சென்னை : "எய்ட்ஸ்' போன்ற ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் அபாயம் கொண்ட மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில், பல மருத்துவமனைகள் மெத்தனமாக உள்ளன. இந்த விஷயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை, சிறிய மருத்துவமனைகள் சிறிதுகூட மதிப்பதில்லை.
இதனால், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. நோயாளிகளுக்குப் பயன்படுத்திய ஊசி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சையின் போது வெளியேற்றப்படும் உடல் கழிவுகள், போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும். இல்லையெனில், இவற்றிலிருந்து, நோய் பரப்பும் தொற்றுக் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.
பாதரசம் நமது உடலில் பட்டாலும், உட்கொள்ள நேரிட்டாலும் கடும் தீங்குகளை ஏற்படுத்தும், பார்வை கோளாறு, நரம்பு மண்டல பாதிப்பு போன்ற மோசமான விளைவுகள் ஏற்படும். ஆனால், பல தனியார் மருத்துவமனைகளில், முறையாக பயிற்சி பெறாதவர்களே செவிலியராக உள்ளனர். இவர்களுக்கு பாதரசத்தின் தீங்குகள் தெரிவதில்லை. தற்போது டிஜிட்டல் தெர்மாமீட்டர், ரத்த அழுத்த கருவிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சையில் வெளியாகும் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்ற, 1998ம் ஆண்டில் விதிமுறைகளை உருவாக்கி, மத்திய அரசு, தனிச் சட்டம் இயற்றியது. இதன்படி, மருத்துவக் கழிவுகள், 10 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கழிவுக்கும் ஒரு நிறம் ஒதுக்கப்பட்டு, அதற்குரிய பைகளில் சேகரிக்கப்படுகின்றன.
உதாரணத்துக்கு, எரித்து சாம்பலாக்கப்பட வேண்டிய கழிவுகளை, மஞ்சள் நிற கூடையில், சேகரிக்க வேண்டும். "ஆட்டோ கிளைவ்' மூலம் சுத்திகரிக்கப்பட வேண்டிய உபகரணங்கள் சிவப்பு நிற கூடையில் சேகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு தனித் தனியாக பிரிக்கப்பட்ட கழிவுகளை, அதன் தன்மைக்கு ஏற்ப அப்புறப்படுத்த வேண்டும். முக்கிய அறுவை சிகிச்சை உபகரணங்கள், "ஆட்டோ கிளைவ்' மூலம் சுத்தப்படுத்தப்பட்டு, மறு பயன்பாட்டுக்கு அனுப்பப்படும்.
மருத்துவமனைகளில், தனித் தனியாக சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள், வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, ஊருக்கு வெளியே, அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டுள்ள எரிமேடைகளில் கொட்டி, சாம்பலாக்கப்படும். சில வகை கழிவுகள், "ஆட்டோ கிளைவ்' மூலம் சுத்திகரிக்கப்பட்டு, ஆழமான குழிகளில் புதைக்கப்படும். மேலும், சில வகை கழிவுகள் ரசாயன பொருளைக் கொண்டு கிருமிகள் நீக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்படும். இந்த நடைமுறைகள் அனைத்தும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகளை இந்திய டாக்டர் சங்கம், ஒருங்கிணைத்து வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக, 11 பொது சுத்திகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 150 கி.மீ., சுற்றளவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்படும். எல்லா அரசு மருத்துவமனைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம், 2,252 பெரிய மருத்துவமனைகளும், 317 அரசு மருத்துவமனைகளும் உள்ளன. ஆனால், சிறிய நர்சிங் ஹோம்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. சிறிய நர்சிங் ஹோம்கள், கிளினிக்குகளில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த, இப்போது எந்த நடவடிக்கையும் இல்லை. "சென்னையில் மருத்துவக் கழிவு அப்புறப்படுத்தும் திட்டத்தின் கீழ், 258 மருத்துவமனைகள் தான் பதிவு செய்துள்ளன. ஆனால், 5,000க்கும் மேற்பட்ட சிறிய மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் இதில் பதிவு செய்யவில்லை' என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.
மாதத்துக்கு, 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், பொது மருத்துவ கழிவு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். எத்தனை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரம், மருத்துவமனை நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பொது திட்டத்தில் இணையாமல், பல சிறிய மருத்துவமனைகள் தப்பித்துக் கொள்கின்றன. சிறிய மருத்துவமனைகள், மருத்துவக் கழிவுகளை மற்ற குப்பையோடு குப்பையாக கலந்து அப்புறப்படுத்துகின்றன.
இதுபோல், சிறிய ரத்த பரிசோதனைக்கூடங்களும் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது இல்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதியை பெற்ற பின்னரே மருத்துவமனைகள் தொடங்க முடியும். ஆனால், நூற்றுக்கணக்கான, நர்சிங் ஹோம், கிளினிக்குகள் முறையாக பதிவு செய்வதில்லை. இது குறித்து, மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூறும்போது, ""சிறிய மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் மாசு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை. சிறிய மருத்துவமனைகளையும் இச்சட்டத்தில் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார். சிறிய மருத்துவமனைகளையும் இத்திட்டத்தில் இணைத்து, மருத்துவக் கழிவுகள் மூலம் நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
பாதரசம் ஆபத்து : மருத்துவமனைகளில் தெர்மா மீட்டர், ரத்த அழுத்த கருவி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களில், பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவிகள் உடைந்து அல்லது பழுந்தடைந்து பாதரசம் வெளியேறிவிட்டால், அதை கவனமாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது மாசு கட்டுப்பாட்டு விதிகளில் ஒன்று.