பெண்கள் கத்னா செய்யத் தேவையில்லையென்று தாங்கள் சொல்லியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கத்னா செய்யப்பட்ட இரண்டு உறுப்புக்கள் சந்தித்தால் குளிப்புக் கடமையாகும் என்ற ஹதீஸை வைத்து பெண்களுக்கு கத்னா செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் .எனவே இதற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதரங்களுடன் விளக்கம் தரவும்.
முஹம்மத் நஸ் ரீன்
பதில் :
நீங்கள் குறிப்பிடும் செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
526 عَنْ أَبِي مُوسَى قَالَ اخْتَلَفَ فِي ذَلِكَ رَهْطٌ مِنْ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ فَقَالَ الْأَنْصَارِيُّونَ لَا يَجِبُ الْغُسْلُ إِلَّا مِنْ الدَّفْقِ أَوْ مِنْ الْمَاءِ وَقَالَ الْمُهَاجِرُونَ بَلْ إِذَا خَالَطَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ قَالَ قَالَ أَبُو مُوسَى فَأَنَا أَشْفِيكُمْ مِنْ ذَلِكَ فَقُمْتُ فَاسْتَأْذَنْتُ عَلَى عَائِشَةَ فَأُذِنَ لِي فَقُلْتُ لَهَا يَا أُمَّاهْ أَوْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكِ عَنْ شَيْءٍ وَإِنِّي أَسْتَحْيِيكِ فَقَالَتْ لَا تَسْتَحْيِي أَنْ تَسْأَلَنِي عَمَّا كُنْتَ سَائِلًا عَنْهُ أُمَّكَ الَّتِي وَلَدَتْكَ فَإِنَّمَا أَنَا أُمُّكَ قُلْتُ فَمَا يُوجِبُ الْغُسْلَ قَالَتْ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ وَمَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ رواه مسلم
ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து கத்னா செய்யப்படும் இரு உறுப்புக்கள் சந்தித்து விட்டாலே (இருவர் மீதும்) குளிப்பு கடமையாகிவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (579)
இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆணுறுப்பையும் பெண்ணுறுப்பையும் கிதான் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள். இந்த வார்த்தைக்கு கத்னா செய்யப்பட்ட
உறுப்பு என்று பொருள் இருக்கின்றது.இதே வார்த்தையைக் கொண்டு பெண்ணுறுப்பைப் பற்றி கிதான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவதால் ஆண்களுக்கு கத்னா செய்வதைப் போன்று பெண்களுக்கும் கத்னா செய்யும் நடைமுறை அன்றைய காலத்தில் இருந்துள்ளது என்ற வாதத்தைச் சிலர் வைக்கின்றனர்.
அரபு மொழியில் பரவலாக உள்ள ஒரு நடைமுறையைத் தெரியாதவர்களே இந்த வாதத்தை வைத்து வருகின்றனர். அந்த நடைமுறையைத் தெரிந்து கொண்டவர்கள் இந்த வாதம் தவறானது என்பதை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
இரண்டு பொருள்களை ஒரு பொருளின் பெய்ரால் குறிப்பிடுவது அரபுகளிடம் சர்வசாதாரணமான நடைமுறையாகும். இரண்டு பொருட்கள் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தால் அல்லது ஒன்றையொன்று ஒத்திருந்தால் அவற்றில் ஒன்றின் பெயரை மற்றதற்கும் சொல்லும் வழக்கம் அரபுமொழியில் தக்லீப் எனப்படுகிறது. பின்வரும் செய்திகளைக் கவனித்தால் இதைத் தெளிவாக அறியலாம்.
பேரீச்சம் பழத்தின் நிறம் கறுப்பாக இருப்பதால் இதை அஸ்வத் (கறுப்பு நிறம் கொண்டது) என்றும் அரேபியர்கள் அழைப்பார்கள். ஆனால் நீருக்கு நிறம் கிடையாது.
பேரீச்சம் பழத்துடன் நீரும் சேர்த்து பருகப்படுவதால் பேரீச்சம் பழத்திற்குரிய அஸ்வது என்ற சொல்லை நீருக்கும் சேர்த்து பயன்படுத்துவார்கள். இவ்விரண்டையும் குறிக்க அஸ்வதானி (இரு கருப்பான பொருட்கள்) என்று கூறுவார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
2567حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الْأُوَيْسِيُّ حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ لِعُرْوَةَ ابْنَ أُخْتِي إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلَالِ ثُمَّ الْهِلَالِ ثَلَاثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ وَمَا أُوقِدَتْ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَارٌ فَقُلْتُ يَا خَالَةُ مَا كَانَ يُعِيشُكُمْ قَالَتْ الْأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ إِلَّا أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِيرَانٌ مِنْ الْأَنْصَارِ كَانَتْ لَهُمْ مَنَائِحُ وَكَانُوا يَمْنَحُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَلْبَانِهِمْ فَيَسْقِينَا رواه البخاري
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், “என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது” என்று கூறினார்கள். நான், “என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்தினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரு கருப்பான பொருள்கள்: (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர் ஆகும் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (2567)
இதை ஆதாரமாக வைத்து தண்ணீர் கறுப்பாக இருக்கும் என்று அறிவுடைய மக்கள் விளங்க மாட்டார்கள்.
கஅபாவில் ருக்னுல் யமானி என்ற மூலை ஒன்று உள்ளது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முத்தமிட்டுள்ளார்கள். இதைப் போன்று ஹஜருல் அஸ்வதையும் முத்தமிட்டுள்ளார்கள்.
ருக்னுல் யமானியுடன் ஹஜருல் அஸ்வதைச் சேர்த்துக் கூறும் போது மட்டும் ருக்னைனனி யமானியையனி இரண்டு ருக்னுல் யமானிகள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
1609حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا لَيْثٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَمْ أَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُ مِنْ الْبَيْتِ إِلَّا الرُّكْنَيْنِ الْيَمَانِيَيْنِ رواه البخاري
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
இரண்டு ருக்னுல் யமானிகைளத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை.
நூல் : புகாரி (1609)
பொதுவாக ஹதீஸில் அதான் என்ற சொல் தொழுகைக்குரிய பாங்கைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. பாங்கின் சில வாசகங்கள் தொழுகை ஆரம்பிப்பதற்கு முன் சொல்லப்படும். இதற்கு இகாமத் என்று சொல்லப்படுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாங்கையும் இகாமத்தையும் அதானைனி இரண்டு பாங்குகள் என்று குறிப்பிடுள்ளார்கள். அதாவது பாங்கிற்குரிய சொல்லை இகாமத்திற்கும் பயன்படுத்தியுள்ளார்கள்.
624حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ قَالَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ الْجُرَيْرِيِّ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ ثَلَاثًا لِمَنْ شَاءَ رواه البخاري
அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இரு பாங்குகளுக்கு இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. இரு பாங்குகளுக்கு இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு” என்று (இரண்டு முறை) கூறிவிட்டு, மூன்றாம் முறை “விரும்பியவர் (அதைத்) தொழலாம்” என்றார்கள்.
நூல் : புகாரி (624)
மார்க்கத்தில் ஃபஜர் தொழுகையும் அஸர் தொழுகையும் அதிக முக்கியத்துவப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது. இவ்விரண்டு தொழுகைகளையும் நபி (ஸல்) அவர்கள் அஸரைனி இரண்டு அஸர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஃபஜர் தொழுகையை மட்டும் தனியே குறிப்பிட்டால் அதை அஸர் என்று கூறமாட்டோம். ஆனால் அஸருடன் அதைச் சேர்த்துச் சொல்லும் போது ஃபஜருக்கும் இதே வார்த்தை பயன்படுத்தப்படும்.
364حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ أَخْبَرَنَا خَالِدٌ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ فَضَالَةَ عَنْ أَبِيهِ قَالَ عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ فِيمَا عَلَّمَنِي وَحَافِظْ عَلَى الصَّلَوَاتِ الْخَمْسِ قَالَ قُلْتُ إِنَّ هَذِهِ سَاعَاتٌ لِي فِيهَا أَشْغَالٌ فَمُرْنِي بِأَمْرٍ جَامِعٍ إِذَا أَنَا فَعَلْتُهُ أَجْزَأَ عَنِّي فَقَالَ حَافِظْ عَلَى الْعَصْرَيْنِ وَمَا كَانَتْ مِنْ لُغَتِنَا فَقُلْتُ وَمَا الْعَصْرَانِ فَقَالَ صَلَاةُ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَصَلَاةُ قَبْلَ غُرُوبِهَا رواه أبو داود
ஃபளாலா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பல செய்திகளை) எனக்கு கற்றுத் தந்தார்கள். ஐந்து நேரத் தொழுகைகளை பேணிக் கொள் என்று கூறினார்கள். இந்த நேரங்களில் எனக்கு அதிகமான வேலைகள் உள்ளன. நான் எதைச் செய்தால் எனக்கு போதுமானதாகுமோ அத்தகைய பொதுவான ஓர் உத்தரவை இடுங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், இரு அஸர் (தொழுகை)களை நீ பேணிக் கொள் என்று சொன்னார்கள். அது எங்களுடைய பேச்சு வழக்கில் இல்லாததால் இரு அஸர்கள் என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள தொழுகையும் சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையுமாகும் என்று பதிலளித்தார்கள். இந்தச் செய்தியும் அவர்கள் எனக்கு கற்றுத் தந்தவற்றில் உள்ளதாகும்.
நூல் : அபூதாவுத் (364)
கமர் என்றால் சந்திரன். சூரியனையும் சந்திரனையும் கமரைனி இரண்டு சந்திரன்கள் என்று அரேபியர் கூறுவார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் உமரைனி (இரண்டு உமர்கள்) என்று குறிப்பிடும் வழக்கமும் உள்ளது.
அல்அபு என்றால் தந்தை என்று பொருள். தாய் என்பதற்கு அரபியில் உம்மு என்ற சொல் உள்ளது. ஆனால் தாய் தந்தை ஆகிய இருவரையும் குறிப்பிடும் போது அபவைனி இரண்டு தந்தைகள் என்று கூறும் வழக்கம் உள்ளது. இது மாதிரியான சொற்பிரயோகம் ஹதீஸ்களில் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை ஆதாரமாக வைத்து ஒருவனுக்கு இரண்டு தந்தைகள் என்று யாரும் கூற மாட்டோம்.
நபி (ஸல்) அவர்கள் பெண்ணுறுப்பை கிதான் (கத்னா செய்யப்பட்டது) என்று கூறியது இந்த அடிப்படையிலாகும். இது ஆணுறுப்புடன் சேர்த்து சொல்லப்படுவதால் ஆணுறுப்புக்கு மட்டும் உரிய இந்த வார்த்தையை பெண்ணுறுப்புக்கும் பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் உண்மையில் பெண்ணுறுப்பு கத்னா செய்யபடக்கூடியதல்ல.
மேலும் இது நபிகள் நாயகம் காலத்துக்கு முன்பிருந்தே அரபுகளிடம் இருந்த சொல் வழக்காகும்.
எனவே பெண்களுக்கு கத்னா செய்யலாம் என்பதற்கு இது ஆதாரமாகாது.