-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளி, மே 11

கோவையைக் குலுக்கிய குடும்பவியல் மாநாடு!


DSC09878
கோவை: கடந்த மே 6ஆம் தேதி கோவையில் நடைபெற்ற மாவட்ட மாநாடு கோவையை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மாநாட்டுத் திடல் மட்டுமல்ல; திடலைச் சுற்றியுள்ள பகுதிகளும் மக்கள் வெள்ளத்தால் மிதந்தன...
மாவட்டம் தழுவிய அளவில் நடைபெறக்கூடிய ஒரு மாநாட்டிற்கு இந்த அளவிற்கு மக்கள் வெள்ளம், அதுவும் பெண்கள் வெள்ளம் சாரை சாரையாக வந்து கலந்து கொண்டது காண்போரை வியக்க வைத்தது. அல்ஹம்துலில்லாஹ்….


காலை 10 மணிக்கு மாநாட்டின் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மாநாட்டிற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் கோவை ரஹீம் தலைமை வகித்தார்.
கண்ணைக் கவர்ந்த அரங்கங்கள் :

திங்கள், மே 7

இலவச ஆன்லைன் கல்வி போர்ட்டல்!


இலவச ஆன்லைன் கல்வி"க்காக ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்காக அனைத்து பாடநூல்களையும் தொகுத்து அழகாக ஒரு இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சமச்சீர் கல்வி ஆன்லைன் எஜுக்கேஷனில் 1 - 12 வகுப்பு பாடங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆங்கில, தமிழ் பாட புத்தகங்கள், செவிலியர் பயிற்ச்சி ஆங்கில மற்றூம் தமிழ் பாடங்கள், மாதிரி வினா தாள்கள், 2009 / 2010 / தேர்வு கேள்விதாள்கள் மற்றூம் இன்னும் நிறைய படிப்பு சம்பந்தமான புத்தகங்களை இனிமேல் இலவசமாக டவுன்லோட் செய்து படிக்கலாம். இதை ஆரம்பிக்கும் எண்ணமும் அதன் பயன்பாடும் குறித்து இந்த இணைய தளத்தை உருவாக்கியிருப்பவர் கூறும் விஷயங்கள்......

1. இனிமேல் உங்கள் குழந்தை பள்ளியைத் தவிர வேறு எங்கு சென்றாலும் பொதியைச் சுமக்க தேவையில்லை.

2. நீங்கள் எதாவது ஒரு காரணத்திற்காக வெளியூர் சென்றாலும் ஆன்லைனில் படிக்கவும் படிப்பு சொல்லி கொடுக்கவும் மிகவும் எளிதானது.

3. புத்தகங்கள் தொலைந்து விட்டால் உடனே புத்தகம் வாங்க அல்லது தேட அவசியமில்லை. இங்கு அனைத்து புத்தகங்களின் டிஜிட்டல் காபி உள்ளது.

4. ஏதாவது ஒரு பாடத்தில் சந்தேகம் இருந்தால் உடனே அந்தப் பக்கத்தை "பேஜ் மார்க்" செய்து ஆசிரியருக்கோ அல்லது பெற்றோருக்கோ அனுப்பினால் அவர்கள் அங்கு நோட்ஸ் போட்டு உடனே பதிலை அனுப்பினால் உங்களுக்கு மட்டும் அந்தப் பக்கங்கள் கிடைக்கும்.

5, பரிட்ச்சை முடிந்தவுடன் அடுத்த வருஷ சிலபஸுக்காக வெயிட் பண்ண தெவையில்லை. இங்கு அடுத்த வருடத்திற்கான புத்தகம் உடனே எடுத்து விடுமுறையில் பயிற்சி செய்யலாம்.

6. மாதிரி வினாத்தாள் மற்றும் மாடல் கொஸ்டீன் பேப்பர் மற்றும் கடந்த இரண்டு வருட கேள்விதாள் இங்கு உங்களுக்காக வைக்கபட்டுள்ளது. அதனால் நன்கு பயிற்சி செய்யலாம்.

7. முக்கியமாக வெளி நாட்டில் உள்ள இந்தியர்கள் இந்தப் புத்தகத்தை அல்லது தமிழ் புத்தகங்களை இலவசமாக லாகின் செய்து தங்கள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தலாம்.

8. பள்ளி மற்றும் டுட்டோரியல் கல்லூரிகளில் "புரஜக்டர்" மூலம் இனைத்தால் இந்த ஈ புத்தகத்தைப் பெரிய திரையில் காண்பித்து எல்லொரும் படிக்க ஏதுவாக இருக்கும்.

9. இந்த ஆன்லைன் இப்பொழுது தமிழக முதல்வர் கொடுத்திருக்கும் இலவச மடிகணனி வழியாக படிக்க நல்ல ஒரு வாய்ப்பு.

10. ஈ ரீடர் எனும் இன்ஸைட் டேப்ளட் கம்ப்யுட்டரும் அதில் இதிலுள்ள அனைத்து புத்தகங்களும் இன்டர்னெட் இல்லாமல் படிக்க ரூபாய் 999/- அறிமுகபடுத்தப்படுகிறது.

இந்த போர்ட்டலில் எந்த ஒரு புத்தகத்தையும் புரட்டி படிக்க முடியும். அது போக எந்தப் பக்கத்துக்கும் நேராக செல்ல முடியும். புக்மார்க் வைக்க முடியும். அது போக நோட்ஸ் மற்றும் ரெஃபரன்ஸ் எழுத முடியும். அந்த ஸ்பெஸல் நோட்ஸ் உங்கள் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும். ஆட்டோ ஃபிளிப் பட்டனை அமுக்கினால் அந்த புத்தகம் அதுவே புரட்டும். அது போக ஜூம் இன் ஜூம் அவுட் வசதி உள்ளதால் எவ்வளவு பெரிதாக வேண்டுமானலும் ஜூம் செய்து கொள்ளலாம். சில புத்தகங்கள் ஆடியோ வசதி செய்யபட்டுள்ள்து.

www.samacheeronline.com

பள்ளிக்கல்விக்கு மிகுந்த பயனுள்ள மேற்கண்ட மூன்று இணையதள முகவரிகளின் மூலம் அணுகலாம். Source

சனி, மே 5

குர்ஆன் இறைவேதமா விவாதம்: SAN தரப்பு வாதங்களும் TNTJ வின் பதில்களும்!



குர்ஆன் இறைவேதமா விவாதம் SAN தரப்பு வாதங்களும் TNTJ வின் பதில்களும்!

வாதம்:1 குர்ஆன் அனைத்தையும் சுருக்கமான வார்த்தை கொண்டு விளக்கும் என்கிறீர்கள் தொழுகைஇநோன்புஇஜகாத்இஹஜ் பற்றி குரானில் இருந்து காட்டுங்கள்? இதனால் குர்ஆன் இறைவேதமில்லை.

(எவ்வளவு அற்புதமான வாதம்யா?)

மறுப்பு: இதற்கு குர்ஆனிலேயே விளக்கம் இருக்கிறது.முஹம்மது நபி அவர்கள் குரானில் கூறப்பட்ட விஷயங்களுக்கு விளக்கக்கூடியவராகவும் இருக்கிறார் என்று குர்ஆனே சொல்கிறது?


43, 44. (முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம்.நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும்இ அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். குர்ஆன் 16:44.

வாதம்: 2  பூமியில் சில பகுதிகளில் பகலாகேவே அல்லது இரவாகவே இருக்கிறது. இவர்கள் எப்படி தொழுவார்கள் இதை குர்ஆன் விளக்கவில்லை? இதனால் குர்ஆன் இறைவேதமில்லை.

(3 மாதம் ஓடனது வேலை செய்து)

இஸ்லாத்தின் பார்வையில் கூட்டுக் குடும்பம்!


காலத்திற்கேற்ற பயனுள்ள கட்டுரை. மாஷா அல்லாஹ், குர் ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு, ஆசிரியர் எளிமையான முறையில் விளக்கி இருக்கிறார்கள்.

சூழ்நிலைகள், தவிர்க்கமுடியாது போன்ற காரணங்களை சொல்லி தப்பித்துக்கொள்ளாமல், முடிந்த வரை தவறுகளில் இருந்தும் தவிர்ந்து கொள்ளவேண்டும். அதே சமயத்தில் கூட்டுக்குடும்பங்களில் ஏற்படக்கூடிய, ஆசிரியர் சுட்டிக்காட்டிய தவறுகளில் இருந்தும் தவிர்ந்து கொண்டு, கூட்டுக்குடும்பமாக வாழ்வதற்கு இஸ்லாத்தில் தடையேதும் இல்லை என்று நினைக்கிறேன். அல்லாஹ் அஃலம். படிப்பதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் மற்றும் உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தனது. கூட்டுக் குடும்பம்!இது இந்தியர்களால் அதுவும் குறிப்பாக தமிழர்களால் பெரிதும் விரும்பக்கூடியதாக இருந்தது; இப்போதும் பலர் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். இதில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல!

கூட்டுக்குடும்பம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது ஒருவர் தம் மனைவி மக்களுடன் மற்றும் அவருடைய சகோதரர்களுடைய மனைவி மக்கள் ஆகிய அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வருதைக் குறிப்பதாகும். ஒருவர் தன்னுடைய பெற்றோர்களைக் கவனிப்பது என்பது அவர் மீது கடமையாக இருப்பதால் அவர்களை தம்மோடு வைத்துப் பராமரிப்பதை கூட்டுக் குடும்பம் என்பதில் சேர்க்க இயலாது என்பதைக் கவனத்தில் கொண்டு
இக்கட்டுரையைப் படிக்கவும்.

சினிமா, டீவி போன்றவற்றின் மூலமாக ஆபாசங்கள் வீடுதேடி வந்துக் கொண்டிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் கூட்டுக்குடம்பமாக வாழ்கின்ற பலர் இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற ஷீரீஅத்தின் சட்டதிட்டங்களை மீறியவர்களாக உள்ளனர்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஒரு பெண் அந்நிய ஆடவர் முன்னிலையில் எப்படி ஆடையணிய வேண்டும் என்பதை மிக அழகாகவே எடுத்துரைப்பதோடல்லாமல் யார் யாரெல்லாம் அந்நிய ஆடவரில்லை என்பதையும் தெளிவாகவே கூறியிருக்கின்றது.

யார் அந்நிய ஆடவர்?

புதன், மே 2

இறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில்!


பொதுவாக இறைவனோடு மற்றவர்களையும் அதாவது பெரியார் களையும், ஷெய்ஹு மார்களையும், பீர்களையும், அவ்லியா க்களையும், இறைநேசர்களையும் பிராத்திப்பவர்கள் பின்வரும் காரணங்களில் சிலவற்றையோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தையோ கூறுவர்.

அவைகள் யாவை எனில், நீதிபதியிடம் வாதாடுவதற்காக ஒரு வக்கீல் தேவையல்லவா ? அதுபோல் நாங்கள் அவ்லியாக்களிடம் الله விடம் வாதாடுவதற்காக முறையிடுகிறோம் நாங்கள் கேட்பெதல்லாம் கிடைக்கிறது. அதனால் தான் தொடர்ந்து கேட்கிறோம் நாங்கள் பாவங்கள் செய்த பாவிகளாக இருக்கின்றோம். அதனால் பாவமே செய்யாத இறைவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் الله விடம் எங்களின் தேவைகளைக் கேட்டுப் பெற்றுத் தருவார்கள் நல்லடியார்கள் கேட்கும் துஆ இறைவனால் மறுக்கப்பட மாட்டாது. அதனால் அவர்கள் மூலம் இறைவனிடம் கேட்கிறோம் மார்க்கத்தில் சிறிதளவு விபரமுள்ள இன்னும்சிலர் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப்பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம.

நாங்கள்ஒன்றும் புதிதாக இதைச்செய்யவில்லை. எங்கள் முன்னோர்களும், மூதாதையர்களும் அவ்லியாக்களிடம் முறை யிட்டுத்தானே தேவைகளைப் பெற்றுவந்தர்கள். அவர்கள் என்ன ஒன்றும் விளங்காதவர்களா?

எங்கள் ஆலிம்களும் மற்றும் ஹஜ்ரத் மார்களும் இதைச் செய்கிறார்களே, அவர்களும் தவறு செய்கிறார்களா?

அல்லாஹ் தன்திருமறையில் الله ஒருவனையே வணங்கவேண்டும் என்றும், அவன் ஒருவனிடமே உதவிதேட வேண்டும் என்றும் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்க கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போர் எடுத்து வைக்கும் மேற்கூறப்பட்ட வாதங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஆராய்வோம்.

ஒரே இறைவன் ஒரே தூதர் ஒரே வேதம் முஸ்லிம்களிடம் ஏன் முரண்பாடு?


இந்த தலைப்பு இன்றைய முஸ்லிம்களின் வாழ்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?


அல்லாஹ் தன் இறைச் செய்தியில் குறை வைத்து விட்டானா அல்லது நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய செய்தியை அறிவிப்பதில் குறை வைத்து விட்டார்களா? நவூது பில்லாஹ் இதை நாம் முடிவு செய்ய வேண்டிய எந்த அவசியமும் உரிமையும் நமக்கில்லை. ஏனென்றால் இறைவனும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் தங்கள் கடமையை சரியாக செய்து விட்டனர். நாம் தான் நமது கடமையை சரியாகச் செய்யாமலும் மார்க்கத்தை சரியாக விளங்காமலும் ஒரு இயக்கம் பிற இயக்கத்தை குறை கூறியும் காலத்தையும் நேரத்தையும் வீணடித்து இறைவனுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து வருகிறோம்.

நிறைய முஸ்லிம்கள் மார்க்கத்தை அறிவதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. பொருளாதாரத்தை பெருக்குவதில் தான் குறியாக உள்ளனர். மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும் போது நிம்மதியும் சந்தோசமும் திருப்தியும் அதிகமாகிறது. பொருளாதாரம் அதிகரிக்கும் போது நிம்மதியின்மையும், தூக்கமின்மையும், பாவச் சுமையும், பொய்யும், புரட்டும், இன்னும் தவறான சிந்தனைகளும் அதிகமாகிறது.

முரண்பாடு சிறிதும் இல்லாத இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைய முஸ்லிம்களின் நிலை கீழ்க்கண்டவற்றில் எவ்வாறு உள்ளது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


இறைநேசர்கள் பரிந்துரை செய்வார்களா?

இறைநேசர்கள் உயிரோடிருக்கிறார்களா?

கூட்டுத் துவா கூட்டுத் திக்ர் உண்டா?
பாத்திஹா மௌலிது ஓதுவது கூடுமா?
மத்ஹபை பின்பற்றலாமா?
நபித்தோழர்களையும் பின்பற்றலாமா?
நான்கு இமாம்களை பின்பற்றலாமா?
இறைநேசர்களை பின்பற்றலாமா?
முன்னோர்களை பின்பற்றலாமா?
நபி (ஸல்) அவர்களை கனவிலும் நினைவிலும் காண முடியுமா?
ஆடம்பர ஹஜ்?
பாங்குக்கு முன் சலவாத் உண்டா?
சூனியம் ஜோதிடம் குறிபார்த்தல் கூடுமா?
மீலாது விழா கொண்டாடலாமா?
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா?
தாயத்து தகடு கயிறு கட்டலாமா
சகுனம் பார்க்கலாமா?
இஸ்லாத்தில் கற்பனை கதைகள் கூடுமா?
ஸலவாத்துன்நாரியா ஓதலாமா?
மஞ்சள் நீராட்டு விழா செய்யலாமா?
சுன்னத் கத்னா திருவிழா கொண்டாடலாமா?
கருமணி தாலி கட்டலாமா?
தஸ்பீஹ் மணி உருட்டுதல் கூடுமா?
தர்காவுக்கு போகலாமா?
கந்தூரி விழாக்கள் கொண்டாடலாமா?
சந்தணக் கூடு இழுக்கலாமா?
யானை ஊர்வலம் அலங்காரம் கூடுமா?
வலிமார்களிடம் உதவி தேடுதலாமா?
உருஸ், படையல் கூடுமா?
யானை குதிரை ஊர்வலங்கள் உண்டா?
விபுதிக்கு பதிலாக தர்காஹ் சந்தனம் பூசலாமா?
கவ்வாலி இசைக்கச்சேரிகள் கூடுமா?
நாகூர் மொட்டை அனுமதிக்கப்பட்டதா?
தப்ருக் தட்டுக்கள் கூடுமா?
கொடிமரம் உண்டா?
கப்ருகளை கட்டுதல் கூடுமா?
அல்லா அல்லாதவருக்கு அறுத்து பலியிடுதலாமா?
சமாதி வழிபாடு செய்யலாமா?
ஷைகுமார்களின் கால்களில் விழுவது கூடுமா?
மரணித்தால் ஜியாரத் பொறி வழங்கலாமா?
சமாதியை கழுவி அழுக்கு நீரை குடிக்கலாமா?
முரீது உண்டா?
1000 முறை கத்தினால் கவுஸ் வருவாரா?
ஸபர், முஹர்ரம் மாதம் பீடை மாதமா?
வளர்பிறை, தேய்பிறை சகுணம் பார்க்கலாமா?
7-ம் 10-ம் பஞ்சா பக்கீர்கள் கொண்டாடலாமா?
ஆடம்பர திருமணம் அவசியமா?
பெரும்பாவங்கள் தீமைகள் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
ஆடம்பரம் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
இணைவைத்தல் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
பாகப்பிரிவினை சொத்துரிமை குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
ஹலால் ஹராம் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா?
பித்அத் குறித்த எச்சரிக்கை இருக்கிறதா? 
கல்வி விழிப்புணர்வு
மார்க்க விழிப்புணர்வு
கொள்கை விழிப்புணர்வு
சமுதாய முன்னேற்றம்
இஸ்லாமியர்களின் உரிமைக்காக பாடுபடுதல்
அழைப்புப் பணி செய்தல்
வரதட்சனை ஒழிப்பு நடவடிக்கை?
அழுத்தம் வலிமை இல்லாத ஜூம்மா பிரசங்கம்
தராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்துக்கள்?
தஸ்பீஹ் தொழுகை உண்டா?
பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதலாமா?


மேற்கண்ட விசயங்களில் நாம் கருத்து வேறுபாடுகள் கொண்டிருக்கின்றோம். அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் நூல்களை கையில் எடுங்கள். தமிழ் மொழிபெயர்ப்பு வந்து விட்டது. இனி முடிவு செய்ய வேண்டியது நாம் தான்.

உண்மையை அறிய முயற்சிக்கும் போது எந்த ஜமாத்தையும் சாராதீர்கள். உங்களுக்கென சுய அறிவும் மனசாட்சியும் இருக்கிறது. முடிவு எடுப்பதற்கு முன் இறைவனுடைய திருப்தியையும் இறைத் தூதருடைய திருப்தியையும் மட்டுமே முக்கிய நோக்கமாக கருதுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக. ஆமீன்.
thanks to: mpm pages

வியாழன், ஏப்ரல் 26

மரணத்திற்கு பின்னும் நன்மைகள்!


மரணத்திற்கு பின்னும் நன்மைகள்!


பிரபஞ்சத்தின் படைப்பாளானாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:  

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே! பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ( அல்குர்ஆன்: 29:57)

 மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் மரணித்தே தீர வேண்டும். மரணத்திலிருந்து தப்பித்தவர்கள் யாருமில்லை. இன்று மற்றவர்கள் மரணித்தால் நாளையோ அல்லது நாளை மறுநாளோ நாம் மரணிக்கப் போகிறோம்...
.
அந்த மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்மையெல்லாம் படைத்த இறைவன் இயம்புகின்றான். அதனால் தான் மரணித்தப் பின் நீங்கள் அனைவரும் என்னிடமே கொண்டு வரப்படுவீர்கள் என்று தன்னுடைய திருமறையின் மூலமாக கூறுகின்றான். 

அதுமட்டுமின்றி இவ்வுலக வாழ்வையும் மரணத்தையும் இவ்வாறு கூறுகின்றான்:

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன். மன்னிப்பவன். (அல்குர்ஆன் 67 : 2) 

நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.    (அல்குர்ஆன் 31 : 22)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும். 1.நிலையான தர்மம் 2.பயனுள்ள கல்வி  3.இறைவனிடம் பிரார்த்திக்கும் குழந்தைகள். (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம்)

ஒரு இலக்கை நோக்கி மனித இனம் பயணித்துக் கொண்டிருக்கிறது. மனித இனம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அந்த இலக்கை அது அடைந்தே தீரும். அவ்விலக்கை சில லட்சியங்களுடன் வாழ்ந்து சென்றடைந்தால் மனித இனம் மாண்பு பெறும். அந்த லட்சியங்களையும் தன்னைப் படைத்த இறைவனும் அவனின் திருத்தூதரும் காட்டிய வழியில் அமைத்துக் கொள்ளுமேயானால் நிலையான பலா பலன்களை மனித இனம் தனது இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்ளும். இல்லையெனில் தலைக்குனிவே! அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.