-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வியாழன், ஜூலை 12

ரமளானை வரவேற்போம்...!


மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...

இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)

மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37

புதன், ஜூலை 11

கலவரத்தின்போது வழிபாட்டுத் தளங்களை பாதுகாக்க தவறிய குஜராத் அரசு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!



டெல்லி: குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தின் போது இடிக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
முன்னதாக 2002ம் ஆண்டு நடந்த வன்முறைச் சம்பவங்களில் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து இஸ்லாமிய நிவாரணக் கமிட்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கத் தவறியதற்காக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
மேலும் சேதப்படுத்தப்பட்ட 500 வழிபாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு தருமாறும் குஜராத் அரசுக்கு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

கவர்ச்சி ஆடை அணிந்து வரக்கூடாது ஆசிரியைகளுக்கு தமிழக அரசு உத்தரவு! வீடியோ இணைப்பு


நமது கலாசசாரத்திற்கேற்பவும், பண்பாட்டுக்கு ஏற்பவும், நாகரீகமான முறையில் ஆசிரியைகள் உடை அணிய வேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் திடீரென ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாம்.
ஜூன் 29ம் தேதி இந்த சுற்றறிக்கை போயுள்ளது. அதில், அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியைகள், ஆசிரியர்ள், வகுப்பறையில் நாகரீமான முறையில் உடையுடன் காணப்பட வேண்டும் என அறிவுறுத்துமாறு பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளது.
நாகரீகமற்ற, நமது கலாச்சார, பண்பாட்டுக்குப் புறம்பான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கிளையில் கடந்த 15-6-2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது..



ஞாயிறு, ஜூலை 8

வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா


வாஷிங்டன்: வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான்
 தற்போது எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் 
இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை 
என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் 
கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9 ம்தேதி அம்பேல்தான் என்கின்றனர். 
கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள்.

டி.என்.எஸ்.,( டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் 
முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த 
தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ்.,சேஞ்சர் ( அலூரியன் மால்வேர் ) 
என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயல்
 இழக்கச்செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர் . 
இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் 
பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க 
உளவு பிரிவு எப்.பி.ஐ., மாற்று சர்வரை நிறுவி உதவியது. இந்த சர்வரை நிறுத்திட
 முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம் தேதி செயல்பட 
துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கம்யூட்டர்கள் செயல் 
இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

புதன், ஜூலை 4

கடவுள் இருக்கின்றார், 99.9 % உருதிபடுத்தியுள்ளது ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்!


கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.
Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.
இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

ஞாயிறு, ஜூலை 1

கொளுத்தும் கோடை வெயிலும்...! நரகமும்...!!


கண்ணியத்திற்குரிய இரட்சகன் அல்லாஹ் கூறுகிறான்:

ஹுதமா? என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு.(104:5,6)    வெயிலின் கோரமுகம் வெளிக்காட்ட துவங்கியுள்ள நிலையில்,வெப்பத்தின் தாக்கம் துவக்கமே அமீரகத்தில் 105 லிருந்து 110 டிகிரி வரை என்ற கணக்கில் கொளுத்திக் கொண்டு தான் இருக்கின்றது...
ஓர் இறை நம்பிக்கையாளர் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை நரக நெருப்பின் சூட்டோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.ஏனெனில் சூடு என்றதும் நபி (ஸல்) அவர்கள் நரக நெருப்புடன் முடிச்சு போடுகின்றார்கள்.