-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளி, ஜூலை 1

தேன்கூடு (A Miracle in Engineering & Technology)

 "தேன்கூடு" என்பது அல்லும் பகலும் அயராது பாடுபட்டு பல ஆராய்ச்சிகளின் இறுதியில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட மிகத்துல்லியமான ஒரு இயந்திரத்தால், மிகக்கச்சிதமான கணித அளவீடுகள் கொண்டு மனிதனுக்காக மனிதனால் வடிவமைக்கப்பட்ட, "தேன்வேட்டைக்கு" பயன்படும் ஒரு "கருவி" என்றுதான்... நான் பல ஆண்டுகள் வரை நினைத்திருந்தேன்..! ஹி..ஹி.. :)

ஆனால், பின்னர்தான் ஒருநாள்... இந்த "தேன்கூடு" என்பது... இத்துனூண்டு முட்டையிலிருந்து வெளியேறிய ஓர் (லார்வா) அற்பப்புழு, (ப்யுபா) கூட்டுப்புழுவாகி பிறகு இறக்கை முளைத்து பறந்து வந்து நம்மை கொட்டி வீங்க வைக்கும் ஒரு மிக மிக சாதாரணமான "தேனீ எனும் ஒரு பறக்கும் பூச்சி" இனத்தினால் கட்டப்படுவதுதான் என்று அறிந்த போது... அதுவும் எவ்வித உலக கட்டுமான பொருட்களும் இன்றி சுயமாக தன்னிடம் சுரக்கும் மெழுகால் கட்டுகிறது என்று அறிந்தபோது... "இறைவா...! உன் படைப்பே படைப்பு..! அற்புதம்..! நீ ஒப்புயர்வற்ற தூய்மையானவன்" என்றே என்னை புகழ வைத்தது..!

அப்படி என்னதான் இருக்கிறது அந்த தேன்கூட்டில்..?  

 .
தேனீக்கள் தங்களுக்கு என்று உறைவிடம் & உணவுக்களஞ்சியம் வேண்டி, முட்டையிட்டு, கூட்டுப்புழு காத்து, குஞ்சு பொறிக்க வேண்டி தன்தேவைக்காக கட்டுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல... ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி கட்டுகின்றன. ஒவ்வொன்றும் ஒரு மூலையிலிருந்து கட்ட ஆரம்பிக்கின்றன. இருபுறமும் கட்டுகின்றன. அதில் அளவீடுகளில் அப்படி ஒரு கணித சுத்தம்..! அற்புதமான பொறியியல்..! வியப்பில் ஆழ்த்தும் தொழில் நுட்பத்திறன்..! பல்லாயிரக்கணக்கில் மக்கட்தொகை இருந்தாலும் எவ்வித குழப்பமும் இன்றி அவரவர் வேலையை அவரவர் உணர்ந்து தமக்குள் பகிர்ந்துகொண்டு ஒரே குறிக்கோளாய் தூக்கம், ஒய்வு இல்லாத உழைப்பு..! அச்சமுதாயத்தில் அப்படி ஒரு சட்டம் ஒழுங்கு..! கட்டுக்கோப்பு..!

தேன்கூடு எதனால் உருவானது..? 

இவ்வுலகில் கிடைக்கும் எதைக்கொண்டும் தன் கூட்டை உருவாக்குவதில்லை தேனி..! இந்த கூட்டைக்கட்ட பயன்படும் இதற்கான மூலப்பொருள் Beeswax எனும் மெழுகுப்பொருள்..! இது தேனீக்களின் வயிற்றில் செதில்கள் போன்ற நான்கு சுரப்பிகளிலிருந்து சுரக்கிறது. எப்போதும் அல்ல..! கூட்டை கட்டும் போது மட்டுமே..! இதனை தன்னுடைய ஆறு கால்கள் மூலம் வழித்து, ஒன்று திரட்டி, வாய்க்கு கொண்டுவந்து அதனை நன்றாக வாயினாலேயே அடித்து, வளைத்து, மென்று, திரட்டி சரியாக (90 F) 35' செல்சியஸ் வந்ததும் (இந்த வெப்ப அளவுதான்  ரொம்ப முக்கியமாம்) அதைக்கொண்டு, மிக துல்லியமான அளவுகள் கொண்ட ஒரே சீராண அறுகோண வடிவ அறைகளை கொண்டு, ஒரு பக்கத்தின் அறுகோண அறை அடுத்த பக்கத்தின் மூன்று அறுகோண அறைகளுக்கு மத்தியில் வரும்படி இருபுறமும் பிரமிக்க வைக்கும் ஒரு கலை நேர்த்தியில் ஒன்றன் மீதொன்றாக அடுக்கி படு விரைவாக கூட்டை கட்டுகிறது...! 

இந்த அறுகோண அறைகளுக்கு பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு உபயோகங்கள் உள்ளன என்பது குறிபிடத்தக்கது. ஆனால், அவை அனைத்தயும் பொருட்படுத்தி கட்டுகிறது. இங்கே கூடு கட்டும் போது மெழுகுப்பொருளை வீணாக்காமல் படு சிக்கனமாக உபயோகிக்கிறது. உதாரணமாக, 40 கிராம் மெழுகுப்பொருளில் 22.5cm  X 37cm அளவுள்ள ஒரு கூட்டை கட்டிவிடுகிறது. இந்த மிகச்சிறிய கூடு இரண்டு கிலோவுக்கும் மேல்  எடை தாங்கும் சக்தி கொண்டது..!
.

மரம், மலை, கட்டிடம் என்று பல இடங்களில் இருந்து மேற்புறமாக கட்டத்துவங்கும் தேனீ, கூட்டை கீழ்நோக்கி முன்புறம் பின்புறமாக இரண்டு வரிசைகளில் கட்டுகிறது. அப்போது அது சற்று இருபுறமும் விரிவடைந்து சென்று அடியில்... பிரமிக்க வைக்கும் வகையில் எங்கு ஒன்று சேர்ந்தது என்று சொல்ல முடியாதபடி இணைப்பில் உள்ள அனைத்து அறுகோணங்களும் ஒரே அளவினதாக கணக்கச்சிதமாக ஒன்று சேருகிறது...! 

அதேநேரம், அக்கூட்டில் இரண்டு வித உயரங்களில் அறைகள் இருக்கும். ஒன்று தேன், மகரந்தம் ஆகியன சேமிக்க மற்றும் பெண் லார்வா வளர, பெண் ப்யுபா உருமாற என்று பெண் தேனிக்களுக்காக நிறைய 5.2 to 5.4 மி.மீ அளவு அகலம் கொண்ட அறைகள். மற்றது ஆண் தேனீக்கள் வளர 6.2 to 6.4 மி.மீ அகல அளவில் உள்ள அறைகள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும். இதெல்லாம் பகுத்தறிவு அற்ற இந்த பூச்சி இனத்தில் எப்படி யார் முடிவு எடுக்கிறார்கள் என்பது அறிவியலுக்கு புரியாத புதிர்..! 

ஒரு சராசரி கூட்டில் எத்தனை அறைகள் இருக்கும்..? சுமார் 35,000..! இந்த  அறைகளின் தடிமன் என்ன தெரியுமா சகோ..?  வெறும்....0.07 மி.மீ...! இவ்வளவு மெல்லிய சுவர் கொண்ட இது போன்ற அறைகளில்தான் எவ்வளவு தேன் இருக்கும்..? சுமார் 9.9 கி.கி. எடை கொண்ட தேன்..!

கடும் கும்மிருட்டில் கூட கூடுகட்டும் தேனீ.  ஒவ்வோர் அறையின்  அறுகோணமும்  அளந்து பார்த்தால் மிகத்துல்லியமாக 120 கோண பாகையில் இருக்கிறது..! இத்தேன்கூட்டின் அடிவரிசையில் இருபக்கமும் உள்ள அறைகள் ஒன்றாக இணைந்திருக்கும் இடத்தில், மூன்று அறைகள் ஒரு அறையுடன் பின்னிப்பிணைந்து படு உறுதியான கட்டமைப்பை கொடுக்கிறது. இவை நேருக்கு நேராக 180 கோணத்தில் கிடைமட்டமாக இணைந்தால், 90 கொன பாகையில் மொத்த அறைகளும் கணம் தாங்காமல் புவி ஈர்ப்பு சக்தியால் ஒன்றன் மீது ஒன்றாக சரிந்து விடக்கூடும் அல்லவா..? அதனால் சற்று 'v' போல மேல்நோக்கி குறுகி இருப்பது கூட்டுக்கு நலம். 

ஆக, இக்கூட்டின் கொள்ளளவு, நீளம் அகலம், அறைகளின் எண்ணிக்கை, கூட்டின் மொத்த எடை, ஈர்ப்பு விசை  என்று சகலத்தையும் கணக்கில் கொண்டு பிற்காலத்தில், கணித அறிவியல் வளர்ந்த நிலையில், வல்லுனர்கள் இது போன்ற கூட்டு அமைப்புக்கு 109 கோண பாகையில் இவை இரண்டும் சேர்ந்திருந்தால்தான்  சரியான உறுதி இருக்கும் என்று கணக்கிடப்பட்டது. பின்னர், தேன்கூட்டின் இந்த அடிவரிசை back to back அறைகளின் இணைப்பில் "ஏற்றகோணம்" என்ன என்று அளந்தால்...! என்ன கோணம் தெரியுமா சகோ..? சாட்சாத் அதே 109 டிகிரி..!

இதெல்லாம்  விட, கணித வல்லுனர்களுக்கு ஆச்சர்யம் என்னவென்றால்... அதெப்படி இந்த தேனீக்கள் அறுகோண அறைகளாக கட்டின..? ஏன்.. தேனீ லார்வா எல்லாமும் வட்ட வடிவில் இருக்க... வட்ட வடிவில் அறைகளை கட்டவில்லை..? வட்டங்களுக்கு இடையே உள்ள இடம் வீணாகும் என்றால் சதுர வடிவில் கட்ட வேண்டியதுதானே..? அறுகோண ஐடியா எப்படி..? யார் சொல்லிக்கொடுத்தது..? ஏனென்றால்... பகுத்தறிவு கொண்ட மனிதனின் பிற்கால கணித அறிவு வளர்ந்தபடு நுணுக்கமான நவீன கணிதவியல் ஆராய்ச்சிகோட்பாடுகள் கூறுகின்றன... "the hexagonal cells have an obvious advantage in terms of utilization of area per unit volume" ...என்று..! அதாவது அறுகோணவடிவ அறை இணைப்புகள்தான் குறைந்த கட்டுமானப்பொருளில் அதிக கொள்ளளவு பெற முடியும் என்றும் இதுதான் மிகச்சரியானது என்றும் நவீன கணிதம் கூறுகிறது..!

மனிதனுக்கு சில நூற்றாண்டிக்கு முன்னர் தெரிந்த இப்பேர்பட்ட  அறிவுத்திறன் இந்த தேனிக்கு எப்போது வந்தது..? மில்லியன் வருடங்களுக்கு முன்னாலேயே இப்படித்தானே இவை கட்டுகின்றன..? அவற்றுள் ஒன்றுக்கொன்று தொடர்பற்று, ஆப்ரிக்காவில் கட்டினாலும், அமெரிக்காவில் கட்டினாலும், ஆஸ்திரேலியாவில் கட்டினாலும் அக்கூட்டில் இதே கட்டமைப்புத்தானே..? எப்படி சாத்தியம் இதெல்லாம்..?

சகோ..! உங்களுக்கு ஒரு சவால்..! நீங்கள் உங்கள் நண்பர்கள் மூன்று பேரை உங்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு மொத்தமான காகிதத்தையும், ஆளுக்கு ஒரு பென்சிலையும் எடுங்கள். காகிதத்தின் இடது மூலையிலிருந்து ஆரம்பித்து அறுகோணம் அறுகோணமாக... ஒட்டி ஒட்டி... உங்கள் கண் பார்வை அளவீட்டில் ஒரே அளவினதாக இருக்குமாறு ஒரு ஆறுவரிசைக்கு காகிதத்தின் மையத்தை நோக்கி வரைந்து வாருங்கள். 
 
இன்னொரு நண்பர், அந்த அளவை தமக்குள் உள்வாங்கி, அதேபோல, காகிதத்தின் வலது மூலையிலிருந்து மையத்தை நோக்கி ஆறுவரிசையில், அதே அளவில்,  வரைந்து வாருங்கள். காகிதத்தில்மையம் வந்தவுடன் நிறுத்திக்கொண்டு... இரண்டும் ஒன்றாக சேரும் மைய இடத்தில் 'எசகுபிசகாக சேருகிறதா' அல்லது 'மிகச்சரியாக அறுகோணமாகவே இணைகிறதா' என்று இருவரும் முயற்சி செய்யுங்கள்..!

பின்னர் காகிதத்தின் பின் பக்கமும் அதேபோல... மற்ற இரண்டு நண்பர்கள்... வேண்டாம்.. வேண்டாம்... விட்டு விடுங்கள்..! அது இன்னும் கொடுமை..! இது யாராலும் முடியவே முடியாது. ஆனால், தேனீயால் முடிந்திருக்கிறதுதே..! பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் முடிகிறதே..? உலகின் எந்த கண்டத்தில் வாழும் தேனீக்களும் ஒரே மாதிரி ஒரே டிசைனில்தான் கூட்டை கட்டுகின்றனவே..? அவர்களுக்கும் எந்த ஒரு தகவல் தொழில்நுட்பமும், வீடியோ சாட்டிங்கும் கிடையாதே..? ஆனாலும், இந்த அதிசயம் நடந்து கொண்டேதானே உள்ளது..? இந்த உயிரினத்திற்கு மட்டும் இந்த (Engineering & Technology) திறன் எப்படி வந்தது..? எந்த உயிரியிடம் இருந்து பரிணாமம் பெற்று வந்தது..? இந்த அற்ப இனத்தை விடவெல்லாம் பல மடங்கு சிறந்த மூளை பெற்ற மனிதனான நமக்கு ஒரு பேப்பரில் கூட இதே போன்று இரண்டு பக்கமும் வரைய முடியவில்லையே..? 

இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் தான், தேனீயை "social insect" என்று வகைப்படுத்தி, இது தன் எந்த பரிணாம தத்துவத்துக்கும் ஒத்துவராதவை என புரிந்துகொண்டு, தன் The Origin of Species-இல் இப்படி கூறுகிறார்: Can instincts be acquired and modified through natural selection? What shall we say to the instinct which leads the bee to make cells, and which has practically anticipated the discoveries of profound mathematicians?   

ஆனால்... இறைவன், மனிதர்களுக்கான தன் திருமறை குர்ஆனில், இந்த தேனீ எனும் அற்புத படைப்பின் பெயரில் ஓர் அத்தியாயம் தந்து, அதில் தேனீக்கள் பற்றி நம்மை சிந்திக்க சொல்வது  குறிப்பிடத்தக்கது..! இதனை இறைநாடினால் அடுத்த பதிவுகளில் இன்னும் பல்வேறு அற்புத விஷயங்களை சிந்திப்போம்.  
( Sources & References :- To be given in the last article of this Honey Bee series)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.