-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஞாயிறு, செப்டம்பர் 4

விடை பெற்ற ரமளான்! விடுக்கும் செய்திகள்!!

கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்கள் முன் சென்றோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.(அல்குர்ஆன் 2:183)

''ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப் படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றார்கள்''என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1899
  
நம்மை விட்டு பிரிந்து செல்ல இருக்கின்ற (பிரிந்து சென்ற) இந்த ரமளானுடைய நோன்பு நம்மீது அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது என்றால் அது மிகையாகாது. அண்ணல் நபி(ஸல்) அவர்களின் உண்மை கூற்றுப்படி ரமளான் வந்து விட்டால் ஷைத்தான் நம்மை விட்டு விரண்டோடுகின்றான். இதை ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக உணர்ந்து வைத்துள்ளோம்.

ரமளான் அல்லாத காலங்களில் நம்மில் பலர் பலவிதமான தீய பழக்கங்களை வழமையாக செய்து வந்தாலும் ரமளான் வந்து விட்டால் எல்லா விதமான பாவ காரியங்களையும் மூட்டை கட்டி வைத்துவிடுவதையும் தீய காரியங்கள் செய்யும் சூழ்நிலைகள் இருந்தும் அதை நெருங்காமல் இருப்பதையும் பார்க்கின்றோம். சிலர் நோன்பு வைக்கும் நேரத்தில் மட்டும் தீய காரியங்களை விட்டு தவிர்ந்து இருப்பார்கள். ஒரு சிலர் ரமளான் மாதம் என்ற வேறுபாடே தெரியாமல் மற்ற நாட்களைப் போல் சர்வ சாதாரணமாக பாவச் செயல்களில் மூழ்கிக் கிடப்பதை பார்க்கின்றோம். இப்படி பலவாறாக பலவிதமான மனிதர்கள்.

ஆனால் உண்மையான இறையச்சம் உள்ள மனிதர்கள் இந்த ரமளானில் பசித்திருந்தும் அல்லாஹ்வை அனுதினமும் தியானித்தும் திக்ருகள் ஓதியும் குர்ஆன் ஓதியும் கடமையான தொழுகைகளை சரியாக பேணித்தொழுதும் சுன்னத்தான தொழுகைகளை தொழுது வருவதையும் காண முடிகிறது. இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் வல்ல அல்லாஹ்வுடைய கவனம் நம்மீது இருக்கின்றது என்ற பயம்தான்.

இந்த ரமளானில் கண்காணித்த அந்த இறைவனால் மற்ற மாதங்களில் கண்காணிக்க முடியாதாநோன்பு வைத்திருக்கும் போது மட்டும் பாவ காரியங்களை விட்டு தவிர்ந்திருக்கும் மனிதன் மற்ற நேரங்களில் மற்ற நாட்களில் அதைவிட்டு தவிந்திருக்க முடியாதாஎன்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

நம்முடைய இந்த இரட்டை நிலை மிகவும் பரிதாபகரமானது. இந்தக் குறைபாடு நம்மைவிட்டு நீங்கிட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு அழகிய செயல்முறை விளக்கத்தை நமக்கு கற்றுத்தருகிறார்கள்.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் தென்படும் விதத்தில் (அமர்ந்து) இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து 'இஹ்ஸான் என்றால் என்ன?'என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (இஹ்ஸான் என்பது)'அல்லாஹ்வை (நேரில்) காண்பது போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்' (என்ற உணர்வுடன் வணங்குவதாகும்) என்றார்கள். நூல்: புஹாரி  4777

நோன்பில் எப்படி அல்லாஹ்வை அஞ்சி வாழ்ந்தாமோ அதேபோல் மரணிக்கும் வரை இறை நினைவோடு வல்ல ரஹ்மானுக்கு பயந்து வாழவேண்டும் என்று இந்த ரமளான் விடுக்கும் செய்தியாக மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

என்றும் தொடரட்டும் இந்த இரவுத்தொழுகை!

வல்ல அல்லாஹ் தன் திருமறையில்...
'(முஹம்மதே!) உமக்கு உபரியாக இருக்கும் நிலையில் இரவில் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) தஹஜ்ஜுத் தொழுவீராக! புகழப்பட்ட இடத்தில் உமது இறைவன் உம்மை எழுப்பக்கூடும்' (அல்குர்ஆன் 17:79)

மேலும் நபி(ஸல்) கூறினார்கள்...

'கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவில் தொழும் தொழுகையாகும்'  அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 1982

நம்மிடம் வருகை தந்த இனிய ரமளான் நமக்குத் தலை சிறந்த பள்ளிக்கூடமாகத் திகழ்ந்தது. அந்தப் பள்ளிக்கூடம் நம்மைக் குர்ஆனுக்கு மிக அருகில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இரவுத் தொழுகைகளின் மூலம் குர்ஆனுடன் உளப்பூர்வமான உறவையும் ஒன்றுதலையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த இரவுத் தொழுகையை நாம் இஷாவுக்குப் பிறகு தொழுது கொண்டிருக்கிறோம். ஆனால் இதை ஸஹர் நேரத்தில் தொழுவது மிகவும் சிறந்ததாகும்.

இதை அண்ணல் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையிலிருந்து நாம் அறிந்துக்கொள்ள முடியும். அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிப்பதாக அஸ்வத் பின் யஸீத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

'நபி(ஸல்) அவர்களின் இரவுத்தொழுகை எவ்வாறு இருந்தது? 'என்று ஆயிஷh(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'இரவில் ஆரம்ப நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுவார்கள். பிறகு படுக்கைக்குச் செல்வார்கள். முஅத்தின் பாங்கு சொன்னதும் விழித்து குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால் உளூச் செய்து விட்டுப் புறப்படுவார்கள்என்று பதிலலித்தார்கள். (நூல்: புஹாரி 1146)

இந்த ஹதீஸிலும் இன்னும் ஏராளமான ஹதீஸ்களிலும் நபி(ஸல்) அவர்கள் பிந்திய இரவில்தான் இரவுத் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள் என்பதைக் காணலாம். இன்று தராவீஹ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு இதை நோன்பில் மட்டும் வழமையாக கடைப்பிடிக்கும் மக்கள் நோன்பு முடிந்தவுடன் அதை அப்படியே மறந்துவிடுவதை பார்க்கின்றோம். ஆனால் நோன்பு அல்லாத காலங்களிலும் நபி(ஸல்) அவர்கள் வழமையாக தொழுததையும் அதை நபித்தோழர்களும் நடைமுறைப்படுத்தி வந்ததையும் காண முடிகின்றது. இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

'(முஹம்மதே!) நீரும் உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும் இரவில் பாதியும் இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகிறீர்கள்'என்பதை உமது இறைவன் அறிவான். (அல்குர்ஆன் 73:20)

இதன் அடிப்படையில் இன்று தவ்ஹீது மர்கஸ்கள் பலவற்றில் பிந்திய பத்து இரவுகளில் பின்னேரத் தொழுகை அறிமுகப்படுத்தப்படு தொழப்படுகின்றது. தவ்ஹீது பள்ளியில் இரவுத் தொழுகைக்கு மக்கள் வெள்ளமாகப் பெருக்கெடுத்து வருவதைக் கண்டு பொறுக்க முடியாத குராபி ஆலிம்கள் இந்த மக்கள் கூட்டத்தைத் தடுக்கும் விதமாக தங்கள் பள்ளிவாசல்களிலும் பின்னேரத்தில் தொழத் துவங்கி விட்டார்கள். முன்னேரத்தில் தொழும் தொழுகைக்கு தராவீஹ் என்றும் பின்னேரத்தில் தஹஜ்ஜத் என்றும் ஒரு வியாக்கியானம் கொடுக்கின்றனர்.

அவர்கள் இதற்கு என்ன தான் வியாக்கியானம் கொடுத்தாலும் இத்தனை ஆண்டு காலமாகத் தொழாமல் இன்று இவர்கள் தொழுவதற்குக் காரணம் தவ்ஹீது சகோதரர்கள் நபிவழியின் அடிப்படையில் இரவுத் தொழுகையை அறிமுகப்படுத்தியது தான்.

நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையைப் பற்றி அன்னை ஆயிஷா(ரலி) கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினோரு ரக்அத்துகளை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் தொழமாட்டார்கள். நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸலமா பின் அப்திர்ரஹ்மான்(ரஹ்) நூல்: புஹாரி 2013

இந்தத் தொழுகையை ரமளானுக்குப் பின்னரும் நாம் தொழுதால் என்னஎன்று ஒரு சிந்தனையை நம்மிடம் ஏற்படுத்தி விடுகின்றது. எனவே நாம் இரவுத் தொழுகையை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். 11 அல்லது 13 ரக்அத்துக்கள் தான் தொழ வேண்டும் என்பதல்ல. குறைந்தபட்சம் மூன்று அல்லது ஐந்து ரக்அத்துக்கள் தொழும் பழக்கத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
  
நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) இரவு நேரத்தில் ஒரு பாயை அறை போல் ஆக்கிக் கொண்டு தொழுவார்கள். அதைப் பகல் நேரத்தில் விரித்துக் கொண்டு அதன் மீது அமர்வார்கள். மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள். இறுதியில் மக்கள் அதிகமாகி விடவே நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி ''மக்களே! உங்களால் இயன்ற செயல்களையே செய்து வாருங்கள். ஏனெனில் நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ்வும் சலிப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (நற்)செயல் யாதெனில் குறைவாக இருந்தாலும் நிலையாக இருப்பதேயாகும்'' என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: 5862

இதன்படி குறைந்ததாக இருந்தாலும் அது நிரந்தரமாக இருக்க வேண்டும். எனவே இரவுத் தொழுகையை நாம் ரமளானுக்குப் பிறகும் தொடர வேண்டும். அல்லாஹ் இவ்வாறு இரவில் எழுந்து தொழுவதை மிகவும் பாராட்டிச் சொல்கின்றான்.

அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள்' (அல்குர்ஆன் 32:16)

இவ்வாறு இரவில் தொழும் மக்களுக்கு அல்லாஹ் சிறந்த ஏற்பாடுகளைச் செய்து வைத்து இருப்பதாகக் கூறுகின்றான்.

'அவர்கள் செய்து கொண்டு இருந்ததற்குப் பரிசாக கண் குளிரும் வகையில் அவர்களுக்காக மறைத்து வைக்கப் பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்' (அல்குர்ஆன் 32:17)

அல்லாஹ் கூறும் இந்தப் பரிசுகளை நாம் அடைய வேண்டும் என்றால் இந்த இரவுத் தொழுகையை நாம் தொடர்ந்து தொழ முன்வர வேண்டும். இதை எந்த நேரத்தில் தொழ வேண்டும்?

(அவர்கள்) பொறுமையாளர்களாகவும் உண்மை பேசுவோராகவும் (இறைவனுக்கு) கட்டுப் பட்டோராகவும் (நல் வழியில்) செலவிடுவோராகவும் இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.) (அல்குர்ஆன் 3:17)

இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
(அல்குர்ஆன் 51:17,18)
இறை நம்பிக்கையாளர்களின் நல்ல பண்புகளையும் அவர்கள் பாவமன்னிப்பு தேடுகின்ற நேரத்தையும் இவ்விரு வசனங்களில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.

முதல் வானத்திற்கு வருகையளிக்கும் அல்லாஹ்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது ''என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவ மன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்'' என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1145

உரியது கிடைக்கும் உரிய நேரம்!

 ''நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக இந்த நேரத்தில் இம்மை மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கின்றது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: முஸ்லிம் 1259

துவங்கியதைத் தொடர்தல்!

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போல் ஆகி விடாதீர்!'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: புகாரி 1152

ரமளானில் தொடங்கிய இரவுத் தொழுகையை நாம் இடையில் பாதியாக நிறுத்தி விடக் கூடாது. ரமளானில் பெற்ற இந்தப் பயிற்சியை அடுத்த ரமளான் வரை தொடர வேண்டும். இதில் போட்டி போட்டுக் கொண்டு அமல் செய்ய வேண்டும் என்று மார்க்கம் நமக்குக் கட்டளையிடுகின்றது.

'இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார். இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான்.  அவர் அதனை இரவு பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : புகாரி 5025

ஷவ்வால் மாத ஆறு நோன்பு!

ரமளான் முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

யார் ரமளான் மாதம் நோன்பு நோற்று அதை தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நாட்கள் நோன்பு நோற்கின்றாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பவர்:  அபு அய்யுப்(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, அபுதாவுத்.

பெருநாளை தொடர்ந்து ஷவ்வால்  மாதம் முழுவதும் நமக்கு வசதியான நாட்களில் இந்த ஆறு நோன்புகளையும் நோற்று காலமெல்லாம் நோன்பு நோற்ற பலனை அடைந்திட முயற்சி செய்ய வேண்டும் இன்ஷா அல்லாஹ்.
  
இப்படிப்பட்ட சிறப்பைத் தரும் இந்த நன்மையை ரமளான் தந்த பரிசாக பாடமாக எடுத்துக் கொண்டு தொடர்வோமாக! முனைப்புடன் உடனே செயல்படுத்துவோமாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர் மீதும் அருள் செய்திடுவானாக! 