-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

செவ்வாய், மே 31

இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பாட புத்தகங்கள்.


சமச்சீர் கல்வியை ரத்து செய்ததால் பழைய பாடத்திட்டம் தான் அமலுக்கு வரவிருக்கிறது. புத்தகங்கள் அச்சிட்டு வெளிவர தாமதம் ஆவதால், அவைகளை இணையதளத்தில் இருந்து எடுத்து கொள்ளும் வசதியை தமிழக அரசு செய்திருக்கிறது. கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.

திங்கள், மே 30

இஸ்லாம் கூறும் குடும்பவியல்.


(தமிழுலகின் சிறந்த பேச்சாளரும்எழுத்தாளருமான சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த ரமழான் மாதம் முழுவதும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் பேசிய இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தொடர் சொற்பொழிவை எழுத்தில் தரும்படி பலரும் வேண்டிக் கொண்டதால் காலத்தின் தேவை கருதி தொடராக தருகிறோம்)  

இஸ்லாமிய மார்க்கம் அனைத்துப் பிரச்சினைகளையும் முழுமையாகவும்,தெளிவாகவும்,அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அனுகக் கூடிய ஒரு மார்க்கம்.

அந்த அடிப்படையில் குடும்பவியலைப் பற்றி இஸ்லாம் என்ன நடை முறைகளைகளை சொல்லித் தருகிறது என்பதை தெளிவு படுத்துவதற்காக இந்தத் தலைப்பு தெரிவு செய்யப் பட்டுள்ளது.

இதற்காண காரணம் என்னவெனில் நம்முடைய சமுதாயத்திலலே முஸ்லீம்களாக இருந்தாலும்,முஸ்லீம் அல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுடைய குடும்ப அமைப்பு பாரதூரமான முறையில் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது.இவையணைத்தும் இஸ்லாம் சொல்லக் கூடிய குடும்ப அமைப்பு முறைமை அவர்களுக்கு தெரியாத காரணத்தினாலும்,எடுத்து சொல்லப் படாத காரணத்தினாலும் தான் உண்டாகிறது.

முதலாவதாக..............................  

அல்லாஹ் உலகில் எந்த படைப்பை படைத்திருக்கிறானோ அவை அனைத்தும் ஒன்றிலிருந்து இன்னொன்றை உற்பத்தி செய்யக் கூடியதாகவே உள்ளது.

மனிதன் படைக்கும் படைப்பிற்கு அந்த ஆற்றல் இல்லை. 

ஒரு பேனாவை ஒரு மனிதன் படைத்தால் (கண்டுபிடித்தால்)அது இன்னொரு பேனாவை பெற்றெடுக்காது.ஒரு தொலை பேசியை கண்டுபிடித்தால் அது இன்னொரு தொலை பேசியை பெற்றெடுக்க முடியாது.

ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தான் செய்ய வேண்டும்.

உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.


இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் 'கைபேசி' உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன்Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.



ஒரு Caller தன் செல்ஃபோனில் ஒரு Receiver-ஐ அழைக்கும்போது அவரின் செல்ஃபோனிலிருந்து வெளியாகும் மின்காந்தப்புலன் (Electro Magnetic Field)  அருகிலிருக்கும் மொபைல் (Base Station - 1) டவருக்கு செல்கிறது. அங்கிருந்து சிக்னல், Switching Center-க்கு செல்கிறது. இங்கே அழைப்பாளர் மற்றும் அழைக்கப்படுபவரின் விபரங்கள் சேமிக்கப்படுகின்றன. பின் அங்கிருந்து சிக்னல் அழைக்கப்படுபவரின் அருகே இருக்கும் செல்ஃபோன் (Base Station  - 2) டவருக்கு செல்கிறது. இதிலிருந்து புறப்படும் மின்காந்தப்புலன் Receiver-ன் செல்ஃபோனில் உள்ள ஆன்டென்னா மூலம் உட்கிரகிக்கப்படும் போது செல்ஃபோனில் ரிங் டோன் கத்துகிறது. அழைக்கப்படுபவர் வந்த அழைப்பை 'ஓகே' செய்யும்போது இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது.

The impact of cell phone radiation on humans..! & How to overcome it carefully..!

பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கிறது. இவ்வாறு பேசும்போது செல்ஃபோனின் ஆன்டென்னா விலிருந்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கும் மின்காந்த அலைகள் எல்லா பக்கமும் தெறிக்கின்றன. அதில் கிட்டத்தட்ட பாதி ஆளவுஅலைக்கதிர்கள் பேசுபர்களின் தலைக்கு உள்ளும் ஊடுறுவுகின்றன..! இந்தசெல்ஃபோனின் மின்காந்த அலைக்கதிர்வீச்சின் அளவு, ஒரு மைக்ரோ வேவ் ஓவனின் அலைக்கதிர்வீச்சுக்கு ஏறக்குறைய இணையானது..! ஆக, விஷயம் அவ்வளவு விபரீதமானது..!

'க.' & 'ஜெ.'... 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!


வாக்காளர்களால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு… 'க.' & 'ஜெ.' 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!  

மிகவும் கஷ்டப்பட்டு, படாதபாடுபட்டு, அல்லும்பகலும் அயராது சிந்தித்து, பல போராட்டங்கள் கண்டு, இழப்புகள் பெற்று, பல வருடங்கள் கடந்து, ஒருவழியாக மேற்கு வங்கத்தில் 34 வருட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு... முற்றுப்புள்ளி வைத்தே விட்டார், மம்தா பானர்ஜி..! ஜோதிபாசு காலங்களில், மம்தா 30... 40... தொகுதிகளை பெறுவது கூட அன்று இமாலய சாதனையாக போற்றப்பட்டது. ஆனால், இன்று 225/294 வென்று அமோக வெற்றி பெற்று இருக்கிறார். இதுதான் போராடி பெற்ற வெற்றி..!



உயரே 'ஜெ.' பால்கனி போஸ்... கீழே 'ம.' மக்களுடன் ஒருத்தராய்...

.
ஆனால், அதே நேரம் தமிழகத்தில் 'ஜெ.' பெற்ற வெற்றி எப்படிப்பட்டது..? மம்தா போல மக்களுடன் இரண்டற கலந்து, ஆளும் கட்சியின் ஊழலை எதிர்த்து, தினமும் கஷ்டப்பட்டு போராடி… அதன் மூலம் பெற்ற வெற்றியா இது..? இல்லையே..! பொதுமக்களுக்கு 'க.' ஆட்சி பிடிக்காமல் போய், போக்கிடம் வேறு இன்றி, வேறு வழியேயின்றி ஜெ.வுக்கு ஓட்டு போட்டுத்தொலைத்து விட்டார்கள்..! இதனால் பெற்ற அமோக வெற்றிதான் இது..! அதாவது ஆளுங்கட்சியின் ஊழல்ஆட்சி தந்த வெகுமதிதான் இந்த அமோக வெற்றி..!

ஆக, வெளிவந்திருக்கும் இத்தேர்தல் முடிவுகளை காணும் போது, நமக்கு என்ன விளங்குகிறது என்றால், இது, வாக்காள பெருமக்களால் ஊழல் கறை படிந்த க.வுக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்றாலும், 'ஜெ.'வுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றே 'ஜெ.'புரிந்து கொள்ள வேண்டும். எப்படி..?

குஜராத் & மோடி - ஊழல் # 1 :- அன்னா ஹசாரேவின் அந்தர் பல்டி..!


அன்னா ஹசாரே என்ற முதியவர் சென்றமாதம் 'பிறந்தவர்ஆவார்..! 

திடீரென ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இந்தியாவில் எத்தனையோ ஊழல்கள் இதற்கு முன்னர்  நடந்துள்ளன. அப்போதெல்லாம் இவர் ஏதும் உண்ணாவிரதாமோ,ஊர்வலமோஅறிக்கையோ இப்படி எந்த செய்தியுமில்லை. அதற்கு முன்னர்வரை நம்மில் யாரும் அவரை அறிந்திருக்கவுவில்லை. 

சரிபோகட்டும். புத்தருக்கு இளம் வயதில் ஞானோதயம் வந்ததாக நாம் படித்ததுண்டு. இவருக்கு முதிய வயதில் வந்திருக்கிறது..!  பலர் இவரை பாராட்டினர். சிலர்இவரின் லோக்பால்... 'அரசியல்வாதிகளின் ஊழலை ஒழித்துவிடாது' என்றும்'இவர் கோரிக்கையானது,ஊழலை ஒழிக்கவேண்டிய முறையில் அடிப்படை காரணிகளை கண்டறிந்து வேரிலிருந்து ஊழலை ஒழிக்காமல்நுனிக்கொம்பில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது' என்றும் கூறினர். விஷயம் நியாயமான கண்ணோட்டம் என்பதால்அதற்கும் ஆதரவு தெரிவித்தனர் பலர்.

எனினும்ஊழலை எதிர்ப்பது என்ற விஷயம் நன்மையானதே. ஆதலால் இவரை ஆதரிப்போம். இப்படித்தான் பெரும்பாலும் எல்லாருமே இவரை ஆதரிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில்தான்... இவரிடமிருந்து ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கை வந்தது..!

வேண்டாம் கந்தூரி உரூஸ்

 வேண்டாம் கந்தூரி உரூஸ்
'"நபி வழி நடந்தால் நரகமில்லை இதை நாடாத பேருக்கு சொர்க்கமில்லை சொர்க்கமில்லை'" என்று ஒரு கவிஞர் பாடிய பாடலை நம் இஸ்லாமிய பெருமக்கள் மிகவும் ரசித்துக் கேட்கின்றனர். ஆனால் இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தவரின் வாழ்க்கை நம்முடைய நபி முகம்மது: (ஸல்) அவர்கள் காட்டித் தந்த பிரகாரம் அமைந்திருக்கிறதா என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்

வேண்டாம் மாற்று மதக் கலாச்சாரங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '"யார் பிற சமுதாயத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறார்களோ அவன் அவர்களைச் சார்ந்தவனே '" (நூல் : தப்ரானீ) 


    அன்பிற்குரிய இஸ்லாமிய பெரியோர்களே தாய்மார்களே நபியவர்கள் கூறிய மேற்கண்ட ஹதீஸை சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் தர்ஹா கந்தூரி எனக் கொண்டாடுகின்றீர்களே இதற்கும் மாற்று மதத்தவர்கள் கொண்டாடக்கூடிய திருவிழாக்களுக்கும் கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கிறதா?


அவர்கள் யானையோடு உற்சவம் கொண்டாடுகிறார்கள். நீங்கள் யானையோடு சினிமாப்பாட்டுக்களை கொட்டடித்துக் கொண்டு கொடியேற்றுவிழா கொண்டாடுகிறீர்கள். அவர்கள் தேர் இழுத்தால் நீங்கள் சந்தணக் கூடு உரூஸ் கொண்டாடுகிறீர்கள். அவர்கள் சிலைக்கு பட்டுடுத்தி மாலை போட்டால் நீங்கள் கப்ருக்கு பச்சை போர்வை போர்த்தி பூ போடுகின்றீர்கள். அவர்கள் சிலைகளிடம் பிரார்த்தனை செய்தால் நீங்கள் கப்ரிலே கையேந்துகிறீர்கள். அவர்களுடைய விழாக்களிலே ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் கண்டுகளித்தால் நீங்களும் தர்ஹாக்களிலே ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் கண்டுகளிக்கிறீர்கள். இப்படி மாற்று சமுதாயத்தவர்களுக்கு ஒப்பாக நடத்தப்படும் தர்ஹா திருவிழாக்கள் நபியவர்கள் காட்டித் தந்தவையா? பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். இதோ கப்ருகளை தர்ஹாக்களாக கட்டி வழிபாடு நடத்துவர்களைப் பற்றி நபியவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

ஞாயிறு, மே 29

தொலைபேசியும் - பெண்களும்


முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.

இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

-------------------------------------------------------------------------------------------------------------
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து கொடுப்பது)

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:


மறுமைக்கு அஞ்சி வாழ்வோம்


 உரை: பக்கீர் முஹம்மது அல்தாஃபி



குழந்தைகளை எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது?


புதிய கல்வியாண்டு துவக்கத்தில் நாம் இருக்கிறோம். தம்முடைய குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கும், தாம் பெற்ற கஷ்டங்களைத் தங்கள் குழந்தைகள் பெறா வண்ணம் தடுக்கவும், அவர்களின் தரத்தை கல்வியின் மூலம் உயர்த்துவதற்கும் பெற்றோர்கள் நினைக்கின்றனர்.

தன்னுடைய குழந்தைகள், பிற குழந்தைகளை காட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல் அவர்கள் தேர்ந்தேடுக்கும் துறையில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவக்கப் பள்ளியில் சேர்க்கும் போதே,
தன்னுடைய குழந்தையை சாதனையாளராக மாற்றும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோர்களின் உள்ளத்திலும் உதிக்கிறது.

பெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி?


நவீன உலகத்தில், கருவறையில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? என அறிந்து பெண்ணாயிருப்பின் அதைக் கருவிலேயே சமாதி கட்டும் கொடூரம் நடந்து வருவதை நாமெல்லாம் செய்தித் தாள்கள் வாயிலாக அறிந்து வருகிறோம்.

சட்டம் இதை வன்மையாகக் கண்டித்தாலும் இக்கொடுஞ்செயலைச் செய்யும் கொடூர மனப்பான்மையுடையவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். இக்கொடூரத்தைத் தடுக்க 'தொட்டில் குழந்தைத் திட்டம்' என்ற திட்டத்தை தமிழக அரசு 1992ஆம் ஆண்டு தொடங்கியது.

பெண் குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள் அக்குழந்தையை வளர்க்க விரும்பவில்லையெனில் அரசுத் தொட்டி­ல் போட்டு விட்டுச் செல்லலாம். இக்குழந்தைகளை அரசு பராமரிப்பது மட்டுமின்றி, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் விரும்புவோருக்கு தத்துக் கொடுக்கிறது.

பெண்கள் பள்ளிக்கு சென்று தொழலாமா?


நன்றி ஆன்லைன் பி.ஜே.

இறைவனாக மாறும் அவ்லியாக்கள்?


                                                                                   பி. ஜைனுல் ஆபிதீன்

அவர்கள் வாதம்: மவ்லிதை வயிற்றுப் பிழைப்புக்காக ஓதுகிறார்கள் என்று கூறுபவர்கள் தான் சுப்ஹான மவ்லிது, முகைதீன் மவ்லித், சாகுல்ஹமீத் மவ்லித் என்று புத்தகங்கள் அச்சிட்டு வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகிறார்கள்.

நமது பதில்: சில ஆலிம்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மவ்லித் ஓதி வருகிறார்கள் என்ற நமது குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்காமல், மவ்லிதை வைத்துப் புத்தகம் அச்சிட்டு வருமானம் ஈட்டி வருவதாக நம்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதைக் காண்போம்.

மவ்லிதில் உள்ள மார்க்கத்திற்கு முரணான செய்திகளை அடையாளம் காட்டுவதற்காக, புத்தக வடிவில் நாம் அச்சிட்டு விற்பனை செய்து வருவதும் அதற்குச் சிறிய அளவில் இலாபம் வைத்து வருவதும் உண்மை தான்.

அதே நேரத்தில் நமது இணைய தளத்தில் இந்தப் புத்தகங்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம். விரும்புகிறவர்கள் அதை எந்தச் செலவும் இல்லாமல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயனடையலாம். நமது நோக்கம் இலாபம் மட்டும் என்றிருந்தால் இலவசமாக இந்நூல்களைப் பதிவிறக்கம் செய்ய அனுமதித்திருக்க மாட்டோம். மக்களிடம் உண்மையைச் சேர்க்க வேண்டும் என்பது தான் நமது நோக்கம் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்கும்.

ஜனாஸாவை எவ்வாறு குளிப்பாட்டுவது? குளிப்பாட்டும் போது என்ன ஓதுவது? யார் குளிப்பாட்டுவது?


ஜனாஸாவை எவ்வாறு குளிப்பாட்டுவது? குளிப்பாட்டும் போது என்ன ஓதுவது? யார் குளிப்பாட்டுவது? என்ற விவரங்களைத் தெளிவுபடுத்தவும்.

ஆண்களை ஆண்களும் பெண்களை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும். ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ நேரடியாக எந்தக் கட்டளையும் ஹதீஸ்களில் இல்லை. என்றாலும் குளிப்பாட்டுபவர் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் நிலை ஏற்படும் என்பதால் ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும், பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யலாம்.

குட்மார்னிங் சொல்வது குற்றமா ?


குட் மார்னிங், குட் ஈவினிங் என்று சொல்வது குற்றமா? இது மற்றவரை வணங்கிய  குற்றத்தில் சேருமா ? - ஷாகுல் ஹமீது
 
 
பதில் இதில் வணங்குதல் போன்ற எந்த அர்த்தமும்  இல்லை.குட்மார்னிங் (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங் (நல்ல மாலைப்  பொழுதாக இருக்கட்டும்) குட்நைட் (நல்ல இரவாக இருக்கட்டும்) ஆகிய வார்த்தைகள் பிரார்த்தனை வடிவத்தில் உள்ளன.பிரார்த்தனை செய்யும் தோரணையில் அமைந்துள்ள  இவ்வார்த்தைகளில் பிறரை வழிபடும் இணை வைப்பு இல்லை. எனவே இவ்வார்த்தைகளை ஒருவர்  கூறினால் பிறரை வழிபட்டவராக ஆக மாட்டார். 
 
மேலை நாட்டவர்களே இவ்வார்த்தைகளை உலகுக்கு கற்றுக் கொடுத்தனர். இஸ்லாம் மனித குலத்துக்கு சலாம் கூறுவதைக் கற்றுக் கொடுத்துள்ளது. இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ள ஸலாத்துடன் இவ்வாழ்த்துக்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ஸலாம் கூறுவதே சிறந்த வாழ்த்தாகவும் எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் பொருந்தக்கூடிய வாழ்த்தாகவும் அமைந்திருப்பதை அறிய முடியும். 

குட்மார்னிங், (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங், (நல்ல மாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்நைட், (நல்ல இரவாக இருக்கட்டும்) ஆகிய வார்த்தைகளை துக்கம் நிறைந்த ஒருவனிடம் கூற இயலாது. சுனாமியில் குடும்பத்தை இழந்த ஒருவனுக்கு நல்லகாலைப் பொழுது உண்டாகட்டும் என்று கூற இயலாது.அதுமட்டுமின்றி காலையில் சொன்ன வாழ்த்தை மாலையில் சொல்ல முடியாது. மாலையில் கூறிய வாழ்த்தை இரவில் கூற இயலாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி  உண்டாகட்டும்) என்ற வாழ்த்து இன்பத்தில் திளைத்தவனுக்கும் பொருந்தும். துன்பத்தில்  உழலுபவனுக்கும் பொருந்தும். இதைக் கூறுவதால் யாருடைய சுயகௌரவத்திற்கும் எந்தப்  பங்கமும் ஏற்படாது. 
 
நல்ல உறவு ஏற்படுவதற்கு ஒருபாலமாக ஸலாம் அமைந்திருக்கிறது. எனவே இந்த வாழ்த்துக்களைத் தவிர்த்துவிட்டு சலாம் கூறுவதற்கு இயலுமானால் நாம் சலாம்  கூறிக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் இந்த வாழ்த்துக்களைக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டால் இவற்றைக் கூறுவது இணைவைத்தல் என்ற குற்றத்தில் வராது. ஆனால் ஸலாம் எனும் அழகிய வழிமுறையினால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளை நாம் இழந்து விடுவோம்.
நன்றி ஆன்லைன் பி.ஜே

சிலைகளுக்குப் படைக்காதவற்றைத் தந்தால் அவற்றைச் சாப்பிடுவது கூடுமா ?


மாற்று மதத்தவர்கள் பொங்கல், தீபவாளி போன்ற பண்டிகைகளில் அவர்களின் சிலைகளுக்குப் படைக்காதவற்றைத் தந்தால் அவற்றைச் சாப்பிடுவது கூடுமா ?

மாற்று மதத்தவர்கள் தரும் பொருட்களை முழுமையாக இஸ்லாம் தடை செய்யவில்லை. நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்கள் தரும் பொருட்களைச் சாப்பிட்டுள்ளார்கள். அவர்களிடம் கேட்டும் வாங்கி உள்ளார்கள். தண்ணீர், உணவு, ஆடை என்று பல பொருட்களை மாற்று மதத்தவர்களிடமிருந்து பெற்றுள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்திகள் சான்றளிக்கின்றன.

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்கடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிருந்து (சிறிது) உண்டார்கள். அவளைக் கொன்று விடுவோமா? என்று (நபியவர்கடம்) கேட்கப்பட்டது. அவர்கள், வேண்டாம் என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்)அவர்கன் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (2617)

ஜின்கள் என்ன தவறு செய்கிறார்கள்? ஜின் இனம் என்பது ஷைத்தான் இனத்தின் ஒரு பிரிவா?


மனிதர்களும் ஜின்களும் நரகத்தில் இருப்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. மனிதர்கள் தவறு செய்கிறார்கள். எனவே அவர்களுக்கு நரகம் என்றால் சரி! ஜின்கள் என்ன தவறு செய்கிறார்கள்? ஜின் இனம் என்பது ஷைத்தான் இனத்தின் ஒரு பிரிவா? விளக்கவும். - ஹெச். செய்யது அலீ நிஜாம், நாகூர்

ஜின் இனம் என்பது மனிதர்களைப் போன்றே பகுத்தறிவு வழங்கப்பட்ட ஓர் இனமாகும். மனிதர்களுக்கு இறைவன் தனது தூதர்களின் மூலம் பல்வேறு கட்டளைகளை பிறப்பித்திருப்பது போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன. மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் இறுதித் தூதராக வந்தவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

சனி, மே 28

பயனளிக்காத உறவுகள்


திருக்குர்ஆனும் நபிமொழியும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை விளங்கி வைத்திருக்கின்ற ஒவ்வொருவரும் இந்த ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால் இவ்வாறு உறுதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றவர்களின் இறை நம்பிக்கையைப் பலவீனப்படுத்தி, ஆட்டம் காண ஷைத்தான் ஒரு குறுக்கு வழியைக் கையாள்கிறான். அந்தக் குறுக்கு வழியின் மூலம் வழிகெட்டு, வழிகேட்டின்பால் விழுவோரில் தீன்குலப் பெண்மணிகள் முதலிடம் வகின்றனர்.
இறை நம்பிக்கையில் உறுதியானவர்களின் உறுதியையும் ஆட்டம் காணச் செய்ய ஷைத்தான் நாடும் குறுக்கு வழி என்ன? அந்த நிலையை நாம் எவ்வாறு சரி செய்வது? என்பதைக் காண்போம்.
உறவு முன்னால்! கொள்கை பின்னால்!
எத்தனையோ விஷயங்களில், எவ்வளவு நேரங்களில் அல்லாஹ்வுடைய கட்டளையையும் நபி (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதலையும் உயிரினும் மேலாக மதிக்கும் கொள்கை உறுதி மிக்கவர்கள், தன்னுடைய சொந்த பந்தத்தில், குருதி உறவில் தன் உறுதியை இழந்து விடுவதை கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
தொடர்ந்து நபிவழியைப் பேணி வாழ்ந்தவர் தனது அண்ணனுடைய வரதட்சணை திருமணத்தில் கலந்து கொள்வதையும், தனது அண்ணன் மகனுடைய கத்னா எனும் சுன்னத் கல்யாணத்தில் (?) கலந்து கொள்வதையும், தனது அக்காள் மகள் காது குத்தில் கலந்து கொள்வதையும், தனது தம்பி மனைவியின் வளைகாப்பு வைபவத்தில் கலந்து கொள்வதையும், தனது தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவில் சீராட்டோடு கலந்து கொள்வதையும் குருதி உறவைக் காரணம் காட்டி ஈமானிய உறுதி குலையக் காரணமாவதை உதாரணமாகக் கூறலாம்.
ஏகத்துவத்தை பேசக்கூடிய எத்தனையோ கணவன்மார்கள் மேற்கூறியவையெல்லாம் தவறு, நபிவழிக்குப் புறம்பானது என்பதை பட்டும்படாமலோ, அழுத்தம் திருத்தமாகவோ சுட்டிக் காட்டினாலும் நம் தீன்குலப் பெண்மணிகள் ஏற்றுக் கொள்வதில்லை.
அவர்கள் எல்லாம் நம் நெருங்கிய உறவினர்கள் ஆயிற்றே! அவர்களது நிகழ்ச்சியில் நாம் எப்படி கலந்து கொள்ளாமல் இருக்க முடியும்? நாளை நமது வீட்டில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு அவர்கள் வரவேண்டாமா? என்று அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்துரைத்து கணவன்மார்களை சரிகட்டி மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபட்டு, பாவமூட்டைகளை சுமந்து கொள்கின்றனர். ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் இருப்பவர்களை வழிகெடுக்கும் ஷைத்தானின் குறுக்கு வழிகள் இதுதான்.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 495 மார்க்! மேலப்பாளையம் முஸ்லிம் பள்ளி மாணவர் சாதனை

திருநெல்வேலி : எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் நெல்லை மேலப்பாளையம் பீடி கம்பெனி கூலித் தொழிலாளி மகன் 495 மார்க் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஏ.சதாம் உசேன் 495 மார்க் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இவர் தமிழ் 98, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 என மொத்தம் 495 மார்க் பெற்றுள்ளார். இவரது தந்தை அப்துல்ரகுமான். மேலப்பாளையம் பீடிக்கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். தாய் சுலைகாபீவி பீடி சுற்றும் தொழிலாளி. மாணவனின் தங்கை சாஜிதா பானு 6ம் வகுப்பும், மற்றொரு தங்கை பாஸின் பாத்திமா 8ம் வகுப்பும் படித்து வருகிறார். தம்பி செய்யது சக்காரியா 1ம் வகுப்பு படித்து வருகிறார். சாதனை குறித்து மாணவன் சதாம் உசேன் கூறும்போது, "பள்ளியில் தினந்தோறும் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை அன்றே படிப்பேன். பள்ளி முடிந்தவுடன் தினமும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 11 மணி வரையிலும் படிப்பேன். பொழுதுபோக்கிற்காக கொஞ்சம் டிவி பார்ப்பேன். எனது வெற்றிக்கு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், நண்பர்கள், பெற்றோர் நல்ல ஊக்கம் அளித்தனர். மாநில அளவில் 2வது ரேங்க் கிடைக்க செய்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பிளஸ் 2 தேர்வில் அதிக மார்க் எடுத்து மெக்கானிக்கல் இன்ஜினியராக விரும்புகிறேன் என்றார்'. பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக்முகம்மது கூறுகையில், "மாநில அளவில் எங்கள் பள்ளி மாணவன் இரண்டாமிடம் பெற்றது மகிழ்ச்சியை தந்துள்ளது. பீடி கம்பெனியில் பணியாற்றும் ஏழை கூலித் தொழிலாளியின் மகனான சதாம் உசேன் கஷ்டப்பட்டு படித்து ரேங்க் பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்விலும் மாநில ரேங்க் பெற பயிற்சி அளிப்போம் என்றார்'.
               Dinamalar.com

இஸ்லாமியப் பார்வையில் தற்கொலை




இஸ்லாமியப் பார்வையில் தற்கொலை
வீடியோவை பார்க்க
புகைப்படத்தை சொடுக்கவும்.
ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து மாய்த்துக்கொள்வது தற்கொலை எனப்படும். உலகத்தில் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும், புகழோடும் வாழும் மனிதர்கள் அல்லது துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொண்டு நடப்பவர்கள் யாரும் தற்கொலை செய்வதில்லை..

யார் ஒருவன் துன்பத்தின் உச்சத்தில் இனி வாழ்வதற்கு வழியே இல்லை என நினைக்கிறானோ அவனே இவ்வழியை தேடிக் கொள்கிறான். எனவே இவ்வழி சரிதானா? இதற்க்கு இஸ்லலாத்தில் என்ன தீர்வு? என்பதைப் பற்றியும் இது போல் எண்ணங்கள் வந்தால் அதைக் களைய வேண்டிய வழிகள் என்னென்ன என்பதையும் காண்போம்.

தற்கொலை செய்யத் தூண்டும் காரணிகள்

ஒரு மனிதன் தற்கொலை செய்வதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் உந்துதலாகக் கருதப்படுகின்றன.

நோய், நொடி, முதுமை, குடும்பத்தாரின் அலட்சியம், தனிமைப்படுதல்,  பயம்,குழப்பம், பாதுகாப்பற்ற சூழல்,  மனஅழுத்தம், , மனக்கவலை, குற்றவுணர்வு,  இயலாமை,  வெட்கம், கடுமையான உடல்வலி, பொருளாதாரச் சிக்கல்கள், நம்பிக்கையிழத்தல் ஆழ்ந்த துக்கம், வரதட்சனை கொடுமை, காதல்தோல்வி, கள்ளக்காதல், கடன்தொல்லை, பயம்,  உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் பசி, பட்டினி, பஞ்சம்,  , கடவுளுக்கு பலி கொடுப்பது, விவாகரத்து, பிரிவுகள் மற்றும் உறவு முறிதல் இன்னும் பல...

வெள்ளி, மே 27

குமரியில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு - குடும்பத்துடன் அணிதிரள்வீர்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதர்களே !
                  தமிழகத்தில் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கும் வேளையில்,  குமரி மாவட்டத்திலும்  சத்திய இஸ்லாத்தை அதன் தூயவடிவில் மக்களுக்கு எடுத்துசொல்லிவருகிறோம் . அதன் தொடர்ச்சியாக ஏகத்துவ  பிரசாரத்தின் மூலம் மக்களின் விழிப்புணர்வை இன்னும் அதிகமாக்வும் சமுதாய மக்களின் கல்வி ஆர்வத்தை அதிகரிக்கவும் குமரியில் ஜூன் 5 , ஞாயிறு அன்று கோட்டார் சந்தி தெருவில் வைத்து மாபெரும் ''தவ்ஹீத்  ஏழுச்சி மாநாடு'' நடத்த முடிவு செய்து பணிகள்  இறைவன் கிருபையால் நடைபெற்று வருகின்றது, அல்ஹம்துல்லிலாஹ் .

          மாநாட்டின்  தலைப்புகளையும் மறுமையில் சுவனம் செல்லும் பாதையான ஏகத்துவத்தை மையமாக வைத்தே அமைகப்பட்டுள்ளது. சமுதாயத்தில் புரையோடி கிடக்கின்ற கலாசார சீரளிவுக்கு எச்சரிகை மணியாக இந்த மாநாட்டில் ''நரகத்திற்கு அழைக்கும்  நவீன கலாச்சாரம் ''என்ற தலைப்பும் ''தடம் புரளும் தவ்ஹீத் வாதிகள்'' தலைப்பும் பேசபட உள்ளது. இறுதியாக நாம் நேசிக்கும் தவ்ஹீத் நம் உயிரை விட மேலானது என்பதை பறைசாற்ற ''தவ்ஹீத் எங்கள் உயிர் மூச்சு'' என்ற தலைப்பில் P.J. அவர்கள் உரையாற்றுவார்கள்.

ஏகத்துவம் வளர்ந்த மண்ணில் நடைபெறுகின்ற  இந்த மாநாடு சிறப்பாக வெற்றி அடைய பிரார்த்திக்கவும் . இன்ஷா அல்லாஹ்.

 ஜூன் 5 இன்ஷா அல்லாஹ் குடும்பத்துடன் சங்கமிப்போம்.