இதற்கு முந்தைய வசனத்தை கவணிக்கும் போது இதனை நாம் தெளிவாக விளங்களாம்.
இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

(அல்குர்ஆன் - 56 : 77. 79)
56 : 79 வசனத்திற்கு முன்புள்ள இரண்டு வசனங்களையும் பார்க்கும் போது ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள் என்று கூறுகிறான்.

இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. மாறாக பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெரியவருகிறது.

இதற்கு ஆதாரமாக மேலும் சில திருமறை வசனங்கள் அமைந்திருக்கின்றன.
அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது. (அல்குர்ஆன் - 80 : 11-16)
இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப்பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56 : 79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56 : 79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

தூய்மையானவர்கள் என்று 56 : 79 வசனத்தில் கூறப்பட்டவர்கள் வானவர்கள் தாம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.

இறை நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றனர் என எண்ணிணார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான்.
இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர். (அல்குர்ஆன் - 26 : 210 212)
இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று திருக்குர்ஆன் தூய்மையானவர்களான மலக்குமார்களின் கையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஷைத்தான்களால் இதைத் தொடமுடியாது என்ற பொருளில் தான் 56 : 79 வது வசனமும் அமைந்துள்ளது.

தொட மாட்டார்கள் என்பதற்கும் தொடக் கூடாது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம்.

தொடக் கூடாது என்றால் அது கட்டளையிடுகிறது என்பது பொருள்.

தொட மாட்டார்கள் என்றால் அது ஒரு செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறது என்று பொருள்.

மேற்கண்ட வசனத்தில் தொடக் கூடாது எனக் கூறப்படவில்லை. மாறாக தொட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. உளூ இல்லாதவர்களும், மாதவிடாய்ப் பெண்களும் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் இக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று தொடுவதற்கு தடைபோடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான்.

ஆனால் மற்றவர்கள் இதைத் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை மலக்குமார்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே தருகிறது.

மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது 56 : 79 வது வசனத்தில் சொல்லப்பட்டதூய்மையானவர்கள் என்பது வானவர்கள் என்பதும், அதை என்று கூறப்பட்டுள்ளது வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும், ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

காபிர்களுக்கே நபியவர்கள் திருமறை வசனத்தை எழுதி அனுப்பியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க! இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.
"வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 7, 2941
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள். தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

ஆகவே திருமறைக் குர்ஆனை உழு இல்லாதவர்களும், மாதவிடாப் பெண்களும் தொடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.