-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வியாழன், மே 17

அல்லாஹ்வை நினைவு கூறுவோம்!

கண்ணியமிக்க வல்ல நாயன் தன் திருமறையில் கூறுகிறான்: 

நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன்: 13:28) இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஒருவர் மற்றவரை நினைக்கின்றனர். எதையாவது நினைக்காத உள்ளங்கள் இல்லை எனலாம். தன்னை நேசிப்பவர் களையோ தனக்கு விருப்பத்திற்குரிவர்களையோ குடும்பத்தினரையோ தொழில் முன்னேற்றம் அடைவதை பற்றியோ எதிர்காலத்தை பற்றியோ தன்னை விட்டு கடந்து போன தனக்கு வரவிருக்கின்ற இன்ப துன்பங்களைப் பற்றியோ அவர்களுடைய நினைவலைகள் நீண்டு கொண்டே செல்கின்றது...

இச்சிந்தனை போக்குகள் அவனுடைய நிம்மதி, தூக்கம், உணவு போன்ற அன்றாடம் அவன் செய்யக்கூடிய அனைத்து காரியங்களையும் நிறுத்தி விடுகின்றது. இச்சிந்தனை போக்குகளின் தாக்கம் சில நேரங்களில் தவறான முடிவுகளின் பக்கமும் தற்கொலைகளின் பக்கமும் கொண்டு செல்கின்றது.  நம்முடைய செயல்பாடுகள் அனைத்தையும் சரியான முறையில் கொண்டு செல்லக்கூடிய ஒரு சிந்தனை போக்கு இறைநினைவு மட்டுமே!
அல்லாஹ் கூறுகிறான்: 

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள். அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன்: 62:10)

நம்பிக்கைக் கொண்டோரே! (களத்தில்) ஓர் அணியைச் சந்தித்தால் உறுதியாக நில்லுங்கள். அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள். நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன்: 8 : 45)

உங்களை எச்சரிப்பதற்காக உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவது ஆச்சரியமாக உள்ளதா? நூஹூவுடைய சமுதாயத்திற்குப் பின் உங்களை வழித்தோன்றல்களாக அவன் ஆக்கியதையும் உடலமைப்பில் உங்களுக்கு வலிமை அதிகப்படுத்தியதையும் எண்ணிப் பாருங்கள். நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! (என்றும் அவர் கூறினார்) (அல் குர்ஆன்: 7 : 69).

மன நிம்மதி தரும் மாமருந்து:

அனைத்து மனிதர்களுமே நிம்மதியையும் ஆறுதலையும் தேடியே அலைகின்றனர். விருப்பத்திற்குரிய எத்தனையோ நபர்கள் இவ்வுலகில் இருந்தாலும் அவர்களை நினைக்கும்போது நிம்மதி கிடைப்பதில்லை. 

இன்னும் உற்று நோக்குவோமேயானால் இவ்வாறு நினைக்கும் போது இருக்கின்ற நிம்மதியும் தொலைந்து போவதை உணர்கின்றோம். பொருளாதாரத்தாலோ உடலாலோ பிறர் பேசக்கூடிய பேச்சுக்களினாலோ மனிதனின் மனம் காயப்படுத்தப்படுகின்றது. 

இச்சூழ்நிலையில் ஒருவன் இறைவனையும் இறைவனின் வார்த்தைகளையும் நினைவு கூர்ந்தால் மனிதனுக்கு அவன் நினைத்தது யாவும் கிடைக்காது என்றும் இறைவனின் விருப்பத் திற்குரியவர்கள் சோதிக்கப்படுவார்கள் என்றும் இறைவன் தூதர்களாக தெர்ந்தெடுத்த நபிமார்களுக்கே பெரும் பெரும் சோதனைகள் வந்தது என்றும் நமக்கு ஏற்பட்ட துன்பம் இறைவன் புறத்திலிருந்து வந்தது ஆகையால பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹ்வை நினைவு கூறுவோம்!

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப நான் நடந்துக் கொள்வேன். அவன் என்னை நினைவு கூறும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூறுவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களை விடச் சிறந்த ஒர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூர்வேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதும் விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன். ( அபூஹூரைரா(ரலி) புகாரி 7405)

இறைவனை வணங்குவதற்கு காரணமும் இறைச்சிந்தனையே!

சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரை நினைப்பதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் இறைவன் ஒரே இறைவனே! அவனுக்கு கட்டுப்படுங்கள்! பணிந்தோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன்: 22: 34)

இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகளை சரியாக கடை பிடிப்பவர்களை உற்று நோக்கினால் அவர்களிடத்தில் இறைச்சிந்தனை அதிகமாக இருப்பதை காண்கிறோம்.

அல்லாஹ் கூறுகின்றான்: 

(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் தனது பெயர் நினைக்கப்படவும் (தான்) அல்லாஹ் கட்டளை யிட்டுள்ளான். அதில் காலையிலும் மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும் ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும் உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன்: 24 : 36-37)

இறைநினைவை தடுக்கும் பொருளாதாரம்!

இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இறைவன் கட்டளையிட்ட வணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற காரியங்களை செய்வதில்லை. இதற்கு காரணம் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை அவர்களின் கவனம் பொருளாதாரத்தை பெருக்குவதிலே குறிக்கோளாக அமைகின்றது. 

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும்  அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே இழப்பை அடைந்தவர்கள். (அல்குர்ஆன் 63 :9)

இதனால் இறைவனிடம் அதிக நன்மையை பெற்றுத்தரக்கூடிய ஜூம்ஆ என்ற பெரும்பாக்கியத்தையும் கூட சிலர் கடைபிடிப்பதில்லை.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. அல்குர்ஆன் 62:9.

இங்கு நாம் பனூ இஸ்ரவேலர்களை நினைக்க கடமைப்பட்டுள்ளோம். சனிக்கிழமை அவர்களுக்கு புனிதமாக்கப்பட்டது. அதில் அவர்கள் வரம்புமீறியதால் குரங்குகளாக அவர்கள் மாற்றப்பட்டனர்.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

'அல்லாஹ் அழிக்கப்போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப்போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் 'உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர். கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது 'இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம். (அல்குர்ஆன் 7 :163-166)

இவ்வுலகில் ஆடம்பரமாக வாழவேண்டும் என்பதற்காக பொருளாதாரத்தை பெருக்க முயன்று தொழுகையை விடுவோமேயானால் மறுமை தேர்வில் தோல்வியை தழுவுவோம் என்பதை உணரவேண்டும். இறைவனிடத்தில் இருப்பது இவ்வுலகை விட சிறந்ததாகும் . 

'(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்'' எனக் கூறுவீராக!.  - (அல்குர்ஆன் 62:11)

அவர்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் அவர்களைக் காப்பாற்றாது. அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(அல்குர்ஆன் 58 : 17)

அதற்காக பொருளாதாரத்தை கவனிக்காமல் எந்நேரமும் தொழுதுகொண்டே இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. இறைவனுக்குரிய கடமைகளை நிறைவேற்றிவிட்டு உலக ஆதாயத்தை தேடவே இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். -  (அல்குர்ஆன் 62 :10)thanksto.dhubai tntj