நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோருக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்துள்ளான். (அல்குர்ஆன் 5:9)
நோன்புப் பெருநாளை ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் காட்டியுள்ள அழகிய செயலே ஸதக்கத்துல் ஃபித்ர் என்னும் இந்த நோன்புப் பெருநாள் தர்மம். நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒவ்வொரு முஸ்லிமும் கொடுக்க வேண்டிய கட்டாயக் கடமையாகும்.
அடிமைகள், அடிமைகள் அல்லாதவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரிச்சம்பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனும்(அளவை) நபி(ஸல்) அவர்கள் நிர்ணையித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புஹாரி 1503, முஸ்லிம்
மேலே கூறப்பட்ட ஹதீஸில், நோன்புப் பெருநாள் தர்மம் என்பது நமக்கெல்லாம் கட்டாயக் கடமை என்பதும், அதைப் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் கொடுத்து விட வேண்டும் எனவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் பெருநாள் தர்மத்தின் நோக்கம் பற்றி நபி(ஸல்) அவர்கள் கீழ்கண்டவாறு கூறினார்கள்.
நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்கு பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் (பெருநாள்) தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: அபூதாவூத்
மேலே கூறப்பட்ட ஹதீஸில் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் பெருநாள் தொழுகைக்கு முன்பு கொடுப்பதையும், பின்பு கொடுப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் காட்டியுள்ளார்கள். பெருநாள் தொழுகைக்குப் பினனால் கொடுத்தால் ஏழைகளுக்கு பெருநாள் கொண்டாட உதவாது என்பதால் அதை சாதாரண தர்மம் எனக் கூறுகிறார்கள்.
யாருக்குக் கடமை!
மேற்கண்ட ஹதீஸில், நோன்பில் ஏற்படும் தவறுகளுக்கு பரிகாரமாக இந்த தர்மம் கடமையாக்கப்பட்டதாக கூறினாலும், நோன்பு நோற்காதவர்களுக்கும் இது கடமையாகும். மேற்கண்ட ஹதீஸில் நோன்பின் தவறுகளுக்கு பரிகாரமாக வேண்டும் என்றும், ஏழைகள் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்றும் இரு நோக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன.
நோன்பு நோற்றவர்கள் இந்த இரு பயன்களையும் பெற்றுக் கொள்ளலாம். நோன்பு நோற்காதவர்கள் ஏழைகள் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாட உதவுவதால் ஏற்படும் நன்மையைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே ஒருவர் தமக்காகவும், தமது பெற்றோர், மனைவி, பிள்ளைகள் மற்றும் தமது பராமரிப்பிலுள்ள அனைவருக்காகவும் இந்த பெருநாள் தர்மத்தை வழங்க வேண்டும்.
ஃபித்ராவின் அளவு!
தமது பராமரிப்பிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு 'ஸாவு' அளவு என நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள். ஸாவு என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு முகத்தல் அளவையாகும். இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்ளினால் எவ்வளவு வருமோ அந்த அளவே ஒரு 'ஸாவு' (சுமார் இரண்டரை கிலோ) எனப்படும்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு ஸாவு உணவை நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக்கட்டி, பேரிச்சம்பழம் ஆகியவை தான். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) நூல்: புஹாரி 1510
எப்படி கொடுப்பது?!
ரமளானின் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி(ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புஹாரி 3275, 5010
நாஃபிஉ (ரஹ்) கூறுகிறார்கள்...
மேலும் பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித் தோழர்கள் (இந்த தர்மத்தைக்) கொடுத்து வந்தார்கள். (புஹாரி 1511)
நபி(ஸல்) அவர்கள் பேரீச்சம்பழத்தில் ஒரு ஸாவு என்று நோன்புப் பெருநாள் தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்ட ரகமான பேரிச்சம்பழங்களை கொண்டு வந்தார். அதை நபி(ஸல்) அவர்கள் (பெற்றுக் கொள்ளாமல்) இந்த பழத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ரவாஹா(ரலி) நூல்கள்: ஹாகீம்
இதன் மூலம் தர்மம் செய்யப்படும் பொருள் தரமானதாகவும், நிறைவானதாகவும் இருக்க வேண்டும். மேலும் ஃபித்ராவை குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுத்துவிட வேண்டும் என்பதையும், கூட்டாக வசூலித்து வினியோகம் செய்யலாம் என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.
பெருநாளின் சிறப்பு!
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவை வந்தடைந்த போது மதீனாவாசிகளுக்கு விளையாடுவதற்கென இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரு நாட்களில் மதீனா வாசிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் இந்த இருநாட்கள் எவ்வகையைச் சேர்ந்தது எனக் கேட்டார்கள்? அதற்கு அவர்கள் அறியாமைக் காலத்தில் (இந்த நாட்களில்) நாங்கள் விளையாடக் கூடியவர்களாக இருந்தோம். என்றனர். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் அவ்விரு நாட்களை விடச் சிறந்ததாகவும், அவ்விரு நாட்களுக்கு பதிலாகவும் அள்ஹா (எனும் ஹஜ்ஜுப் பெரு) நாளையும், 'பித்ரு (எனும் ரமளான் பெரு) நாளையும் வழங்கியிருக்கிறான். என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: ஸஹீஹ் அபூதாவூத் 1004
இந்த இரண்டு நாட்களிலும் தொழுவது, குத்பா (பிரசங்கம்) செய்வதும் கேட்பதும், வேறு சில கடமைகளை செய்வதும் நபிவழியாகும்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு மற்றும் ஹஜ்ஜு பெருநாட்களில் முஸல்லா எனும் மைதானத்திற்கு செல்பவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர் : அபு ஸயிது அல் குத்ரி(ரலி) - புஹாரி 956
இந்த ஹதிஸின் அடிப்படையில் பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழாமல் திடலுக்கு சென்று தான் தொழ வேண்டும். அதுவும் நாம் வாழ்ந்து வரும் துபையில் பிரத்தியேகமாக பெருநாள் தொழுகைக்கென்றே ஈத்கா அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு சென்று தான் தொழ வேண்டும்.
'நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், 2வது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறுவார்கள். இவ்விரண்டு தக்பீர்களையும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) – திர்மிதி 492, அபுதாவுத்
சாதாரண தொழுகையில் உள்ள எல்லா அம்சங்களும் பெருநாள் தொழுகையில் உண்டு. 12 தக்பீர்கள் மட்டும் தான் மேலதிகமான செயலாகும்.
அதே போல் இவ்வாறு இமாம் தக்பீர் கூறும் போது கைகளை காது வரை உயர்த்தி அவிழ்த்து கட்டும் முறை பரவலாக காணப்படுகிறது. ஆனால் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அவ்வாறு இருந்ததாக ஹதீஸ்களில் காணப் படவில்லை. ஏனெனில் தக்பீர் என்பது வாயால் சொல்வது தான் என்பதை நாம் விளங்கி செயல்பட வேண்டும். ஆதாரமில்லாத செயல்களை செய்து நம் தொழுகைகளை பாழ்படுத்தி விடக்கூடாது.
பெருநாள் தினங்களில் தக்பீர் என்ற பெயர்களில் நாம் பல விதமான வாசகங்களை சொல்லி வருகிறோம். அவ்வாறு ஓதுவதற்கு நபிவழியில் எந்த விதமான ஆதாரமும் இல்லை. வரக்கூடிய ஹதீஸ்கள் அத்தனையும் பலவீனமானவையாகும். எனவே இவ்வாறு ஓதுவதை விட நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த திக்ருகளை அதிகமதிகம் ஓதலாம். மேலும் பெருநாள் தொழுகை முடிந்தவுடன் உரை நிகழ்த்துவார்கள்.
'நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்கு) தயாராகி தொழுகையை துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்கு சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்து கொண்டு பெண்களுக்கு போதனை செய்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) - புஹாரி 961
இதனடிப்படையில் குத்பா உரையை கேட்க வேண்டும் என அறிய முடிகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் தொழுகை முடிந்தவுடன் இடத்தை விட்டு வெளியேறி விடுகிறோம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் பெண்கள் பகுதிக்கும் சென்று உரை நிகழ்த்தினார்கள் என்றால் பெருநாள் உரை எந்தளவுக்கு அவசியம் என்பதை உணர்ந்து உரை முடிந்தவுடன் கலைந்து செல்வது தான் நபி வழியாகும்.
பெருநாள் தொழுகையில் பெண்கள்!
'பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும் கூடாரத்திலுள்ள கண்ணிப் பெண்களையும், மாதவிடாய் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்கு பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆ செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர் : உம்மு அதிய்யா(ரலி)- புஹாரி 971
பாதையை மாற்ற வேண்டும்!
பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள்அ ஒரு (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி) நூல்கள்: புகாரி 986
ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால்...
'இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்து உள்ளன. யார் இந்த பெருநாள் தொழுகையை தொழுகின்றாரோ அவர் ஜும்மா தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்மா தொழுகையை நடத்துவோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுஹுரைரா(ரலி) - அபுதாவுத் 907
ஷவ்வால் மாத ஆறு நோன்பு!
அதேப்போல் ரமளான் முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
'யார் ரமளான் மாதம் நோன்பு நோற்று அதை தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நாட்கள் நோன்பு நோற்கின்றாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அபூ அய்யுப்(ரலி) நூல்கள்: முஸ்லிம் 1984, திர்மிதி, அபுதாவுத்
மேலும் நம் பகுதியிலுள்ள மக்கள் இந்த நோன்பை பெண்களுக்கு உண்டானது என்று கூறி ஆண்கள் அலட்சியமாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ்வும் அவனது ரஸுலும் அப்படி கட்டளையிடவில்லை. அதனால் சுன்னத்தான நோன்பு தானே என அலட்சியமாக இருக்காமல் அல்லாஹ்வின் அன்பைப்பெற முயற்சிக்க வேண்டும்.
பெருநாளை தொடர்ந்து ஷவ்வால் மாதம் முழுவதும் நமக்கு வசதியான நாட்களில் இந்த ஆறு நோன்புகளையும் நோற்று காலமெல்லாம் நோன்பு நோற்ற பலனை அடைந்திட முயற்சி செய்ய வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர் மீதும் அருள் செய்திடுவானாக!
இந்த ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் தர்மம் அனைத்து ஏழைகளுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வும், அவனது ரஸுலும் காட்டித்தந்த வழியில் ஆண்டுதோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உலகம் முழுவதும் உள்ள தமிழ் முஸ்லிம்களிடமிருந்து வசூல் செய்து தாயகத்திலுள்ள ஏழைகளைச் தேடிச்சென்று பெருநாளை அவர்களும் மகிழ்வுடன் கொண்டாட தேவையான உணவுப் பொருட்களை கண்ணியமான முறையில் வினியோகம் செய்து அல்லாஹ்வின் பேரருளால் அரும்பணியாற்றி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அதன் முறையான கணக்கு விபரங்களை உணர்வு வார இதழில் வெளியிட்டு வருகிறது. சென்ற ஆண்டு வளைகுடா வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களிடம் மட்டும் வசூல் செய்த தொகை ஏறத்தாழ ரூ.8லட்சம்.அதை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்துள்ளது. எனவே இவ்வருடமும் தங்களின மேலான ஆதரவை அல்லாஹ்வுக்காக நல்கி ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.