-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதன், ஜனவரி 18

பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!

இறைவனின் திருப்பெயரால்... அன்புள்ள சகோதர, சகோதரிகளே! உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கு கொண்டும் இருக்கிறீர்கள். 



அதுபோன்ற போராட்டங்களில் ஒன்றாக பிப்ரவரி 14 போராட்டத்தை நீங்கள் கருதிவிட வேண்டாம். தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்காகவோ, அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்காகவோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்காகவோ, தலைவர்களின் தர்ம தரிசனத்துக்காகவோ உங்களை அழைக்கவில்லை.

இது முழுக்க முழுக்க உங்களுக்காகவும், உங்கள் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும், நீங்கள் படும் அவஸ்தைகளை உங்கள் வழித் தோன்றல்கள் பெறக்கூடாது என்பதற்காகவும் நடத்தப்படும் வாழ்வுரிமைப் போராட்டமாகும்.

இந்த நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பது நீங்கள் அறிந்ததுதான். எல்லா சமுதாயத்தவரும் உயர் கல்வி பெற்று நல்ல வேலை வாய்ப்புக்களையும், அரசியல் அதிகாரத்தையும் பெற்றுள்ளதை நாம் அறிவோம்.ஆனால் உங்களின் நிலை என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? நாட்டின் விடுதலைக்காக கல்வியையும், வேலைவாய்ப்புக்களையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்று விட்டார்களே, அது பற்றிச் சிந்தித்தீர்களா? கூலித் தொழிலாளியாகவோ, இறைச்சிக் கடைக்காரராகவோ, நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப்பட்டறையில் கடின வேலை செய்வோராகவோ, தோல் பதனிடும் தொழிலாளியாகவோ, பெட்டிக்கடைகள் நடத்துபவராகவோ, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல் படுவது ஏன்? ஒட்டகம் மேய்த்தல், சாலை போடுதல், கழிவுகளைச் சுத்தம் செய்தல், உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டிடப் பணிகளில் கூலித் தொழில் செய்தல், தனியாருக்குக் காரோட்டும் வேலை, வீடுகளைச் சுத்தம் செய்தல், சமையல் வேலை இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?

மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்? இதை மாற்றி அமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா அல்லது இல்லையா? இந்த அவல நிலைகளை சச்சார் மற்றும் மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் தங்களது விரிவான அறிக்கைகள் மூலம் மத்திய அரசிடம் விளக்கியிருக்கின்றனர்.

இந்த நிலையை மாற்றிட முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். முன்னர் பெற்று வந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவிகித ஒதுக்கீடு என்பதை வாபஸ் பெற்று, முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம், இதர சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதம் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையின்படி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகிதம் போதுமானதல்ல என்று திமுக மற்றும் அதிமுக ஆகியன ஒப்புக் கொண்டுள்ளதால், ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்களித்ததை நினைவூட்டும் வகையில் தமிழக ஒதுக்கீட்டை ஏழு சதவிகிதமாக உயர்த்தக் கோரியும் எதிர்வரும் பிப்ரவரி 14 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு முஸ்லிம் சமுதாயத்தினரை டி.என்.டி.ஜே அழைக்கிறது.

தலைவர்கள் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உன்னைக் காட்டி விலை பேசுவோருக்கு உன்னை அறியாமல் உதவ பல களங்களைச் சந்தித்துள்ளாய். இப்போது உனக்காக மானத்தோடும், மரியாதையோடும் நீ வாழ்வதற்காக, உனக்கு ஏற்பட்ட நிலை உன் சந்ததிகளுக்கும் ஏற்படாமால் தடுத்து நிறுத்திட நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமார்ந்தது போதும், இனியும் ஏமாற மாட்டோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட குடும்பத்துடன் புறப்பட்டு வா! அலை அலையாய் திரண்டு வா! புயலெனப் புறப்பட்டு வா! இறைவன் உதவியால் வென்று காட்டுவோம்.

அன்புடன் அழைக்கிறது! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநிலத் தலைமையகம், 30, அரண்மனைக்காரன் தெரு, சென்னை 600001. போன்: 044 25215226.

புதன், ஜனவரி 11

பேச்சை பேணுக


மொழியின் உயிர்நாடி பேச்சுதான். மனிதன் பிறக்கும்போதே 'பேசா'விட்டாலும், அழுகை எனப்படும் ஒலியை எழுப்புகிறான். பின்னர், சிந்தனை வளர வளர மனிதனின் தொண்டையிலிருந்து வெளியேறும் ஒலி... அதனை அடுத்த பல உறுப்புக்கள் மற்றும் அவனின் சிந்தை மூலமும் சரியாக திருத்தப்பட்டு, அந்த ஒலி வெளிவரும்போது... அது 'பேச்சு' என்றாகிறது."ஒரு வித விதிமுறை + கட்டுக்கோப்பில்" அது இருந்தால்... இதுதான் மொழி என்றாகிறது..!   


அப்படி ஒரு 'மொழியை பேச' மனிதனின் நாக்கு, பல், அண்ணம், உதடுகள், உள்நாக்கு, மூக்கின் காற்றுக்குழல், குரல்வளை, தொண்டை என்று அவன் உடம்பில் பல உறுப்புகள் உதவுகின்றன. இவை ‘ஒலி உறுப்புகள்’ எனப்படுகின்றன. இவற்றைப்பயன்படுத்தி மனிதர்கள் ஒலி எழுப்புகின்றனர். அந்த ஒலிகள் ஏதேனும் பொருள் தந்தால், அதுதான் ‘பேச்சு’..!

'புதிதாக  கண்டுபிடித்து ஆட்படுத்திக்கொள்வது' போன்ற எவ்வித முயற்சியும் இல்லாமலேயே பிறப்பில் இயல்பாகவே இந்த சிறப்புமிக்க இறைவனின் அருட்கொடையாக 'பேச்சு' மனிதனுக்கு...அமைந்து விடுவதை காண்கிறோம். 

ஒவ்வொரு முறை பேசும்போதும்... 'அல்ஹம்துலில்லாஹ்' ('இறைவனுக்கே எல்லா புகழும்') என்று சொல்லவேண்டும் போல தோன்றும் இவ்வளவு அளப்பரிய பேச்சாற்றலுக்கான உறுப்புக்களை கொடுத்துவிட்டு நம்மை சும்மா விட்டு விடவில்லை இறைவன். இந்தந்த உறுப்பை இப்படி இப்படித்தான் பிற மனிதற்கு தீங்கிழைக்கா வண்ணம் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளான். 

இன்னொரு வகை 'பேச்சும்' இருக்கிறது. 'எழுத்து வடிவ பேச்சு'..! தற்போது நான் எழுத்து வடிவத்தில் உங்களிடம் 'பேசிக்கொண்டு' இருக்கிறேன் அல்லவா..? நீங்களும், பின்னூட்டம் வாயிலாக என்னிடம் பேசுகிறீர்கள்.  இது எழுத்து மொழி. இப்படி, நமது ஒலி உறுப்புகள், உண்டாக்கும் இந்த பேச்சை எப்படி பேணவேண்டும்... என்பது பற்றி இறைவன் தன் திருமறை குர்ஆனில் கூறிய போதனைகள் என்ன என்பதை இனி பார்ப்போம் சகோ..!

  • பேச்சில்  ஸலாம் இருக்க வேண்டும்..!
@ 4:86 says...உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான ஸலாம் கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள்.

  • பேச்சில்  உண்மை இருக்க வேண்டும்..!
@ 9:119 says...இறைநம்பிக்கை கொண்டோரே..! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்;  உண்மையாளர்களுடன் ஆகிவிடுங்கள்..!

  • பேச்சில்  நேர்மை இருக்க வேண்டும்..!
@ 33:70 says...இறைநம்பிக்கை கொண்டோரே..! அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்..!

  • பேச்சில்  அழகு இருக்க வேண்டும்..!
@ 2:83 says...மக்களிடம் அழகானதையே பேசுங்கள்.  

  • பேச்சில்  கனிவு இருக்க வேண்டும்..!
@ 4:8 says...சொத்தை பங்கிடும் போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால்... அவர்களுக்கும் அதிலிருந்து வழங்குங்கள். அவர்களுக்கு கனிவான சொல்லையே கூறுங்கள்.

  • பேச்சில்  நியாயம் இருக்க வேண்டும்..!
6:152 says...பாதிக்கப்படுபவர் உங்கள் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்.

  • பேச்சில்  கண்ணியம்  இருக்க வேண்டும்..!
@ 17:23 says...(உங்கள் பெற்றோராகிய)அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (ச்சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசவீராக! 

  • பேச்சில்  பொய்  இருக்ககூடாது..! 
22:30 says... பொய் பேசுவதிலிருந்தும்  விலகிக்கொள்ளுங்கள்.

  • பேச்சில்  புறம் இருக்கக்கூடாது..!
49:12 says... உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்.  

  • பேச்சில்  அவதூறு  இருக்கக்கூடாது..!  
24:23 says...எவர் முஃமினான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள் ஆவர்.

மேற்கண்ட விஷயங்கள் இறைநம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு சொல்லப்பட்டனவானாலும், கிட்டத்தட்ட இதே போன்ற விஷயங்களையே இஸ்லாம் அல்லாத பிற சமயகொள்கைகளும், திருக்குறள் போன்ற சங்கத்தமிழ் இலக்கிய அறநூல்களும்... "யாகாவாராயினும் நாகாக்க..." என்று    போதித்திருக்கின்றன.
.
 .
ஆனால், இறைநம்பிக்கையற்ற பல நாத்திகர்கள் (எல்லோரும் அப்படி அல்ல), தமக்கென்று எவ்வித கொள்கையோ, கோட்பாடோ, கட்டுப்பாடோ, தங்கள் பொல்லாத கற்பனைக்கு ஒரு வரைமுறையோ, இவ்வுலக செயலுக்கு மறு உலக தண்டனை பற்றிய அச்சமோ பேணாத காரணத்தால், அவர்களின் அத்துமீறிய அறுவறுப்பான செயல்களை அவ்வப்போது தங்கள் சுயலத்துக்காக செய்கிறார்கள். இனியும், செய்யத்தான் செய்வார்கள். 
.
 .
அப்போது... நாம், நாசூக்காய் அவருக்கு அதனை எடுத்துச்சொல்லியும் சட்டை செய்யாமல் சிலநேரம் அவர்கள் அதே செயலை தொடர்ந்து செய்தால், அப்போது, 'இறைவன் கொடுத்த கட்டளைகளை பேணவேண்டும்' என்ற கொள்கையுள்ள நாம், பொறுமையிழந்து, சராசரி மனிதனுக்கே  உரித்தான குணமான தேவையற்ற கோபம் காரணமாய்  மேற்படி கட்டுக்கோப்புக்கள் எல்லாம் தகர்ந்து போக, ஒரு சில சமயம் சற்று காட்டமான பதில்களை நம்மையும் மீறி தந்துவிட நேரிடுகிறது.

@ 16:125 says...(நபியே)உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக்கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக!

@ 16:126 says...நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.

@ 16:127 says...(நபியே!)நீர் பொறுமையுடன் இருப்பீராக.

ஆகவே, அச்சமயங்களில்... இறைநம்பிக்கையாளர்களாகிய நமக்கு பொறுமை/தண்டித்தல் இரண்டுக்கும் அனுமதி இருந்தாலும், நாம் பொறுமையுடனேயே... இருந்து விடுவோம்...!

ஏனெனில்...

@ 2:153 says...நம்பிக்கை கொண்டோரே!  நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.


இறுதியாக....
  • வீண் விவாதப்பேச்சை தவிர்த்தல் வேண்டும்..! 
6:68 says...நம் வசனங்களைப்பற்றி வீண் விவாதம் செய்துகொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப்புறக்கணித்து விடும்.  

பிப்ரவரி 14: இஸ்லாத்தை காதலிக்கும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!



பிப்ரவரி 14 என்றவுடன் காதலர் தினமே மக்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் வரும் பிப்ரவரி 14 அன்று இஸ்லாத்தை காதலிக்கும் முஸ்லிம்கள், ஆட்சியாளர்களை கண்டிக்கும் தினமாக அமையும்.

தேர்தல் வரும் போது முஸ்லிம்களை பார்ப்பவர்கள், வெற்றி பெற்றவுடன் முஸ்லிம்களையும் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்துவிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஆட்சியாளர்களிடம் தொடர் போராட்டங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பெற முடிந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசியல்வாதிகளிடம் விலைபோகிவிடாமல் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த குரலை கும்பகோணத்தில் பிரமாண்டமாக காட்டியபோது இடஒதுக்கீடுக்கு ஜெயலலிதா ஆணையம் அமைத்தார். இதைத் தொடர்ந்து கருணாநிதியும் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கினார்.

செவ்வாய், ஜனவரி 10

நீ...ண்டநேரம் Bluetooth Headset/Cordless Phone உபயோகிக்கிறீர்களா


"உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ."என்ற என் சென்ற பதிவில், செல்ஃபோனை காதோடு ஒட்டிவைத்தவாறு நீ.....ண்டநேரம் (1/4, 1/2, 1 மணிநேரம் என்று) மணிக்கணக்கில் அடிக்கடி செல்ஃபோனில் பேசுவோருக்கு என்னென்ன ஆபத்துக்கள் வரலாம் என்று பார்த்தோம். அதில் இருந்து என்னென்ன வழிகளில் அவர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் பார்த்தோம். அதில், Speaker-phone, Ear-phone, Landline-phone ஆகியன உபயோகித்தல் நலன் பயக்கும்  என்றும் குறிப்பிட்டு இருந்தேன்.

விஷயம் என்னவென்றால், Bluetooth Earphone உபயோகிக்கலாமா..? Cordless Landline Phone உபயோகப் படுத்தலாமா என்று கேள்விகள் பிறந்துள்ளன. இரண்டுமே  Bluetooth wireless technolgy வகையை சேர்ந்த மிகவும் அரிய மகத்தான சிறப்பான அறிவியல் கண்டுபிடிப்புகள்தான். இவற்றையும் செல்ஃபோன் போல காதோடு ஒட்டிவைத்தவாறு நீ.....ண்டநேரம் மணிக்கணக்கில் அடிக்கடி பேசுவதற்காக உபயோகிக்கும்போது அதே ஆபத்துக்கள் வரலாம் என்கின்றனர் சிலர், வராது என்கின்றனர் பலர்..! எது சரி..? ஏனெனில், இவை தருவதும் அதே microwave radiation தான் என்கின்றனர் சிலர்..! இல்லை... இல்லை... பாதிப்பு இல்லாத Radio Waves-களைக்கொண்டு ப்ளூடூத் இயர்/ஹெட்ஃபோன்கள்  செயல்படுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்கின்றனர் பலர்..! எது சரி..? தற்போது ப்ளுடூத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அலைகள் எவை..? இதுதான் இப்போது எல்லா குழப்பத்துக்கும் முக்கிய பிரச்சினை. 

ஆகவே, Microwave என்றால் எவை..?
Radio wave என்றால் எவை..?
இதற்கு விடை தெரிந்தால் அனைத்தும் புரிந்துவிடும் அல்லவா..?

Microwave :  இவை 300 MHz (0.3GHz) முதல் 300 GHz வரை frequency கொண்ட சக்திமிக்க மின்காந்த அலைகள். 

Radio Wave :   இவை 3 KHz  (0.003 MHz) முதல்  300 GHz  வரை (Microwave அலைக்கற்றைகளையும் உள்ளடக்கிய...) frequency கொண்ட சக்தி குன்றிய மற்றும் சக்தி மிக்க மின்காந்த அலைகள்.  அதாவது, Radio wave-ன் மற்றொரு கடைக்கோடியில் இருப்பவைதான் சக்திமிக்க Microwave..!

ஆக, நாம் இங்கே அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயம், நமது Bluetooth  Headset (Speaker+Mic) / Blutooth Earphone (only speakers for mp3) அல்லது Cordless land line Phone முதலியன எந்த frequency-ல் செயல்படுகிறன என்பதைத்தான்..! அது சக்தி குன்றிய ரேடியோ frequency-ல் இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை.  பிரச்சனைக்குறிய Microwave Frequency-ல் இருந்துவிடக்கூடாது..! சரிதானே..?

2G Cell phones இயங்கும் frequency : 900 MHz (0.9 GHz)  to 1.8 GHz (1800 MHz)...!  
3G, 4G Cell phones இயங்கும் frequency : 1.8 GHz (1800 MHz)  to 2.4 GHz (2400 MHz)...! 
WLAN, WiFi, WiMax இயங்கும் frequency : 2.1 GHz (2100 MHz) to 2.4 GHz (2400 MHz)...!  

Bluetooth Headset இயங்கும் frequency : 900 MHz (0.9 GHz)  to 2.4 GHz (2400 MHz)..!

ஆக, ப்ளூடூத் கருவிகள் பயன்படுத்தும் ரேடியோ அலைகள்... மைக்ரோவேவ் frequency-ல் விழுகின்றன.  இருந்தாலும், செல்ஃபோன் அளவுக்கு இது பாதிக்காது என்கின்றனர் வல்லுனர்கள். காரணம்... இங்கே Bluetooth Receiver-க்கும் Bluetooth Transmitter-க்கும் உள்ள தூரம், செல்ஃபோன் டவருக்கும் (Base Station) செல்ஃபோனின் சிக்னல் Receiver-க்கும் உள்ள தூரம் போன்றது அல்ல என்பதால் அதில் அந்த அளவுக்கு சக்தி இருக்காது என்கின்றனர்.

ஒவ்வொரு செல்ஃபோனுக்கும் ஒரு Specific Absorption Rate (SAR) வெளியிட்டது போல, ப்ளூடூத் கருவிகளுக்கு அதன் உற்பத்தியாளர்களோ அரசுகளோ இதற்கான SAR அளவை ஏனோ சொல்ல வில்லை..! இது ஏன் என்று "கவனிக்கப்படவேண்டிய" ஒரு விஷயம்..!

ப்ளூடூத்  கருவிகளிலேயே மூன்று வகை சக்தி கொண்டவை உள்ளன. சில தளங்களில் இயங்கும் பெரிய அலுவலக கட்டிடங்களில் பல கணிணி மற்றும் பிரிண்டர்களை இணைக்க,  நீண்டதூர செயல்பாட்டிற்கு அதிக சக்தி கொண்ட class 1 ப்ளூடூத் கருவிகளும், சாதரணமாக நமது செல்ஃபோன் ஹெட் செட்டுக்களில் class 2 வகை  ப்ளூடூத் கருவிகளும் உபயோகிக்கப் படுகின்றன.  கணிணி திரையிலிருந்து ஒரு மீட்டருக்குள் உபயோகிக்கப்படும், ப்ளூடூத் மவுஸ், ப்ளூடூத் கீ போர்ட் போன்றவைக்கு class 3 வகை  ப்ளூடூத் கருவிகளும் உபயோகிக்கப்படுகின்றன.   


இதில், நமது ப்ளூடூத் ஹெட் செட்டுகள், ஒருவேளை class 1 வகையினை சார்ந்ததாகவே வைத்துக்கொண்டாலும், அது செல்ஃபோன் (250mW-2W) தரும் பாதிப்புக்களில் சராசரியாக பத்தில் ஒரு மடங்குதான் தருகிறதாம். எனில், நாம் செல்ஃபோனுக்காக உபயோகிக்கும் class 2 வகை  ப்ளூடூத் கருவிகள், class 1 வகையைவிட மேலே உள்ள அட்டவணைப்படி 40 மடங்கு தீங்கு குறைவு. எனில், செல்ஃபோன் தரும் தீங்கைவிட class 2 வகை ப்ளூடூத் கருவிகளின் தீங்கு... நானூறு மடங்கு குறைவு..! அப்பாடா..! இனி இதை உபயோகிப்பவர்கள் தான் முடிவு செய்து கொள்ளவேண்டும். செல்ஃபோனை காதில் வைத்து பேசுவோரை பொறுத்தமட்டில் இது எவ்வளவோ தேவலாம்தானே..?

அதேநேரம், Cordless Phone-ஐ நீண்ட நேரம் பயன்படுத்தவேண்டாம். அவசரத்துக்கு வந்த அழைப்பை  உட்கார்ந்திருந்தவாறே உடனே ஏற்றுக்கொண்டு சுருக்கமாய் பேசிவிட்டு வைக்கலாம். தொடர்ந்து நீண்டநேரம் பேசவேண்டுமானால், அலுப்பு பார்க்கமால கொஞ்சம் எழுந்து சிறிது தூரம் வீட்டில் நடந்து சென்று landline-க்கு மாறிவிடுவதே உடலுக்கும் மூளை நலனுக்கும் ஆரோக்கியம் என்று அறியமுடிகிறது.
'இந்த ப்ளூடூத் தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது' என்றால்... அருகருகே உள்ள... மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப், டிஜிட்டல் கேமரா, பிரிண்டர்கள், டிஜிடல் ஆடியோ பிளேயர், டிஜிடல் வீடியோ பிளேயர்... இப்படி சில மின்னணு சாதனங்களுக்கு இடையே வயர்கள், கேபிள்கள் என்று எந்தவித இணைப்பும் இல்லாமல் செய்திகள், புகைப்படங்கள், பாடல்கள், ஒலி/ஒளிக்காட்சிகள், கோப்புகள் போன்ற எந்த தகவல்களையும் பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு வயர்லெஸ் டெக்னாலஜிதான் நம்முடைய நவீனயுகத்தின் மற்றுமொரு மகத்தான கண்டுபிடிப்பான இந்த ப்ளுடூத் டெக்னாலஜி..! நமக்கு வேலைகளை மிகவும் எளிதாக்குகின்றன.


ப்ளுடூத் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது என்பது மிக எளிதான காரியம் என்பதாலும், வயர் தொல்லை இல்லை என்பதாலும் இது செல்ஃபோனின் இயர்ஃபோனிலும், லேண்ட்லைன் ஃபோனில் கார்ட்(வயர்)லஸ் ஃபோனாகவும் சுலபமாக உருமாறி விட்டது. லேட்டஸ்டாக Car steering kit மூலம் காரை ஒட்டிக்கொண்டே... அதேநேரம்  பேசிக்கொண்டும் செல்லாம்..!

Bluetooth Earpiece மூலம் mp3 ஆடியோ மட்டும் கேட்பவர்களுக்கு ஒரு விஷயம் : --
இது ஒரு ப்ளூடூத் ரிசீவர் மட்டும்தான். காரணம், இதில் Mic இல்லாததால்... இதில் Bluetooth Headset அளவுக்கு பாதிப்பு இருக்காது. ஆனால், பாதி(!)பாதிப்பு உண்டு எனலாம். Bluetooth Headset-ல் Mic-ம் இருப்பதால், ப்ளூடூத் ரிசீவர் & ப்ளூடூத் டிரான்ஸ்மிட்டராகவும் இது செயல்படுவதை கவனிக்கவும். டபுள் ஆக்டிவ்..!

பதிவின் இறுதியாக... நம் தலைக்கு ஏற்படும் இந்த செல்ஃபோன் கதிர்வீச்சு பாதிப்பை கிட்டத்தட்ட 100% குறைக்க தற்போது நவீன கண்டுபிடிப்பு ஒன்று வந்துள்ளது. சாதாரன Earphone மூலம் கூட சிறிதளவு வெப்பபாதிப்பு  உலோக(wire) கம்பிகளின் conduction heat மூலம் காதுக்கு சென்று பின் வெப்பக்கதிர்வீச்சு பாதிப்பும் இருப்பதால், அதையும் இயன்றவரை முற்றிலும் இல்லாமல் ஆக்குவதற்காக, "Air-tube Headset" அல்லது "Bluetube Headset" என்று அழைக்கப்படுகின்ற (கீழே காட்டப்பட்டுள்ள) இந்த சாதனத்தை இனி வரக்கூடிய அனைத்து செல்ஃபோன் பெட்டிகளிலும் பார்க்கலாம். அந்தஅளவுக்கு இதற்கு இப்போது வரவேற்பு இருக்கிறது.


உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள்


இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் 'கைபேசி' உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன்Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.



ஒரு Caller தன் செல்ஃபோனில் ஒரு Receiver-ஐ அழைக்கும்போது அவரின் செல்ஃபோனிலிருந்து வெளியாகும் மின்காந்தப்புலன் (Electro Magnetic Field)  அருகிலிருக்கும் மொபைல் (Base Station - 1) டவருக்கு செல்கிறது. அங்கிருந்து சிக்னல், Switching Center-க்கு செல்கிறது. இங்கே அழைப்பாளர் மற்றும் அழைக்கப்படுபவரின் விபரங்கள் சேமிக்கப்படுகின்றன. பின் அங்கிருந்து சிக்னல் அழைக்கப்படுபவரின் அருகே இருக்கும் செல்ஃபோன் (Base Station  - 2) டவருக்கு செல்கிறது. இதிலிருந்து புறப்படும் மின்காந்தப்புலன் Receiver-ன் செல்ஃபோனில் உள்ள ஆன்டென்னா மூலம் உட்கிரகிக்கப்படும் போது செல்ஃபோனில் ரிங் டோன் கத்துகிறது. அழைக்கப்படுபவர் வந்த அழைப்பை 'ஓகே' செய்யும்போது இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது.

The impact of cell phone radiation on humans..!   &  How to overcome it carefully..!

பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கிறது. இவ்வாறு பேசும்போது செல் ஃபோனின் ஆன்டென்னா விலிருந்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கும் மின்காந்த அலைகள் எல்லா பக்கமும் தெறிக்கின்றன. அதில் கிட்டத்தட்ட பாதி ஆளவுஅலைக் கதிர்கள் பேசுபர்களின் தலைக்கு உள்ளும் ஊடுறுவுகின்றன..! இந்த செல்ஃபோனின் மின்காந்த அலைக்கதிர்வீச்சின் அளவு, ஒரு மைக்ரோ வேவ் ஓவனின் அலைக்கதிர்வீச்சுக்கு ஏறக்குறைய இணையானது..! ஆக, விஷயம் அவ்வளவு விபரீதமானது..!


ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு Specific Absorption Rate (SAR) உண்டு. இது 1.6 W/KG (watts per kilogram) எனும் அளவுக்கு குறைவாக இருந்தாக வேண்டும். இது International Standard அளவு. உங்கள் மொபைலில் இது  எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது உங்கள் உடலுக்கு நல்லது. 




நம் செல்ஃபோனுக்கான இந்த SAR-ஐ பின்வரும் மூன்று வழிகளில் அறியலாம். 
  1. உங்கள்  செல்ஃபோனின் கையேடு ( user's manual) மூலம்.
  2. செல்ஃபோன் தயாரிப்பாளர்களின் இந்த தளம் மூலமாக.
  3. செல்ஃபோனின் FCC ID Number-ஐ என்டர் செய்து  இந்த தளம் மூலமாக.


நீண்ட நேரம் செல்ஃபோனை ' அணைத்த கையும் காதுமாய் ' கதை அடிக்கும் மனிதர்களின் தலைக்குள் ஊடுறுவும் இந்த மின்காந்த அலைக்கதிர்வீச்சு தலைக்குள் சூட்டை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. உதாரணமாய் 15 நிமிடம் அவ்வாறு பேசிய ஒரு 'மொபைல் பேச்சாளரின்' முந்தைய பிந்தைய நிலையை பின்வரும் படம் காட்டுகிறது. 


நீண்ட நேரம் காதோடு மொபைல் வைத்து பேசுவோருக்கு... மயக்கம், தலைவலி, தூக்கமின்மை, ஞாபகமறதி, காது இறைச்சல், மூட்டுவலி இப்படி உடனடியாக சில தங்கடங்கள் வருமாம்.


தொடர்ந்து இதேபோல 'அணைத்த கையும் காதுமாய் ' செல்ஃபோன் மூலம் நீண்டநேரம் பேசினால்..? பெரியவர்கள் மண்டைஓடு கனமானது. குழந்தைகளின் மண்டைஓடு மெல்லியது. இதனால், பெரியவர்களை விட குழந்தைகள் இக்கதிர்வீச்சினால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, 5-வயது குழந்தைக்கு 75% பாதிப்பும் 10-வயது குழந்தைக்கு 50%-ம், பெரியவர்களுக்கு 25% பாதிப்பும் ஏற்படுகிறதாம். 



ஆக, இதே போல தினம் தினம் பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரங்கள் என சூடாகும் மூளை செல்களில் உள்ள புரோட்டீன் சிதைய, கடைசியில் Brain Tumor-ல் அல்லது சில சமயம் Brain Cancer-ல்கொண்டு போய் விடுகிறதாம்..!

இப்படி ஒரு சாரார் மிக தீர்க்கமாக ஆதாரங்களுடன் பரிசோதித்து சொல்ல, 'அந்த அளவுக்கெல்லாம்... அப்படியெல்லாம்... ஒன்றும் ஆகாது' என்று இன்னொரு சாரார்... (செல்ஃபோன் நிறுவனங்கள் சார்பாக...?) சில மருத்துவர்கள் வாதாடினாலும், விலை கொடுத்து வாங்கும் இந்த வேண்டாத பெரிய ஆபத்து எதற்குமா நமக்கு..? சில வருடங்கள் கழித்து "ஆமாமாம்... அந்த சாரார் சொன்னதே சரி"-ன்னு அப்போது பல நோயாளிகளின் புகாரை கண்டு ஜகா வாங்கினால் அப்புறம் இவர்களை நம்பினோர் கதி..? அதோ கதி அல்லவா..!

'மொபைல்  அடிமைகள்' ஆகிவிட்ட நம்மால், இதை எல்லாம் கண்டு பயந்து மிகவும் அரிய அவசிய கண்டுபிடிப்பான... இந்த செல்ஃபோனை "இனி வேண்டாம்" என தூக்கி எறிந்து விட முடியுமா..? முடியவே முடியாது அல்லவா..?

எனில், இறைநாடினால், சில மாற்று வழிகளை கைக்கொண்டு மேற்படி பயங்கர விபரீதத்திலிருந்து தப்பிப்போம்..! அதுவே புத்திசாலித்தனம்..!

இதற்கு சரியான வழி, நீங்கள் செல்ஃபோன் வாங்கும்போது 'ear phone' என்று ஒரு அம்சம் பெட்டியுடன் சேர்த்து கொடுத்திருப்பார்களே..!? ம்ம்ம்... அதுதான்..! அதை தேடி எடுங்கள்..! ஒரு சில நிமிடங்களுக்கு மேலே பேசுவதாயின் கண்டிப்பாய் அதை இனி காதில் மாட்டிக் கொள்ளுங்கள்..! என்னது...? அதை காணவில்லையா...? சரி...வேறொன்று டூப்பிளிகேட்டாவது வாங்குங்கள் சகோ..!   ஆரோக்கியம் முக்கியம் அல்லவா..?
 அதுவரை என்ன செய்யலாம்...? அவசரத்துக்கு, இனி பேசும் போது செல்ஃபோனை காதுக்கும் வாய்க்கும் கிடைமட்டமாக பிடித்து, அதன்மூலம் ஆன்டேன்னா விலிருந்து வெளியேறும் அலைக்கதிர்வீச்சு கூடுமானவரை தலைக்குள்ளே  செல்லாதவாறு சற்று தள்ளி பிடித்து பேசுங்கள்.

அப்புறம் 'Speaker Phone' என்று ஒரு அம்சம் உள்ளதே..! அப்படி என்ன ராணுவ ரகசியம் பேசிவிடப்போகிறோம்..? அணைத்த கையும் காதுமாய் செல்ஃபோனில் பேசாமால் 'Speaker Phone' உபயோகித்தும் பேசலாமே..! 

'டவர் சிக்னல் வீக்' என்று மொபைல் காட்டினால், அந்த இடங்களில் பேசுவதை தவிருங்கள். ஏனெனில், கஷ்டப்பட்டு சிக்னலை பிடிக்க அலைக்கதிர்வீச்சு அப்போது உச்சத்தில் இருக்கும். பாதிப்பும் நிறைய. உடனே... சிக்னல் முழுக்க கிடைக்கும் இடமாய் தேடிச்சென்று பேசுங்கள். கதிர்வீச்சு அளவை குறைத்துக்கொள்ளலாம்.

'பொதுவாக யாருடனேனும் நீண்ட நேரம் கடலை போட்டேயாக வேண்டும்' என்றால், இருக்கவே இருக்கே land-line phone..! அதை உபயோகியுங்கள்..! எந்த பயமும் இல்லை... முக்கியமாக பேட்டரி சார்ஜ் தீர்ந்து பல மணிநேரம் பேச முடியாமல் போய் விடுமோ என்ற கவலையே இல்லையே...! ஹி..ஹி...  :))

இனி... மொபைல்  சோதனைகளை எல்லாம் கடந்து அதன் மூலம் சாதனைகள் பல செய்வோம்... சகோ..!



திங்கள், ஜனவரி 9

முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே!


மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான்.

அதற்குப் பின்னர், அது வரை ஏறுமுகத்தில் இருந்த அவனது பருவம், வீரியம், வீம்பு, வீராப்பு, திமிர், துணிச்சல், உடல் கட்டு, கூரிய பார்வை அனைத்தும் இறங்குமுகத்தில் ஆகி விடுகின்றது. வளர்பிறையாக இருந்தவன், தேய்பிறையாக மாறி விடுகின்றான்.
தலையில் நரை, பார்வையில், செவிப்புலனில் குறை, துள்ளிக் குதித்த காலம் போய் தளர்ந்த நடை போடும் காலம் அவனைத் தொற்றிக் கொள்கின்றது. இரு கால் பிராணியாக இருந்தவன் முக்கால் பிராணியாக மாறி விடுகின்றான்.
கண்ணில் கண்ணாடி! கையில் கைத்தடி!
ஆம்! கையில் கைத்தடி! கண்ணில் ஒரு கண்ணாடி! உளூச் செய்யும் விரல்களை வாயில் உள்ளே விட்டுப் பல் துலக்கிய காலம் போய் பல் செட்டைக் கழற்றி கையில் வைத்துக் கழுவுகின்றான்.
இரும்பு போன்ற எலும்புகளையும் உடைத்துத் தள்ளிய தாடைப் பற்கள், பொக்கையாகிப் போய் மென்மையான உணவுகளைக் கூட மென்று சாப்பிட முடியாத சூழ்நிலை! சோதனை!
இந்த முதுமையை விட்டு அவனால் தப்பிக்க முடியவில்லை. எத்தனையோ அறிவியல் புரட்சிகள், மருத்துவ சாதனைகள்! எவராலும் இந்த முதுமையை வெல்கின்ற, கொல்கின்ற மருந்தைக் கண்டுபிடிக்கவில்லை; கண்டுபிடிக்கப் போவதுமில்லை.
வளர்கின்ற வாலிபனின் தலையில் ஈயக்காட்டுக் கம்பியாக ஒரேயொரு நரைமுடி இழையோடிவிட்டால் அதைக் கண்ணாடியில் பார்த்துப் பார்த்து வேதனைப்படுகின்றான். தலையில் நரை, தன் வாலிபத்திற்கு ஒரு திரை என்று வெந்து நீருகின்றான். என்ன செய்ய முடியும்?
தான் இருக்கும் வயதை விட்டுத் தாண்டக் கூடாது என்றே நினைக்கின்றான். ஆனால் அவனது வயது, வாழ்நாள் அவனைக் கேட்காமலேயே தாண்டிச் செல்கின்றது. வயோதிகத்தின் பக்கம் வலுக்கட்டாயமாகத் தள்ளி விடுகின்றது. இதுவே மறுமை என்ற ஒன்று இருக்கின்றது என்பதை உணர்த்திக் கொண்டிருக்கின்றது. இதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?
அல்குர்ஆன் 36:68
பெற்றோரை விரட்டுகின்ற பிள்ளைகள்
மனிதன் வயது ஏற, ஏற நடமாட்டம் நிற்கின்றது. படுக்கையில் விழுந்து விடுகின்றான். சிறுநீர் பிரிவது அவனுக்குத் தெரிவதில்லை. மலம் கழிவதும் அவனுக்குப் புரிவதில்லை. இந்நிலையை திருக்குர்ஆன் படம்பிடித்துக் காட்டுகின்றது.
அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 16:70
மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்குர்ஆன் 22:5
இப்போது அவன் கழிக்கின்ற மலம், கூட இருப்பவர்களின் குடலையே புரட்டுகின்றது; குமட்டலை வரவழைக்கின்றது. கொண்ட மனைவி கூட இதைச் சகித்துக் கொள்வாளா என்பது கேள்விக்குறி!
பெற்ற பிள்ளைகள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வார்க்கப்பட்டவர்களாக இருந்தால் முகம் சுளிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் பாடம் பயின்றவர்கள்; பக்குவம் பெற்றவர்கள்.
மற்றவர்களாக இருப்பின் சதாவும், சனியனே! தொலைந்து போ! என்று திட்டித் தீர்ப்பார்கள்; சபித்துத் தள்ளுவார்கள். படுக்கையில் கிடக்கும் பெற்றோரைப் பாரமாக நினைப்பார்கள். பளுவாகவும் நசுக்க முடியாத ஒரு புழுவாகவும் கருதுவார்கள்.
இந்நிலையை அடைந்து தங்களுக்கு ஒரு சுமையாக ஆகி விடக் கூடாது என்பதற்காகச் சிலர் முன்னரே அடித்துத் துரத்தி விடுகின்றனர். இப்படித் துரத்தப்பட்டவர்கள் கிறித்தவ மரணத்தைத் தழுவுகின்றனர்.
காரணம் அவர்கள் தான் இதுபோன்ற அரவணைப்பு நிறுவனங்களை, முதியோர் இல்லங்களை நடத்துகின்றனர். இந்த நிலையை விட்டும் முஸ்லிம்களைக் காப்பதற்காக அவர்கள் ஈமானிய, ஏகத்துவ மரணத்தைத் தழுவ வேண்டும் என்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத், ஆதரவற்றோர் மறுவாழ்வு மையத்தைத் துவங்கியிருக்கின்றது.
இப்படி ஒரு முதியோர் இல்லம் முஸ்லிம்களிடமும் வந்து விட்டதா? என்று விமர்சிக்கின்ற மூடச் சிந்தனை கொண்டவர்களும் முஸ்லிம்களில் இருக்கத் தான் செய்கிறார்கள். ஈமானிய மரணத்தின் பலனை அறியாத இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
இப்படி ஒரு வயோதிக, தள்ளாத பருவம், நம்மைப் பார்த்து முகம் சுளிக்கின்ற, நம்மைப் பாரமாகவும் தூரமாகவும் கருதுகின்ற ஓர் இழிநிலை, ஈன வாழ்க்கை நமக்குத் தேவையா?
அதற்கென ஒரு தீர்வு, இதோ இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் இறைத் தூதர் நமக்கு ஒரு வழியைக் காட்டுகிறார்கள். இப்படி ஒரு நிலையை நாம் அடையாமல் இருப்பதற்காக ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் இதர நேரங்களிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவது தான் அந்த வழி!
ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல, சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்:
அரபி 1
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி
(பொருள்: இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; உலகின் சோதனைகலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; கப்ரின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்)
“இந்த விஷயங்கலிருந்தெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்” என்றும் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு பின் மைமூன் அல் அவ்தீ
நூல்: புகாரி 2822
இந்த ஹதீஸில் வரும், ஒரு ஆசிரியர் மாணவருக்குக் கற்றுக் கொடுப்பது போல் கற்றுக் கொடுத்தார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாலையில் ஓதும் துஆ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
அரபி 2
அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ கைர மா பஃதஹா, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா பஃதஹா, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி
பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
நூல்: முஸ்லிம் 4901
காலையில் ஓதும் துஆ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
அரபி 3
அஸ்பஹ்னா வஅஸ்பஹல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதல் யவ்மி வ கைர மா பஃதஹூ, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி மாஃபீ ஹாதல் யவ்மி வ ஷர்ரிமா பஃதஹூ, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி
பொருள்: நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்தப் பகலின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தப் பகலின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
நூல்: முஸ்லிம் 4901
எல்லா நேரங்களிலும் கேட்க வேண்டிய துஆ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கடம், “உங்கள் சிறுவர்கல் ஒருவரை எனக்குச் சேவகம் செய்ய அழைத்து வாருங்கள்” என்று சொன்னார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தமது வாகனத்தில்) என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு புறப்பட்டார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சேவகம் புரிந்து வந்தேன். அவர்கள் (வழியில் எங்கேனும்) இறங்கித் தங்கும்போதெல்லாம் ???
அரபி 4
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புஹ்லி வல் ஜுப்னி வ ளலயித்தைனி வ கலப(த்)திர் ரிஜாலி
(பொருள்: இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்கன் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்)
என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5425

Thanks “Egathuvam” Monthly January,2011 Issue