-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளி, டிசம்பர் 30

சொந்த ஊரில் மண்ணைக் கவ்விய ஹசாரே!


ஊழலை ஒழிக்க இதோ காந்தியவாதி களம் இறங்கிவிட்டார் என சங்க்பரிவாரதினரால் திட்டமிட்டே களமிறக்கப்பட்டு கமெடி பீசாகிபோன அண்ணா ஹசாரேவின் அட்டகாசங்கள் இன்று கட்டுக்கடங்காமல் போய்விட்டன இவரையும் மதித்து இவருக்கு அடிபணியும் நிலையை காங்கிரஸ் கையாண்டு வருவதுதான் அவலத்திலும் அவலமாக இருக்கிறது 

என்னதான் லோக்பாலில் திருத்தம் செய்தாலும் அதில் கொஞ்சம்கூட திருப்தி அடையாமல் ஏதாவது ஒரு குடைச்சலை கொடுத்து காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதன் மூலம் பிஜேபியை இருத்தி தமது எஜமான விசுவாசத்தை நிரூபிக்க துடியாய் துடிக்கிறார் அண்ணா ஹசாரே!
நீண்ட செயல்திட்டத்தை நிறைவேற்றுவதர்க்காக பின் பக்கமிருந்து ஹசாரவை இயக்கிக்கொண்டிருக்கும் சங்க்பரிவார கூட்டம் இதற்காக பல கோடிகளை கொட்டிக் கொடுத்துக்காத்திருக்கிறது யாரென்று அறியப்படாத அண்ணா ஹசாரவை இன்றைக்கு காந்தியவாதி என சங்க பரிவார பத்திரிகைகள் லாவணி பாடுகின்றன ஆனால் இவைகள் என்னதான் துதி பாடினாலும் மக்களை யாராலும் முட்டாளாக்கிவிட முடியவில்லை.

வந்து போகும் வருடங்கள்!!!



கால சக்கரத்தை சூழலச் செய்யும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்:

இரவையும் பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவில் சான்றை ஒளியிளக்க செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம்.  [அல்குர்ஆன் 17:12]

வியாழன், டிசம்பர் 29

பொதுத் தேர்வுக்கான பயிற்சி!



12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப் பட்டு விட்டன (மார்ச் 8). இன்றைய சமுக சூழல் ஒரு மாணவனின் அறிவாற்றலை அவன் பெறும் மதிப்பெண்களை கொண்டு தீர்மானிக்கிறது. ஒவ்வொரு மதிப்பெண்ணும் ஒரு மாணவனின் ஒட்டு மொத்த வாழ்க்கை சூழலையும் இல்லை என்றால் குறைந்தபட்சம் பல ஆண்டுகளுக்காவது தீர்மானிக்க கூடியதாக உள்ளது.  பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் அந்த மாணவன் தன் கல்விக்காக வருங்காலங்களில் செலவிட போகும் பணத்தை அவன் தந்தையோ தாயோ படப்போகும் சிரமத்தைத் தீர்மானிக்கிறது.
இச்சூழ்நிலையில் மாணவர்கள் கல்வியின் ஆற்றலை உணர வேண்டும். மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதிக மதிப்பெண்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். என்ன படித்தாலும் மதிப்பெண் வரவில்லை எனும்; குரலை பல இடங்களில் கேட்டிருப்போம். படிப்பது ஒரு முறை என்றால் அதைப் பரிட்சையில் வெளிப்படுத்துவது மற்றொரு முறை.

திங்கள், டிசம்பர் 26

ஸலவாத்துன் னாரிய்யா எனும் நரகத்து ஸலவாத்து !


-அப்துல் நாசர், இஸ்லாமிய கல்லூரி, மேலப்பாளையம்.  
ஸலவாத்துன் னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒன்றாகும். னாரிய்யா என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்வித சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள்தான். இதனை 4444 தடவை ஓதினால் செல்வம் பெருகும் நோய் நீங்கும் என்ற நம்பிக்கையில் இஸ்லாமிய(?) பெருமக்கள் தங்கள் வீடுகளில் லெப்பை மார்களை அழைத்து மிக விமரிசையாக ஓதி வருகின்றனர்.

இந்த நரகத்து ஸலவாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ அல்லது நான்கு இமாம்களில் யாருமோ ஓதியதில்லை. மாறாக இது பிற்காலத்தில் மார்கத்தை விற்று பிழைப்பு நடத்தக்கூடிய சில முல்லாக்களால் வயிற்றுப் பிழைப்புக்காக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். இதன் காரணமாகத்தான் 4444 தடவை ஓத வேண்டும் என்று சாதாரணமாக யாரும் எண்ண இயலாத எண்ணிக்கையை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த 4444 தடவை என்பது அல்லாஹ்வோ அவன் தூதரோ கூறியதில்லை.

இறைவனின் வல்லமையை உணர்த்தி நிற்கும் சுனாமி (tsunami) யின் நிகழ்வுகள்.


பாத்திமா ஷஹானா (கொழும்பு)

(அதில்) அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.  (அல்குர்ஆன் 13:39)

சுனாமி (tsunami) …… ஏழு வருடங்களுக்கு முன் இந்தப் பெயர் நம் நாட்டு மக்களைப் பொருத்த வரை பிரபல்யம் இல்லாத அந்நியமான ஒரு பெயராகவே இருந்தது. ஆனால் இன்று இப் பெயரை கேட்ட மாத்திரத்தில் எல்லோர் மனதிலும் பேரலைகள் அடிக்கத் தொடங்கும். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பெயர் பிரபல்யம் வாய்ந்துள்ளது. 

டிசெம்பர் 26, 2004 ம் நாள் உலகிலுள்ள அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு நாள். ஆயிரக் கணக்கிலான உயிர் சேதங்களையும், பல மில்லியன் கணக்கிலான பொருட் சேதங்களையும் ஏற்படுத்திய கொடுரமான நாள். இவ் இயற்கை அனர்த்தங்கள் மூலம் அல்லாஹ் அவனது வல்லமையை நம் கண் முன்;பாக தெளிவாகக் காட்டினான்.  

இதிலுள்ள இன்னுமொரு வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சுனாமியின்போது நடுக்கடல் எந்ந வித கொந்தளிப்பும் இல்லாமல் சாதாரணமாகவே இருக்கும். ஆனால், கரையோரத்தை அண்டிய கடற்பிரதேசமே கொந்தளித்து கரையோரத்தைத் தாண்டி பல கிலோ மீற்றர்கள் ஊடுருவி நிலப் பிரதேசத்தை நோக்கி வரக்கூடியதாக உள்ளது. இதற்கு முன் கடல் உள் வாங்கவும் செய்கின்றது. இதை அல்லாஹ்வின் வல்லமை என்றில்லாமல் என்ன சொல்வது? 

அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டிய அளவுக்கு கண்ணியப்படுத்தவில்லை. அல்லாஹ் வலிமை மிக்கவன். மிகைத்தவன்.  (அல்குர்ஆன் 22:74)

மேலும், அல்லாஹ் அவனது வல்லமையை பிர்அவ்னுக்கு அவன் ஏற்படுத்திய அழிவை குர்ஆனில் குறிப்பிடுவதன் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகின்றான்.

ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் எற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமைமிக்கவன். கடுமையாகத் தண்டிப்பவன்.  (அல்குர்ஆன் 8:52)

உலகில் தீமை அதிகரிக்கும்போது அல்லாஹ் இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் வணக்கத்திற்குரியவன் ஒருவன் இருக்கின்றான்;;. அவனுக்கு கட்டுப்பட்டு அனைவரும் வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்துகின்றான். ஆனால், பெரும்பாலான மக்களின் கருத்து தீயவர்களை அழிக்கவே அல்லாஹ் இத்தகைய இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றான் என்பது. எனவே, இவ்வாறான அனர்த்தங்களில் அழிபவர்கள் தீயவர்களே என வாதிடுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். பின்வரும் ஹதீஸில் இருந்து இது தெளிவாக நமக்குப் புரியும்.

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து முகம் சிவந்த நிலையில் (பின்வருமாறு) கூறியபடியே எழுந்தார்கள்: வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபுகளுக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவிற்குத் திறக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் ("இந்த அளவிற்கு' என்று கூறியபோது, தமது கை விரல்களால் அரபி எண் வடிவில்) 90 அல்லது 100 என்று மடித்துக் காட்டினார்கள்.-

அப்போது "நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?'' என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம். தீமை பெருத்துவிட்டால்'' (அழிவு ஏற்படும்) என்று பதிலளித்தார்கள். (புஹாரி 7059)

எனவே, இயற்கை அனர்த்தங்கள் நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கும் சேர்த்தே சோதனையாக அமையும். நபியவர்கள் காலத்திலேயே குழப்பங்களை அல்லாஹ் இறக்கி வைக்கக்கூடியவனாக இருந்தான். பின்வரும் ஹதீஸில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியர்களையும் எழும்பி தொழுமாறு ஏவுகின்றார்கள். எனவே அல்லாஹ் ஏற்படுத்தும் சோதனையிலிருந்து நல்லவர், தீயவர் அனைவருமே தம்மைக் காப்பாற்றிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றனர். 

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.  ஒரு(நாள்) இரவில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (திடீரென) பதற்றத்துடன் விழித்தெழுந்து 'அல்லாஹ் தூயவன்! (இன்றிரவு) அல்லாஹ் இறக்கிவைத்த கருவூலங்கள் தாம் என்ன! (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட குழப்பங்கள் தாம் என்ன! - தம் துணைவியரை மனத்தில் கொண்டு - இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பி விடுகிறவர் யார்? அவர்கள் (அல்லாஹ்வைத்) தொழட்டும்! ஏனெனில் இவ்வுலகில் உடையணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள்' என்று கூறினார்கள்.  (புஹாரி 7069)

தீயவர்களுக்கு மட்டும் அல்லாஹ் அழிவை ஏற்படுத்துவதென்றால் அது மறுமை ஏற்படும் நாளாகத் தான் இருக்க வேண்டும். 

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், "கொலைகள் மலிந்த காலம் வரும் என்று மேற்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய காலத்தை நீங்கள் அறிவீர்கள்'' என்றேன். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (கூடுதலாகப் பின்வருமாறு) சொன்னார்கள்: யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமைநாள் வந்தடைகிறதோ அவர்கள்தாம் மக்களிலேயே தீயோர் ஆவர் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் (புஹாரி 7067)

அல்லாஹ் இவ்வுலக வாழ்க்கையை சோதனைக் களமாகவே அமைத்துள்ளான். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின் றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.   (புஹாரி 5645)

நம் செயல்களின் மூலமே அல்லாஹ் நாம் சுவர்க்கத்திற்குரியவர்களா? அல்லது நரகத்திற்குரியவர்களா? என்பதைத் தீர்மானிப்பான். 

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.   (அல்குர்ஆன் 57:23)

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

நாம் சோதனைகள் வரும்போது பொறுமையாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து நம் அத்தனை க~;டங்கள், கவலைகள், துயரங்கள் என்பவற்றை அல்லாஹ்விடமே முறையிட வேண்டும். அல்லாஹ்வே நம்மை பொறுப்பேற்றுக் கொள்ளப் போதுமானவன் என்ற முழு நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் இறைஞ்சி பிரார்த்திக்க வேண்டும். 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்'' என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத் (ஸல்) அவர்கள்இ "நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணிதிரண்டுள்ளனர்; எனவேஇ அவர்களுக்கு அஞ்சுங்கள்'' என மக்கள் (சிலர்) கூறியபோது சொன்னார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிக மாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போது மானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி 4563)

இஸ்லாத்தைப் பொருத்த வரை இறந்தவர்களுக்காக துக்கம் அனுஷ்டிப்பது மூன்று நாட்களுக்காகும். ஆனால், இன்று சுனாமி தினத்தை வருடந்தோறும் துக்க தினமாக முஸ்லிம்கள் உட்பட அனைவரும் அனுஷ்டிப்பது கேலிக்குரிய நிகழ்வாக உள்ளது. 

உம்மு அத்திய்யா நுஸைபா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறந்து விட்டவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடைவிதிக்கப்பட்டோம். ஆனால் (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்கüல்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோஇ நறுமணம் பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணிவதோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்ட (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்துகொள்ளலாம்.) (புகாரி 313)

எனவே, இயற்கை அனர்த்தங்கள் உட்டபட்ட அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படும் அனைத்து சோதனைகளுக்கும் பொறுமையை மேற் கொண்டு அவனிடமே பிரார்த்திக்க வேண்டும். இச் சோதனைகளை அல்லாஹ் தீயவர்களுக்கு மட்டும் தான் ஏற்படுத்துவான் என்ற தவறான எண்ணத்தை மனதிலிருந்து அகற்றி அந்நாளை ஒவ்வொரு வருடமும் துக்க தினமாக அனுஷ்டிப்பதை விட்டொழித்து அல்லாஹ்வின் தூய மார்க்கத்தில் நிலைத்திருப்போமாக!

சனி, டிசம்பர் 24

முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்! ஏன்? ஏதற்கு!!

கண்ணியமும் மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்த தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன். (அல்குர்ஆன் 3:1-20)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி)

ஸஃபர் மாதமும்! நாமும்!!



மறைவான ஞானங்களை தெளிவாகத் தெரிந்திருக்கும் மகத்தான ஆற்றலாளனாகிய அல்லாஹ் தன் அரும்மறையில் கூறுகின்றான்...

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.(அல்குர்ஆன் 6:59)

இறையருளால் இஸ்லாமிய ஆண்டுக்கணக்கில் இரண்டாவது மாதமான ஸஃபர் மாதத்தை நாமெல்லாம் இன்ஷாஅல்லாஹ் அடைய இருக்கிறோம். இம்மாதத்தில் முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் இஸ்லாம் காட்டித்தராத, இஸ்லாத்திற்கு முரணான எண்ணங்கொள்வதும், அதற்கேற்ற காரியங்களைச் செய்வதுமாய் இருக்கின்றனர். அவைகளை மூடநம்பிக்கைகளாய் அவர்கள் கருதுவதுமில்லை. இதனால் இஸ்லாத்தை மற்ற மதங்களைப் போன்று ஒரு மதமாக ஆக்குவதோடு அது ஏக இறைவனால் மனிதர்களுக்கு அருளப்பட்ட தனித்துவமிக்க ஒரு வாழ்வியல் மார்க்கம் என்பதை முஸ்லிம்கள் உணரவும், உணர்த்தவும் தவறி விட்டனர். தவறி வருகின்றனர். இது தங்களுக்கும், பிற மக்களுக்கும் தலைசிறந்த சன்மார்க்கத்திற்கும் தாங்கள் செய்யும் அநீதி என்பதை ஏனோ உணர மறுக்கின்றனர்...


குறிப்பாக ஸஃபர் மாதத்தை பீடை மாதமாகக் கருதுவது, நல்ல நாள், கெட்ட நாள் பார்ப்பது, சகுனம் பார்ப்பது, பால்கிதாபு, பார்வை பார்த்தல் போன்ற பெயர்களில் எல்லாம் இஸ்லாம் முற்றிலும் தடுத்துள்ள காரியங்களை இஸ்லாத்தின் பெயராலேயே முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். 

இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள். 

சிலர் ஸஃபர் குளி என்ற பெயரில் ஆற்றில் போய் குளித்தும், இன்னும் சிலர் மாவிலைகளில் 'ஸலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம் என்ற அல்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்துக் குடிக்கின்றனர். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.

இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்குகாகக் கொழுக்கட்டைகளைச் செய்து அதைப் பீடைபிடித்தவரின்(?) தலையில் கொட்டுவார்கள். மேலும் ஸஃபர் மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. ஒடுக்கத்து புதன் என்ற ஒரு வார்த்தையை இந்நாளில் பயன்படுத்துகின்றனர். அதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை.

பீடை என்றால் என்ன? அதன் அளவுகோல் யாது? அப்படிப்பட்ட பீடை தங்களிடம் உள்ளதா என்பதையெல்லாம் அறியாமலேயே பீடை கழியட்டும்?!| என்ற நினைப்பிலேயே பலர் மேற்சொன்ன காரியங்களைச் செய்கின்றனர். அதுவே நாளடைவில் வழமையாக செய்யப்படும் ஒரு சடங்கு சம்பிரதாயமாக ஆகி விட்டது. இஸ்லாத்தில் இந்த காரியங்கள் உள்ளனவா? இறைவனிடம் இவற்றுக்கு அங்கீகாரம் கிடைக்குமா?! என்பதையெல்லாம் ஆய்வு செய்யாமலேயே மூடநம்பிக்கைகள் வணக்கங்களாக உருமாற்றப்படுகின்றன.

இது ஈமானுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து? இஸ்லாத்திற்கு எப்பேர்ப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்? எல்லாம் வல்ல அல்லாஹ்வின் முன் நஷ்டவாளிகளாய் போய் நிற்கும் அபாயம் நமக்கு ஏற்பட்டுவிடுமே என்ற எச்சரிக்கை உணர்வில் நாம் கவனமற்றவர்களாக இருக்கிறோம்.

வணக்கங்கள் அல்லவா இஸ்லாத்தின் உயிர்நாடி? அவை அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த வழிமுறையில் அல்லவா இருக்க வேண்டும்! அவற்றை அல்லாஹ்வுக்காக மட்டும் என்ற பரிபூரண நிய்யத்துடன் அல்லவா செய்ய வேண்டும்! ஸஃபர் மாதத்தில் நமது செயல்முறைகள் இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளனவா? எண்ணிப் பார்க்க வேண்டாமா இஸ்லாமிய சமுதாயமே!

இன்று ஸஃபர் மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும், ஸஃபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது. பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, நபி(ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில்தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)

ஸஃபர் மாதம் வந்துவிட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும் என்று நம்பி அதைப் பீடைமாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் பீடை என்பது இல்லை என்று கூறினார்கள்.

'தொற்றுநோயும், பறவைச் சகுனமும், ஸபர்பீடை என்பதும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புஹாரி 5707, 5717

எனவே இம்மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. 

கெட்ட நாள் உண்டா?

காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.
'தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். (அல்குர்ஆன் 54:19)

இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர். ஆனால் இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று வீசியாதாகவும், ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது (41:16)

ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள். மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப் பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.

உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர, நாட்களைப் பொருத்து அல்ல. எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.

இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை? என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.

உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவரும் தரித்திர(பஞ்ச) நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதற்கு சமமானதாகும்.

'ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன். என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  அபூஹூரைரா(ரலி), நூல்: புஹாரி 4826

எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.

மேலும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி(ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.

பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)

மாற்று மதக் கலாச்சாரம்!

இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களோ மாற்று மதங்களில் காணப்படும் காரியங்களை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றுகின்றனர். 

மாற்று மதங்களில் உள்ளவர்களோ இஸ்லாத்தை ஆய்வு செய்து இஸ்லாம் ஓர் பகுத்தறிவு மார்க்கம் என்று கூறுகின்றனர். இஸ்லாத்தை ஏற்றிருப்பதாக சொல்லும் முஸ்லிம்களோ எந்த ஆய்வுமின்றி பிறமதங்களில் காணப்படும் மூடநம்பிக்கைகளை இஸ்லாத்தின் பெயரால் செய்து இஸ்லாமும் மற்ற மதங்களைப் போன்ற ஒன்றுதான் என்று சொல்லாமல் சொல்கின்றனர். நவூதுபில்லாஹி மின்ஹா!

இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும், முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி(ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

'உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கள் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக - முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், வேறெவரை என்று பதிலளித்தார்கள் அறிவிப்பவர்: அபூசயீது அல் குத்ரீ(ரலி) நூல்: புஹாரி 3456

இதுபோன்று நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.

மாற்று மதத்தினர் தேர் இழுப்பதையும், விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப்பதையும், கந்தூரி கொண்டாடுவதையும் வழமையாக்கிக் கொண்டனர். இதுபோன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.

இதைப் பார்த்துதான் முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதி, அந்த மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத நடைமுறைகளை மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடித்து செய்து வருகின்றனர். இதுபோன்று மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி(ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றார்கள். இதற்கு நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டுவதாக அமைந்துள்ளது. 

'நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். தாத்துஅன்வாத் என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி(ஸல்) அவர்களிடத்தில், அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு தாத்து அன்வாத் என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள் என்று கூறினோம்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹ்! அல்லாஹூ அக்பர்! 

இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும். என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா(அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள். என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ வாக்கிதுல்லைசி(ரலி), நூல்: திர்மிதி

தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி(ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப்பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.

'செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.  அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), நூல்: நஸயீ 1560

எனவே அல்லாஹ்வும், அவனது தூதர்(ஸல்) அவர்களும் செய்திருக்கும் எச்சரிக்கைகளையும், அறிவுரைகளையும் கருத்தில் கொண்டு ஸஃபர் மாதம் உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்ட நாளாக, பீடை நாளாகக் கருதாமல், இஸ்லாத்திற்கு என்றிருக்கும் தூய வடிவத்தை மாற்றுமதக் கலாச்சாரத்தைக் கொண்டு களங்கப்படுத்தாமல் பின்பற்றி வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக! நிச்சயமாக அல்லாஹ் மகத்தான அருளாளன்!!

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களும், முஸ்லீம்களின் நிலையும்.


வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே! ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. ஆல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். (அல்குர்ஆன் 4:171)

கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களை கடவுளாகவும், கடவுளின் மகனாகவும், பரிசுத்த ஆவியாகவும் வணங்கி வருகிறார்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை ஈஸா (அலை) பிறந்த தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த கிறிஸ்மஸ் பண்டிகையின் வரலாறை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கூட தெரியாது இருக்கிறார்கள். 

மனித வாழ்வும், பெருந்தன்மையின் முக்கியத்துவமும்.(தொடர் - 03)


அன்பின் சகோதரர்களே! மனித வாழ்வும் பெருந்தன்மையின் முக்கியத்துவமும். என்ற இந்தத் தொடர் ஆக்கம் எனது நண்பர் சகோதரர் மனாஸ் அவர்களினால் எழுதப்படுகிறது. பெருந்தன்மை தொடர்பாக இஸ்லாம் சொல்லும் செய்திகள் என்ன? பெருந்தன்மையினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றிய செய்திகளையெல்லாம் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் கட்டுரையாளர் அழகாகத் தெளிவுபடுத்துகிறார். தொடர்ந்து படியுங்கள் உங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பதியுங்கள்.

                                                         அன்ஸாரிகளின் பெருந்தன்மை.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று என்றைக்கு அந்த மக்கள் அறிந்து ஏற்றுக் கொண்டார்களோ அன்றிலிருந்து ஆரம்பமானது உன்னத சத்திய சீலர்களின் வாழ்க்கையில் விட்டுக் கொடுப்பும் பெருந்தன்மையும்.

ஹஜ்ஜுடைய காலத்தில் ஹஜ் கிரிகையை நிறைவேற்றும் எண்ணத்துடன் மக்கா வந்து நபிகளாரை இரகசியமாக சந்தித்து அவர்களை மதினாவுக்கு வரும் படி அழைப்புக் கொடுத்து, நபிகளாரும் இவர்கள் ஆலோசனை ஏற்று மதீனா சென்ற போது இவர்களின் தியாகமும் பெருந்தன்மையும் மேலும் மேருகூட்டப்பட்டது.  

தங்களின் வாழ்க்கையை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அர்பணித்து உயிரூட்டிய சத்திய சீலர்கள் இன்று வரை இஸ்லாமிய வரலாற்றில் நினைவு கூறப்படுபவர்களாக இருக்கின்றனர். இன்று இந்த உலகில் அரசியல் தலைவர்களையும் மன்னர்களையும் கண்டு விட்ட மனிதகுலம் அவர்களின் பிறந்த நாளின் போதும் நினைவு நாளின் போதும் அவர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்ந்து விட்டு அன்றுடன் அவர்களின் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவார்கள். அவர்களை மீண்டு நினைவு கூற வேண்டுமென்றால் அடுத்து வரும் ஆண்டி அவர்களின் இறப்பை நினைவு கூறும் போதுதான் அவர்களைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால் இனிய இஸ்லாமிய மார்க்கத்திற்காக தங்களையே அர்பணித்து பெருந்தன்மையோடு வாழ்ந்த இவர்கள் இன்று வரையும் ஏன் இந்த உலகம் அழிக்கப்படும் நாள் வரையும் நினைவு கூறப்படுபவர்களாக இருக்கிறார்கள். 

இவர்களின் வாழ்க்கை இவர்கள் கடைப்பிடித்த நல்ல பழக்க வழக்கங்களையும் விட்டுக் கொடுப்பையும் பெருந்தன்மையையும் இன்று வரைக்கும் திருமறைக் குர்ஆன் நினைவு கூறுகிறது. 

வியாழன், டிசம்பர் 22

+2 மாணவர்களுக்கான QUESTION BANK!


தமிழ்நாட்டில் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவுவதற்ககாக கடந்த கால வினாத்தாள்களை கிழ்கண்ட தளத்தில் இருந்து இலவசமாக டவுன் லோடு பண்ணி உபயோகித்து கொள்ளலாம். 


இங்கு2006 முதல் கடந்த ஆண்டு வரை நடந்த தேர்விற்கான வினாக்கள் உள்ளது. தமிழ் மீடியம் மற்றும் ஆங்கில மீடிய மாணவர்களுக்குரிய எல்லா பாடப் பிரிவுகள்க்குமான வினாத்தாள்கள் இங்கு (http://www.tn.gov.in/dge/question_bank.htm) உள்ளது.

இந்த பதிவு மாணவர்களுக்கு உதவும் என்ற நோக்கில் வெளியிடப்படுகிறது.இதனை (http://www.tn.gov.in/dge/question_bank.htm) பார்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் நண்பர் மற்றும் உறவினர் குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்தி தேர்வில் நல்ல முறையில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன். நன்றி

12th Question bank (http://www.tn.gov.in/dge/question_bank.htmஇது Government of Tamil Nadu Directorate of Government Examination அவர்களால் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

Directorate ofGovernment Examination Tamilnadu Official website (http://www.tn.gov.in/dge/)

ஆறாம் வகுப்பு வரை இனி ஒரு புத்தகம் மட்டுமே!


சென்னை, டிச.19: மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் விதமாக வரும் கல்வியாண்டில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்லும் வகையில் புத்தகங்கள் பிரித்து அச்சடிக்கப்பட உள்ளன.



முப்பருவ முறையின்படி, 7, 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு பருவத்துக்கு இனி 2 புத்தகங்களை மட்டுமே எடுத்துச் செல்லும் வகையில் பிரிக்கப்பட்டு அச்சடிக்கப்பட உள்ளன. பிற வகுப்பு மாணவர்களுக்கு இப்போதுள்ளது போல் 5 முதல் 6 புத்தகங்கள் வரை வழக்கமான முறையில் அச்சடிக்கப்பட உள்ளன.

திங்கள், டிசம்பர் 19

மனித வாழ்வும், பெருந்தன்மையின் முக்கியத்துவமும்.(தொடர் - 02)


அன்பின் சகோதரர்களே! மனித வாழ்வும் பெருந்தன்மையின் முக்கியத்துவமும். என்ற இந்தத் தொடர் ஆக்கம் எனது நண்பர் சகோதரர் மனாஸ் அவர்களினால் எழுதப்படுகிறது. பெருந்தன்மை தொடர்பாக இஸ்லாம் சொல்லும் செய்திகள் என்ன? பெருந்தன்மையினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றிய செய்திகளையெல்லாம் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் கட்டுரையாளர் அழகாகத் தெளிவுபடுத்துகிறார். தொடர்ந்து படியுங்கள் உங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பதியுங்கள்.

இறைத்தூதர்களின் பெருந்தன்மை.

ஈஸா (அலை) அவர்களின் பெருந்தன்மை.

ஈஸா (அலை) அவர்களுக்கு அவர்களின் சமுதாயத்தவர்கள் அவர்களைக் கொலை செய்வதற்கு எண்ணினார்கள். அதுமாத்திரமல்லாமல் அவர்களுக்கு பல கொடுமைகளையும் செய்து, அவர்களை அல்லாஹ்வின் இடத்துக்கு கொண்டு சென்று, அவர்கள் மீது இட்டுக்கட்டி, அவருடைய தாயாரை விபச்சாரி என்று பட்டம் சூட்டியும் கூட அவர்கள் அந்த மக்களை மன்னித்து பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்கள் அவர்கள் அந்த மக்களுக்காக அல்லாஹ்விடம் மன்னித்து விடுமாறு வேண்டினார்கள். இதை அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் பின்வருமாறு கூறிக்காட்டுகிறான். 

மனித வாழ்வும், பெருந்தன்மையின் முக்கியத்துவமும்.(தொடர் - 01)


அன்பின் சகோதரர்களே! மனித வாழ்வும் பெருந்தன்மையின் முக்கியத்துவமும். என்ற இந்தத் தொடர் ஆக்கம் எனது நண்பர் சகோதரர் மனாஸ் அவர்களினால் எழுதப்படுகிறது. பெருந்தன்மை தொடர்பாக இஸ்லாம் சொல்லும் செய்திகள் என்ன? பெருந்தன்மையினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றிய செய்திகளையெல்லாம் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் கட்டுரையாளர் அழகாகத் தெளிவுபடுத்துகிறார். தொடர்ந்து படியுங்கள் உங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பதியுங்கள்.

இந்த உலகத்தில் மனித சமுதாயம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அவர்களிடத்தில் எப்படிப்பட்ட உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று திருமறைக் குர்ஆனின் மூலமாகவும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மூலமாகவும் அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்துள்ளான். இந்த உலகத்தில் மனிதர்களின் குணங்களையும், அவர்களின் பொருளாதாரத்தையும் மற்ற செயல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எல்லா மனிதர்களும் சமநிலையில் உள்ளனர் என்று யாராலும் சொல்ல முடியாது. அவர்களுக்கு மத்தியில் பல விதமான குணங்களையும் பண்புகளையும் கொண்டவர்களாக காணப்படுவதை நாம் இன்று காணக்கூடியதாக உள்ளது. இதுதான் அல்லாஹ்வின் நியதியாக உள்ளது.

வட்டி பற்றிய சில தெளிவுகள் - பாகம் 02 (Video)


“அமானா” இஸ்லாமிய வங்கியா?, “அமானா” வில் பணத்தை சேமிக்களாமா?, “அமானா” வங்கியில் வாகனங்களை கடனுக்கு வாங்களாமா?

இது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய வீடியோ உரை.

வியாழன், டிசம்பர் 15

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை

 
மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

அராஜகம் செய்யாதீர்கள்!

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.
(ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

அநீதம் அழிப்பீர்!

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [1]

உரிமைகளை மீறாதீர்!

மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

பெண்களை மதிப்பீர்!

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!
(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.
(ஸஹீஹ்ல் புகாரி 4402)

சொர்க்கம் செல்ல வழி!

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.
(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.
(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இறுதி இறை வசனம்.

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

""இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)
ஸஹீஹ்ல புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)