-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதன், ஜனவரி 11

பிப்ரவரி 14: இஸ்லாத்தை காதலிக்கும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!

பிப்ரவரி 14 என்றவுடன் காதலர் தினமே மக்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் வரும் பிப்ரவரி 14 அன்று இஸ்லாத்தை காதலிக்கும் முஸ்லிம்கள், ஆட்சியாளர்களை கண்டிக்கும் தினமாக அமையும்.

தேர்தல் வரும் போது முஸ்லிம்களை பார்ப்பவர்கள், வெற்றி பெற்றவுடன் முஸ்லிம்களையும் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்துவிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஆட்சியாளர்களிடம் தொடர் போராட்டங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பெற முடிந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசியல்வாதிகளிடம் விலைபோகிவிடாமல் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த குரலை கும்பகோணத்தில் பிரமாண்டமாக காட்டியபோது இடஒதுக்கீடுக்கு ஜெயலலிதா ஆணையம் அமைத்தார். இதைத் தொடர்ந்து கருணாநிதியும் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கினார்.
அதிலும்கூட சரிவர செயல்படுத்தாமல் இருந்தபோது பெரும் போராட்டம் நடத்திஇ,அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி மூலமே முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடந்தது உண்மைதான் என்பதை வெளிப்படுத்தினோம்.

முஸ்லிம்களுக்கு கருணாநிதி ஆட்சியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை.

அதை கூடுதலாக வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைத்தது. யார் இடஒதுக்கீட்டை உயர்த்தி தருவார்களோ அவர்களுக்குத்தான் முஸ்லிம்களின் ஓட்டு. அவர்களின் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்று கூறியபோது ஜெயலலிதா எழுத்துப்பூர்வமாகவோ அல்லது தேர்தல் அறிக்கையிலோ கூறாத காரணத்தாலும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய காரணத்தாலும் திமுகவை கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆனால் (இறைவனின் நாட்டம்) திமுக தோல்வி அடைந்தது அதிமுக வெற்றியடைந்தது.

தேர்தல் அறிக்கையில் சொல்ல மறுத்த ஜெயலலிதா முஸ்லிம்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விடும் என்பதை காலம் கடந்து உணர்ந்தவர்இ திருச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக இருந்த மர்யம் பிச்சையை ஆதரித்து திருச்சியில் நடந்த பிரச்சாரகூட்டத்தில். . .

தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்இ முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்துவதோடு மட்டுமல்லாமல்இ அது முறையாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவித்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது ஆனால் இதுவரை முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக வாய் திறக்கவில்லை. ஜெயலலிதாவை ஆதரித்து கூட்டணி வைத்த மமகஇ அன்று ஜெயலலிதா முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தி தர வாக்குறுதி அளித்துள்ளார் என்று கூறி அதன் வீடியோ கிளிப்பையும் தனது இணைதளத்தில் பதிவு செய்ததோடு சரி வேறு எதையும் செய்யவில்லை. தற்போது பிடித்து வைத்த பிள்ளையாரைப்போன்று இரண்டு நபர்களும் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக சட்டமன்றத்தில் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.

இவர்கள் இப்படி இருந்தாலும் முஸ்லிம்களின் நலனில் அக்கறையுள்ள நாம் இருக்க முடியாது. ஆட்சியாளர்களை தட்டிக் கேட்டு இடஒதுக்கீட்டு

அளவை தமிழகத்தில் உயர்த்தவும். தொடர்ந்து ஏமாற்றி வரும் காங்கிரஸ் அரசு மத்தியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவும் மாபெரும் வாழ்வுரிமை போராட்டம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது. அதில் பெருந்திரளாக நாம் கலந்து கொண்டு ஆட்சியாளர்களை அசைத்துஇ நமது வாழ்வுரிமையை பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

நன்றி: தீன்குலப் பெண்மனி ஜனவரி 2012