-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வியாழன், மே 31

தொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா?


பி. ஜைனுல் ஆபிதீன்
தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை.
தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் தான் உள்ளது. அதுவும் கூட சந்தேகத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் இது தான்.
….அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவருக்கு கியாமத் நாளில் கிடைக்கும் பதவிகளை மக்கள் தம் தலைகளை உயர்த்தி (அண்ணாந்து) பார்ப்பார்கள்” என்று கூறிய அவர்கள் தமது தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது… அவர்களின் தொப்பி என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பியா? அல்லது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா? என்பது எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் ஐயத்திற்கிடமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார்.

சத்தியமே வெல்லும்!



அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தமது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.[அல்குர்ஆன்: 9:32]   இணைகற்பிப்போர் வெறுத்தபோதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான் (அல்குர்ஆன்: 61:9)

சத்தியமே வெல்லும் என்பதில் எந்தவொரு ஜாதி மதத்தினருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அசத்தியங் களும்,அதர்மங்களும் என்னதான் ஆட்டம் போட்டாலும் இறுதி வெற்றி என்பது சத்தியத்திற்கே என்பதில் உலக மக்கள் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருப்பதை பரவலாக நாம் பார்த்து வருகிறோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்ற சொல்வழக்குகள் இதனாலேயே உருவாகியிருப்பதையும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

புதன், மே 30

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் ஓர் இஸ்லாமிய பார்வை – Child Sexual Abuse and Islam.

fஇன்று உலகம் முழுவதும் மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பது Child Sexual Abuse என்ற சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்று சொல்லப்படும் சிறுவர் பாலியல் துன்புறுத்தலாகும்.
இது தொடர்பாக ஐ.நா மூலமாக செய்யப்பட்ட ஆய்வில் ஓராண்டுக்கு சுமார் 22 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கின்றது. சிறுவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவதை எப்படி தடுப்பது போன்ற விஷயங்கள் இந்தத் தலைப்பின் மூலம் ஆராயப்படுகின்றது.

சாப்பிடுவதன் ஒழுங்குகள்!


தூய்மையானவற்றை உண்ணுதல்

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! [அல் குர்ஆன் 2:172]
சாப்பிடும் முன் கைகளைக் கழுவுதல்
நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் (வழக்கம் போல்) தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: நஸயீ 256
பிஸ்மில்லாஹ் கூறிஅருகிலிருப்பதை உண்ணுதல்
உமர் பின் அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது "நான் நபி (ஸல்) அவர்கள் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அளாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "சிறுவனே! (பிஸ்மில்லாஹ் என்று) அல்லாஹ்வின் பெயரைச் சொல்! உன் வலக் கரத்தால் சாப்பிடு! உனது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு'' என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. நூல்: புகாரி 5376
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பிஸ்மில்லாஹ்'' கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),நூல்: முஸ்லிம் 4105

சனி, மே 26

அதிமுக அரசின் ஓராண்டு சாதனை?


Share
ஓராண்டுக்கு முன் நடந்த பொதுத் தேர்தல் அதிமுக கூட எதிர்பார்க்காத அளவுக்கு மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றது. ஜெயலலிதாவிடம் மாறுதல் ஏற்பட்டுவிட்டது என்று மக்கள் நம்பியது தவறு என்பதை அவர் தனது ஒவ்வொரு நடவடிக்கை மூலமும் காட்டி வருகிறார். மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றுவிட்டோம்; நம்மை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற எண்ணத்தில் கூட்டணிக் கட்சிகளைக்கூட மதிக்காமல் தான் நினைத்தைச் செய்து வருகிறார் ஜெயலலிதா.
ஒரு வருடத்தை இவர் பூர்த்தி செய்துள்ள நிலையில் தன் ஆட்சியின் சாதனையைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக சட்டசபை நாட்களை இரண்டு நாட்கள் அதிகமாக்கி ஜால்ராக்களை வைத்து முதல்வர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளார்.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று தங்களைத்தானே சொல்லிக் கொள்ளும் மமக பேராசிரியர், புகழின் உச்சத்திற்கே போய் பேசியுள்ளார். ஓய்வின்றி உறக்கமின்றி தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் முதல்வர் என்று ஜவாஹிருல்லாஹ் பேசும் போது, ஆளும் கட்சியின் மேசை தட்டுதல் விண்ணைத் தொட்டது. மேலும் நேரடியாகவும் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்தும் கூறி வந்துள்ளார்.

நடுநிலை(?)வாதிகள் பற்றி...!


கேள்வி: ”நாங்கள் எந்த இயக்கத்தையும் சாராதவர்கள்” என்று சொல்லும் தவ்ஹீத்வாதிகள்TNTJ வை மட்டும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ வெறுப்பதும், சாடுவதுமாக உள்ளனரே ஏன்? இவர்கள் நம்மை தாவா செய்ய அல்லது நல்ல பணிகளுக்காக அழைத்தால் நாம் என்ன செய்வது?

பதில்: எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்பது ஒரு போர்வை தான். தவ்ஹீத் ஜமாஅத்தின் பக்கம் மக்கள் நம்பிக்கை வைத்து செல்வதைப் பிடிக்காத சிலர் அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பார்கள். அதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதால் உரிய முறையில் இதை நாம் எதிர்கொள்ள முடியும்.
தவ்ஹீத் ஜமாஅத் மீது அவதூறு பரப்பினாலும் அதன் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பதைக் காணும் சிலர் தந்திரமான முறையில் மக்களை தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையைச் செய்வார்கள்.
நமக்கு யாரும் வேண்டாம்நாம் எதிலும் சேராமல் இருப்போம்’’ என்று கூறுவது தான் அந்தத் தந்திரம்.
இவர்கள் அவர்களைக் குறை சொல்கிறார்கள். அவர்கள் இவர்களைக் குறை சொல்கிறார்கள். நாம் இவர்களை விட நல்லவர்களாக எதிலும் சேராமல் இருப்போம்’’ எனக் கூறி நடிப்பார்கள்.

இந்து புனித பயணத்திற்கு மானியம் தமிழக அரசுக்கு சில கேள்விகள்.....

.
ஹஜ் மானியம் என்ற பெயரில் 600கோடி ரூபாயை வருடம்தோறும் ஒதுக்கிய மத்திய அரசு அதை பயணிகளிடம் நேரடியாக கொடுக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தூக்கி கொடுத்து ஏர் இந்தியா நிறுவனமோ டிக்கட் கட்டணத்தை ஹஜ் காலங்களில் இருமடங்காக உயர்த்தி அதை ஸ்வாக செய்து வந்தது மத்திய அரசின் இந்த மோசடியை முஸ்லிம்கள் புரிந்து கொள்வதற்கு முன் ஹஜ் மானியம் கூடாதென்று சங்க்பரிவார அமைப்புகள் ரணகளம் பண்ணிவிட்டன. பின்னர் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த மானியத்தை (?) குறைக்க மத்திய அரசு நடவடிக்கைஎடுத்துள்ளது இதை ரத்து செய்தால் முஸ்லிம்களுக்கு எந்த இழப்பும் இல்லை ஏர் இந்தியா நிறுவனதிர்க்குதான் இழப்பு இதை புரிந்துகொண்ட முஸ்லிம்கள் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு சும்மா இருந்துவிட்டனர்.

வியாழன், மே 17

அல்லாஹ்வை நினைவு கூறுவோம்!


கண்ணியமிக்க வல்ல நாயன் தன் திருமறையில் கூறுகிறான்: 

நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன்: 13:28) இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஒருவர் மற்றவரை நினைக்கின்றனர். எதையாவது நினைக்காத உள்ளங்கள் இல்லை எனலாம். தன்னை நேசிப்பவர் களையோ தனக்கு விருப்பத்திற்குரிவர்களையோ குடும்பத்தினரையோ தொழில் முன்னேற்றம் அடைவதை பற்றியோ எதிர்காலத்தை பற்றியோ தன்னை விட்டு கடந்து போன தனக்கு வரவிருக்கின்ற இன்ப துன்பங்களைப் பற்றியோ அவர்களுடைய நினைவலைகள் நீண்டு கொண்டே செல்கின்றது...


இச்சிந்தனை போக்குகள் அவனுடைய நிம்மதி, தூக்கம், உணவு போன்ற அன்றாடம் அவன் செய்யக்கூடிய அனைத்து காரியங்களையும் நிறுத்தி விடுகின்றது. இச்சிந்தனை போக்குகளின் தாக்கம் சில நேரங்களில் தவறான முடிவுகளின் பக்கமும் தற்கொலைகளின் பக்கமும் கொண்டு செல்கின்றது.  நம்முடைய செயல்பாடுகள் அனைத்தையும் சரியான முறையில் கொண்டு செல்லக்கூடிய ஒரு சிந்தனை போக்கு இறைநினைவு மட்டுமே!

ஹஜ்ஜுக்கு வழங்கும் மானியத்தை ரத்து செய்ய சொல்லி உச்சநீதிமன்ற உத்தரவும் TNTJ நிலைப்பாடும் (வீடியோ இணைப்பு)


.

இந்தியாவை ஆள்பவர்களுக்கும்நீதி வழங்குவோருக்கும்ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அறைகுறையாகவும்மேலோட்டமாகவும் எதையாவது உளறுவது தான் அறிவு என்று ஆகி விட்டது.
இந்தியா மதச்சார்பற்ற நாடு. எனவே ஒரு மதத்தினரின் புனிதப்பயணத்துக்கு மானியம் வழங்குவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பது தான் பிரச்சனையாக்கப்படுகிறது.
வசதி படைத்தவர்கள் தான் ஹஜ் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானியம் எல்லாம் தேவை இல்லை என்பதும் கூடுதலாக முன் வைக்கப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன தெரியுமாஹாஜிகளுக்காக மத்திய மாநில அரசுகள் ஒரு நயாபைசாவும் நமக்குத் தருவதில்லை. மாறாக ஹஜ் பயணம் மேற்கொள்வோர் மூலம் கோடிகோடியாக இந்த அரசாங்கம் கொள்ளை அடிக்கிறது என்பது தான் உண்மை.

திங்கள், மே 14

தினத்தந்தியை ஒழித்துக் கட்ட இருமாத செயல்திட்டம்


கடந்த 28.04.12 சனிக்கிழமை அன்று இதை கேட்பாரே இல்லையாஎன்ற தலைப்பில் தினத்தந்தியில் வெளியான தலையங்கம் முஸ்லிம்களை மிகுந்த கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. தாங்கள் சங்பரிவாரக் கும்பலின் கைக்கூலிகள் தான் என்பதை தினத்தந்தி வெட்ட வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அந்தத் தலையங்கம் அமைந்துள்ளது.

இவ்வாறு விஷம் தோய்ந்த வினாக்களை எழுப்பி பொய்யான அவதூறுகளை முஸ்லிம்கள் மீது சுமத்தி ஏதோ பாகிஸ்தானில் பிற மதத்தவர்களை நிர்ப்பந்தப் படுத்தி ஆயிரக்கணக்கான இந்துக்களையும்கிறித்தவர்களையும் இஸ்லாத்திற்கு மாற வைக்கின்றார்களே எனவே இந்து மற்றும் கிறித்தவர்களே! நீங்களும் நீங்கள் சார்ந்த அமைப்புகளும் கொதித்தெழ வேண்டாமாஅரசியல் கட்சிகள் கொதித்தெழ வேண்டாமாஎன்ற கேள்விகளை கேட்டு எல்லோரையும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டுஅண்ணன் தம்பிகளாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் இந்துகிறித்தவ,முஸ்லிம் சகோதரர் களுக்கு மத்தியில் கலவரத்தை உண்டு பண்ணி தமிழகத்தையும் குஜராத் போன்று சுடுகாடாகவும் கலவர பூமியாகவும் மாற்ற வேண்டும் என்பதுதான் தினத்தந்தியின் திட்டம் என்பது அதன் கேவலமான தலையங்க வார்த்தைகளிலிருந்து புலனாகின்றது.

முதலில் தினத்தந்தி எழுப்பியுள்ள வாதங்கள் முட்டாள் தனமானவை என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம். இவர்கள் சொல்வது போல இந்துக்களும்,கிறித்தவர்களும் மிரட்டப்பட்டுதான் முஸ்லிம்களாக மாற்றப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு ஏற்கனவே நாம் உணர்வு 16:31 இதழில் தெளிவாக தக்க ஆதாரங்களுடன் விளக்கமளித்திருந்தோம்.

பீஜே அவர்களைப் பற்றி. (ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்!)

.

இந்த பதிவை எல்லா சகோதரர்களும் முழுவதுமாக நிச்சயம் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
  

மேலும் இந்த சம்பவத்தில் ஒரு வார்த்தை கூட மிகைபடுத்தி எழுதவில்லை என்று அல்லாஹுவின் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன். 
  

இன்று தோஹாவில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற போது"என்னுடைய மாமா சென்னையில் இருந்து உம்ரா செய்வதற்கு வந்திருக்கிறார்" என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.அவர் பெயர் ரபியுல்லாஹ்.சுமார் 70 வயது மதிக்கத்தக்க அந்த சகோதரர் உருது மொழியை தாய்மொழியாக கொண்டவர்.அவரிடம் மார்க்க விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருதந்த போது விஷயம் ஊரில் நடக்கும் ஏகத்துவ பிரசாரங்களை பற்றி வந்தது.
  

வெள்ளி, மே 11

கோவையைக் குலுக்கிய குடும்பவியல் மாநாடு!


DSC09878
கோவை: கடந்த மே 6ஆம் தேதி கோவையில் நடைபெற்ற மாவட்ட மாநாடு கோவையை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மாநாட்டுத் திடல் மட்டுமல்ல; திடலைச் சுற்றியுள்ள பகுதிகளும் மக்கள் வெள்ளத்தால் மிதந்தன...
மாவட்டம் தழுவிய அளவில் நடைபெறக்கூடிய ஒரு மாநாட்டிற்கு இந்த அளவிற்கு மக்கள் வெள்ளம், அதுவும் பெண்கள் வெள்ளம் சாரை சாரையாக வந்து கலந்து கொண்டது காண்போரை வியக்க வைத்தது. அல்ஹம்துலில்லாஹ்….


காலை 10 மணிக்கு மாநாட்டின் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மாநாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் கோவை ரஹீம் தலைமை வகித்தார்.
கண்ணைக் கவர்ந்த அரங்கங்கள் :

திங்கள், மே 7

இலவச ஆன்லைன் கல்வி போர்ட்டல்!


இலவச ஆன்லைன் கல்வி"க்காக ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்காக அனைத்து பாடநூல்களையும் தொகுத்து அழகாக ஒரு இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சமச்சீர் கல்வி ஆன்லைன் எஜுக்கேஷனில் 1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆங்கில, தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்ச்சி ஆங்கில மற்றூம் தமிழ் பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள் மற்றூம் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம். இதை ஆரம்பிக்கும் எண்ணமும் அதன் பயன்பாடும் குறித்து இந்த இணைய தளத்தை உருவாக்கியிருப்பவர் கூறும் விஷயங்கள்......

1. இனிமேல் உங்கள் குழந்தை பள்ளியைத் தவிர வேறு எங்கு சென்றாலும் பொதியைச் சுமக்க தேவையில்லை.

2. நீங்கள் எதாவது ஒரு காரணத்திற்காக வெளியூர் சென்றாலும் ஆன்லைனில் படிக்கவும் படிப்பு சொல்லி கொடுக்கவும் மிகவும் எளிதானது.

3. புத்தகங்கள் தொலைந்து விட்டால் உடனே புத்தகம் வாங்க அல்லது தேட அவசியமில்லை. இங்கு அனைத்து புத்தகங்களின் டிஜிட்டல் காபி உள்ளது.

4. ஏதாவது ஒரு பாடத்தில் சந்தேகம் இருந்தால் உடனே அந்தப் பக்கத்தை "பேஜ் மார்க்" செய்து ஆசிரியருக்கோ அல்லது பெற்றோருக்கோ அனுப்பினால் அவர்கள் அங்கு நோட்ஸ் போட்டு உடனே பதிலை அனுப்பினால் உங்களுக்கு மட்டும் அந்தப் பக்கங்கள் கிடைக்கும்.

5, பரிட்ச்சை முடிந்தவுடன் அடுத்த வருஷ சிலபஸுக்காக வெயிட் பண்ண தெவையில்லை. இங்கு அடுத்த வருடத்திற்கான புத்தகம் உடனே எடுத்து விடுமுறையில் பயிற்சி செய்யலாம்.

6. மாதிரி வினாத்தாள் மற்றும் மாடல் கொஸ்டீன் பேப்பர் மற்றும் கடந்த இரண்டு வருட கேள்விதாள் இங்கு உங்களுக்காக வைக்கபட்டுள்ளது. அதனால் நன்கு பயிற்சி செய்யலாம்.

7. முக்கியமாக வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் இந்தப் புத்தகத்தை அல்லது தமிழ் புத்தகங்களை இலவசமாக லாகின் செய்து தங்கள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தலாம்.

8. பள்ளி மற்றும் டுட்டோரியல் கல்லூரிகளில் "புரஜக்டர்" மூலம் இனைத்தால் இந்த ஈ புத்தகத்தைப் பெரிய திரையில் காண்பித்து எல்லொரும் படிக்க ஏதுவாக இருக்கும்.

9. இந்த ஆன்லைன் இப்பொழுது தமிழக முதல்வர் கொடுத்திருக்கும் இலவச மடிகணனி வழியாக படிக்க நல்ல ஒரு வாய்ப்பு.

10. ஈ ரீடர் எனும் இன்ஸைட் டேப்ளட் கம்ப்யுட்டரும் அதில் இதிலுள்ள அனைத்து புத்தகங்களும் இன்டர்னெட் இல்லாமல் படிக்க ரூபாய் 999/- அறிமுகபடுத்தப்படுகிறது.

இந்த போர்ட்டலில் எந்த ஒரு புத்தகத்தையும் புரட்டி படிக்க முடியும். அது போக எந்தப் பக்கத்துக்கும் நேராக செல்ல முடியும். புக்மார்க் வைக்க முடியும். அது போக நோட்ஸ் மற்றும் ரெஃபரன்ஸ் எழுத முடியும். அந்த ஸ்பெஸல் நோட்ஸ் உங்கள் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும். ஆட்டோ ஃபிளிப் பட்டனை அமுக்கினால் அந்த புத்தகம் அதுவே புரட்டும். அது போக ஜூம் இன் ஜூம் அவுட் வசதி உள்ளதால் எவ்வளவு பெரிதாக வேண்டுமானலும் ஜூம் செய்து கொள்ளலாம். சில புத்தகங்கள் ஆடியோ வசதி செய்யபட்டுள்ள்து.

www.samacheeronline.com

பள்ளிக்கல்விக்கு மிகுந்த பயனுள்ள மேற்கண்ட மூன்று இணையதள முகவரிகளின் மூலம் அணுகலாம். Source

சனி, மே 5

குர்ஆன் இறைவேதமா விவாதம்: SAN தரப்பு வாதங்களும் TNTJ வின் பதில்களும்!



குர்ஆன் இறைவேதமா விவாதம் SAN தரப்பு வாதங்களும் TNTJ வின் பதில்களும்!

வாதம்:1 குர்ஆன் அனைத்தையும் சுருக்கமான வார்த்தை கொண்டு விளக்கும் என்கிறீர்கள் தொழுகைஇநோன்புஇஜகாத்இஹஜ் பற்றி குரானில் இருந்து காட்டுங்கள்? இதனால் குர்ஆன் இறைவேதமில்லை.

(எவ்வளவு அற்புதமான வாதம்யா?)

மறுப்பு: இதற்கு குர்ஆனிலேயே விளக்கம் இருக்கிறது.முஹம்மது நபி அவர்கள் குரானில் கூறப்பட்ட விஷயங்களுக்கு விளக்கக்கூடியவராகவும் இருக்கிறார் என்று குர்ஆனே சொல்கிறது?


43, 44. (முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்இ அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். குர்ஆன் 16:44.

வாதம்: 2  பூமியில் சில பகுதிகளில் பகலாகேவே அல்லது இரவாகவே இருக்கிறது. இவர்கள் எப்படி தொழுவார்கள் இதை குர்ஆன் விளக்கவில்லை? இதனால் குர்ஆன் இறைவேதமில்லை.

(3 மாதம் ஓடனது வேலை செய்து)

இஸ்லாத்தின் பார்வையில் கூட்டுக் குடும்பம்!


காலத்திற்கேற்ற பயனுள்ள கட்டுரை. மாஷா அல்லாஹ், குர் ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு, ஆசிரியர் எளிமையான முறையில் விளக்கி இருக்கிறார்கள்.

சூழ்நிலைகள், தவிர்க்கமுடியாது போன்ற காரணங்களை சொல்லி தப்பித்துக்கொள்ளாமல், முடிந்த வரை தவறுகளில் இருந்தும் தவிர்ந்து கொள்ளவேண்டும். அதே சமயத்தில் கூட்டுக்குடும்பங்களில் ஏற்படக்கூடிய, ஆசிரியர் சுட்டிக்காட்டிய தவறுகளில் இருந்தும் தவிர்ந்து கொண்டு, கூட்டுக்குடும்பமாக வாழ்வதற்கு இஸ்லாத்தில் தடையேதும் இல்லை என்று நினைக்கிறேன். அல்லாஹ் அஃலம். படிப்பதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் மற்றும் உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தனது. கூட்டுக் குடும்பம்!இது இந்தியர்களால் அதுவும் குறிப்பாக தமிழர்களால் பெரிதும் விரும்பக்கூடியதாக இருந்தது; இப்போதும் பலர் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். இதில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல!

கூட்டுக்குடும்பம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது ஒருவர் தம் மனைவி மக்களுடன் மற்றும் அவருடைய சகோதரர்களுடைய மனைவி மக்கள் ஆகிய அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வருதைக் குறிப்பதாகும். ஒருவர் தன்னுடைய பெற்றோர்களைக் கவனிப்பது என்பது அவர் மீது கடமையாக இருப்பதால் அவர்களை தம்மோடு வைத்துப் பராமரிப்பதை கூட்டுக் குடும்பம் என்பதில் சேர்க்க இயலாது என்பதைக் கவனத்தில் கொண்டு
இக்கட்டுரையைப் படிக்கவும்.

சினிமா, டீவி போன்றவற்றின் மூலமாக ஆபாசங்கள் வீடுதேடி வந்துக் கொண்டிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் கூட்டுக்குடம்பமாக வாழ்கின்ற பலர் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஷீரீஅத்தின் சட்டதிட்டங்களை மீறியவர்களாக உள்ளனர்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஒரு பெண் அந்நிய ஆடவர் முன்னிலையில் எப்படி ஆடையணிய வேண்டும் என்பதை மிக அழகாகவே எடுத்துரைப்பதோடல்லாமல் யார் யாரெல்லாம் அந்நிய ஆடவரில்லை என்பதையும் தெளிவாகவே கூறியிருக்கின்றது.

யார் அந்நிய ஆடவர்?

புதன், மே 2

இறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில்!


பொதுவாக இறைவனோடு மற்றவர்களையும் அதாவது பெரியார் களையும், ஷெய்ஹு மார்களையும், பீர்களையும், அவ்லியா க்களையும், இறைநேசர்களையும் பிராத்திப்பவர்கள் பின்வரும் காரணங்களில் சிலவற்றையோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தையோ கூறுவர்.

அவைகள் யாவை எனில், நீதிபதியிடம் வாதாடுவதற்காக ஒரு வக்கீல் தேவையல்லவா ? அதுபோல் நாங்கள் அவ்லியாக்களிடம் الله விடம் வாதாடுவதற்காக முறையிடுகிறோம் நாங்கள் கேட்பெதல்லாம் கிடைக்கிறது. அதனால் தான் தொடர்ந்து கேட்கிறோம் நாங்கள் பாவங்கள் செய்த பாவிகளாக இருக்கின்றோம். அதனால் பாவமே செய்யாத இறைவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் الله விடம் எங்களின் தேவைகளைக் கேட்டுப் பெற்றுத் தருவார்கள் நல்லடியார்கள் கேட்கும் துஆ இறைவனால் மறுக்கப்பட மாட்டாது. அதனால் அவர்கள் மூலம் இறைவனிடம் கேட்கிறோம் மார்க்கத்தில் சிறிதளவு விபரமுள்ள இன்னும்சிலர் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப்பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம.

நாங்கள்ஒன்றும் புதிதாக இதைச்செய்யவில்லை. எங்கள் முன்னோர்களும், மூதாதையர்களும் அவ்லியாக்களிடம் முறை யிட்டுத்தானே தேவைகளைப் பெற்றுவந்தர்கள். அவர்கள் என்ன ஒன்றும் விளங்காதவர்களா?

எங்கள் ஆலிம்களும் மற்றும் ஹஜ்ரத் மார்களும் இதைச் செய்கிறார்களே, அவர்களும் தவறு செய்கிறார்களா?

அல்லாஹ் தன்திருமறையில் الله ஒருவனையே வணங்கவேண்டும் என்றும், அவன் ஒருவனிடமே உதவிதேட வேண்டும் என்றும் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்க கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போர் எடுத்து வைக்கும் மேற்கூறப்பட்ட வாதங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஆராய்வோம்.

ஒரே இறைவன் ஒரே தூதர் ஒரே வேதம் முஸ்லிம்களிடம் ஏன் முரண்பாடு?


இந்த தலைப்பு இன்றைய முஸ்லிம்களின் வாழ்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?


அல்லாஹ் தன் இறைச் செய்தியில் குறை வைத்து விட்டானா அல்லது நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய செய்தியை அறிவிப்பதில் குறை வைத்து விட்டார்களா? நவூது பில்லாஹ் இதை நாம் முடிவு செய்ய வேண்டிய எந்த அவசியமும் உரிமையும் நமக்கில்லை. ஏனென்றால் இறைவனும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் தங்கள் கடமையை சரியாக செய்து விட்டனர். நாம் தான் நமது கடமையை சரியாகச் செய்யாமலும் மார்க்கத்தை சரியாக விளங்காமலும் ஒரு இயக்கம் பிற இயக்கத்தை குறை கூறியும் காலத்தையும் நேரத்தையும் வீணடித்து இறைவனுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து வருகிறோம்.

நிறைய முஸ்லிம்கள் மார்க்கத்தை அறிவதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. பொருளாதாரத்தை பெருக்குவதில் தான் குறியாக உள்ளனர். மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும் போது நிம்மதியும் சந்தோசமும் திருப்தியும் அதிகமாகிறது. பொருளாதாரம் அதிகரிக்கும் போது நிம்மதியின்மையும், தூக்கமின்மையும், பாவச் சுமையும், பொய்யும், புரட்டும், இன்னும் தவறான சிந்தனைகளும் அதிகமாகிறது.

முரண்பாடு சிறிதும் இல்லாத இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைய முஸ்லிம்களின் நிலை கீழ்க்கண்டவற்றில் எவ்வாறு உள்ளது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


இறைநேசர்கள் பரிந்துரை செய்வார்களா?

இறைநேசர்கள் உயிரோடிருக்கிறார்களா?

கூட்டுத் துவா கூட்டுத் திக்ர் உண்டா?
பாத்திஹா மௌலிது ஓதுவது கூடுமா?
மத்ஹபை பின்பற்றலாமா?
நபித்தோழர்களையும் பின்பற்றலாமா?
நான்கு இமாம்களை பின்பற்றலாமா?
இறைநேசர்களை பின்பற்றலாமா?
முன்னோர்களை பின்பற்றலாமா?
நபி (ஸல்) அவர்களை கனவிலும் நினைவிலும் காண முடியுமா?
ஆடம்பர ஹஜ்?
பாங்குக்கு முன் சலவாத் உண்டா?
சூனியம் ஜோதிடம் குறிபார்த்தல் கூடுமா?
மீலாது விழா கொண்டாடலாமா?
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா?
தாயத்து தகடு கயிறு கட்டலாமா
சகுனம் பார்க்கலாமா?
இஸ்லாத்தில் கற்பனை கதைகள் கூடுமா?
ஸலவாத்துன்நாரியா ஓதலாமா?
மஞ்சள் நீராட்டு விழா செய்யலாமா?
சுன்னத் கத்னா திருவிழா கொண்டாடலாமா?
கருமணி தாலி கட்டலாமா?
தஸ்பீஹ் மணி உருட்டுதல் கூடுமா?
தர்காவுக்கு போகலாமா?
கந்தூரி விழாக்கள் கொண்டாடலாமா?
சந்தணக் கூடு இழுக்கலாமா?
யானை ஊர்வலம் அலங்காரம் கூடுமா?
வலிமார்களிடம் உதவி தேடுதலாமா?
உருஸ், படையல் கூடுமா?
யானை குதிரை ஊர்வலங்கள் உண்டா?
விபுதிக்கு பதிலாக தர்காஹ் சந்தனம் பூசலாமா?
கவ்வாலி இசைக்கச்சேரிகள் கூடுமா?
நாகூர் மொட்டை அனுமதிக்கப்பட்டதா?
தப்ருக் தட்டுக்கள் கூடுமா?
கொடிமரம் உண்டா?
கப்ருகளை கட்டுதல் கூடுமா?
அல்லா அல்லாதவருக்கு அறுத்து பலியிடுதலாமா?
சமாதி வழிபாடு செய்யலாமா?
ஷைகுமார்களின் கால்களில் விழுவது கூடுமா?
மரணித்தால் ஜியாரத் பொறி வழங்கலாமா?
சமாதியை கழுவி அழுக்கு நீரை குடிக்கலாமா?
முரீது உண்டா?
1000 முறை கத்தினால் கவுஸ் வருவாரா?
ஸபர், முஹர்ரம் மாதம் பீடை மாதமா?
வளர்பிறை, தேய்பிறை சகுணம் பார்க்கலாமா?
7-ம் 10-ம் பஞ்சா பக்கீர்கள் கொண்டாடலாமா?
ஆடம்பர திருமணம் அவசியமா?
பெரும்பாவங்கள் தீமைகள் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
ஆடம்பரம் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
இணைவைத்தல் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
பாகப்பிரிவினை சொத்துரிமை குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
ஹலால் ஹராம் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
பித்அத் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா? 
கல்வி விழிப்புணர்வு
மார்க்க விழிப்புணர்வு
கொள்கை விழிப்புணர்வு
சமுதாய முன்னேற்றம்
இஸ்லாமியர்களின் உரிமைக்காக பாடுபடுதல்
அழைப்புப் பணி செய்தல்
வரதட்சனை ஒழிப்பு நடவடிக்கை?
அழுத்தம் வலிமை இல்லாத ஜூம்மா பிரசங்கம்
தராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்துக்கள்?
தஸ்பீஹ் தொழுகை உண்டா?
பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதலாமா?


மேற்கண்ட விசயங்களில் நாம் கருத்து வேறுபாடுகள் கொண்டிருக்கின்றோம். அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் நூல்களை கையில் எடுங்கள். தமிழ் மொழிபெயர்ப்பு வந்து விட்டது. இனி முடிவு செய்ய வேண்டியது நாம் தான்.

உண்மையை அறிய முயற்சிக்கும் போது எந்த ஜமாத்தையும் சாராதீர்கள். உங்களுக்கென சுய அறிவும் மனசாட்சியும் இருக்கிறது. முடிவு எடுப்பதற்கு முன் இறைவனுடைய திருப்தியையும் இறைத் தூதருடைய திருப்தியையும் மட்டுமே முக்கிய நோக்கமாக கருதுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக. ஆமீன்.
thanks to: mpm pages