அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தமது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.[அல்குர்ஆன்: 9:32] இணைகற்பிப்போர் வெறுத்தபோதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான் (அல்குர்ஆன்: 61:9)
சத்தியமே வெல்லும் என்பதில் எந்தவொரு ஜாதி மதத்தினருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அசத்தியங் களும்,அதர்மங்களும் என்னதான் ஆட்டம் போட்டாலும் இறுதி வெற்றி என்பது சத்தியத்திற்கே என்பதில் உலக மக்கள் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருப்பதை பரவலாக நாம் பார்த்து வருகிறோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்ற சொல்வழக்குகள் இதனாலேயே உருவாகியிருப்பதையும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இருந்தபோதிலும் வெற்றி பெறும் சத்தியம் எது என்பதை அறிந்து கொள்வதில்தான் மனிதர்களுக்கு உண்மையான பலாபலன்களும் பிறவிப்பயனும் அடங்கி யுள்ளது. காண்பதையெல்லாம் சத்தியம் என்று கூறுவோமேயானால் உண்மையான சத்தியத்தை இனங்காண முடியாமல் போய்விடும்.
வாழ்வில் எற்படும் சொற்பமான சோதனைகளிலிருந்து தப்பிக்க ஒரு ஹீரோ வந்துதான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்ற ரீதியில் சத்தியத்தை விளங்கியிருப்பே மேயானால் கையாலாகாதவர்களாக நாம் ஆகிவிடும் அபாயம் உள்ளது.மனிதர்களின் தொடக்கம் பற்றிய தெளிவையும் முடிவுகளுக்கு மங்காத ஒளிமிக்க வழிகளையும் உள்ளடக்கி நிலைதடுமாறாமல் மனிதர்களுக்கு உதவி செய்யும் நெறிமுறையே சத்தியம் ஆகும். இடத்துக்கு இடம் நேரத்துக்கு நேரம் சந்தர்ப்பவாதம் போன்று மாறுவதல்ல சத்தியம் என்பது.பாதுகாக்கப்பட்ட வேதமும் நபிவழியும் வெற்றி பெறும் சத்தியம் எது? அல்லது நம்முடைய இம்மை மறுமை வெற்றிக்கு உதவும் சத்தியம் எது என்பதை அறிந்திட உதவும் சரியான கருவிகளாகும்.
எந்த மார்க்கத்தில் இந்த கருவிகள் உள்ளன? அவை எப்படியெல்லாம் காலங்களை வென்றெடுத்தாக எல்லாக் காலங்களுக்கும் பொருந்திப் போய் மக்களுக்குப் பயனளித்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
உலகவாழ்வு மட்டுமே சத்தியத்தின் அளவுகோலாக இருத்தல் கூடாது. மரணத்திலும் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றிய நிலைகளுக்கும் தெளிவு கூறுவதாக சத்தியம் இருத்தல் வேண்டும். அப்போதுதான் வெற்றிக்கான பூரணத்துவம் கிட்டும்.
அதல்லாமல் மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்ட முன்னுக்குப்பின் முரணான வேதங்களாலும் பிரமிப்பூட்டும் கற்பனை காவியங்களும் வறட்டுச் சிந்தனையும் வீண் கற்பனைகளையுமே தூண்டி விடுமேயல்லாது சத்தியத்தை இணங்காண இயலாது.
வரலாற்றுச சிறப்புமிக்க பின்வரும் ஹதிஸை பாருங்கள்:
(குறைசிகளின் தவைர்) அபுசுப்யானிடத்திலும்,குறைஷிக் காபிர்களிடத்திலும் நபி(ஸல்) அவர்கள் (ஹூதைப்பியா என்ற இடத்தில்) ஒர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்)
ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியா நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராக சென்றிருந்த அபூசுப்யானை (ரோமாபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ், ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூசுப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தமது அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தமது மொழிபெயர்ப்பாளரையும் அழைத்து வரச் சொன்னார்.
அபுசுப்யான் இது குறித்து கூறும்போது, (எங்களிடம்) மன்னர் தம்மை இறைத்தூதர் என்று கருதிக் கொண்டிருக்கும் அம்மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்? என்று கேட்டார். நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினர் என்று கூறினேன்.உடனே மன்னர் (தம் அதிகாரியிடம்) அவரை என் அருகே அழைத்து வாருங்கள். அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள் என்ற ஆணையிட்டார். பின்னர் தமது மொழிபெயர்ப்பாளரிடம் நான் அந்த மனிதரை பற்றி இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறி விட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல் என ஆணையிட்டார். நான் பொய் கூறியதாக இவர்கள் சொல்லி விடுவார்களோ என்ற நாணம் மட்டும் இல்லையென்றால் இறைவன் மீதாணையபக நபி(ஸல்) அவர்களைப்பற்றி பொய்யுரைத்திருப்பேன்.
பிறகு மன்னர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, உங்களில் அவரது குலம் எத்தகையது? அதற்கு அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சேர்ந்தவர் என்றேன். இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தை செய்ததுண்டா? என்று கேட்டார். இல்லை என்றேன். இவரது முன்னோர்களில் யாராவது மன்னர்களாக இருந்திருக்கிறார்களா? என்றார். இல்லை என்றேன். அவரைப் பின்பற்றுவோர் மக்களில் சாமானியர்களா? அல்லது சிறப்பு வாய்ந்தவர்களா? என்றார். மக்களில் சாமானியர்கள் தாம் என்றேன். அவரை பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா? என்று வினவினார். அவர்கள் அதிகரித்து செல்கின்றனர் என்றேன். அவரது மார்க்கத்தில் நுழைந்தவர்கள் அதன் மீது அதிருப்தியுற்று யாரேனும் மதம் மாறியிருக்கின்றனரா? என்று கேட்டார். நான் இல்லை என்றேன். அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக்கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா? என்றார். நான் இல்லை என்றேன். அவர் வாக்கு மீறியதுண்டா? என்றார். (இதுரை)இல்லை என்று செல்லி விட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஒர் (ஹூதைப்பியா) உடன்படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்கு தெரியாது என்றேன். அப்போதைக்கு (நபி(ஸல்) அவர்கள் மீது குறை கற்பிக்க) அந்த வார்த்தையை விட்டால் வேறு எந்த வார்த்தையையும் எனது பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை!
அவருடன் நீங்கள் போரிட்டிருக்கீறீர்களா? என்று கேட்டார். ஆம் என்றேன். அவருடன் நீங்கள் நடத்திய போரின் முடிவுகள் எவ்வாறிருந்தன? என்றார். எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்திருக்கின்றன. சில சமயம் அவர் எங்களை வென்றிருக்கிறார். சில சமயம் நாங்கள் அவரை வென்றிருக்கிறோம் என்றேன்.
அவர் உங்களுக்கு என்ன தான் போதிக்கிறார்? என்று கேட்டார். அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை வைக்காதீர்கள். உங்கள் முன்னோர்கள் கூறி வந்தவற்றையெல்லாம் விட்டு விடுங்கள். என்கிறார். தொழுகை, உண்மை, கற்புநெறி, உறவினருடன் இணங்கி இருத்தல் போன்ற பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார் என்றேன்.
மன்னர் தமது மொழிபெயர்ப்பாளரிடம் மொழிப்பெயர்க்க சொன்னதாவது: அவரின் குலத்தைப்பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர் தாம்என்று குறிப்பிட்டீர். எல்லா நபிகளும் அப்படித்தான். அவர்களின் சமூகத்திலுள்ள உயர்குலத்தில்தான் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன்செய்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். இவருக்கு முன்னர்யாரேனும் இவ்வாதத்தைச் செய்திருந்தால், முன்னர் செய்யப்பட்டு வந்த ஒரு வாதத்தைப்பின்பற்றித் தான் இவரும் செய்கிறார் என்று கூறியிருப்பேன்.
இவரின் முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருக்கிறார்களா? என்று உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றுசொன்னீர். இவரின் முன்னோர்களில் எவரேனும் மன்னராக இருந்திருந்தால், தம் முன்னோரின் ஆட்சியை அடைய விரும்பும் ஒருவர் இவர் என்று சொல்லியிருப்பேன்.
இவ்வாதத்தைச்செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத்துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றே உறுதியாகநம்புகிறேன்.
மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்றுகின்றனரா? அல்லது சாமானியர்களா? என்று கேட்டேன். சாமானிய மக்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தாம் இறைத்தூதர்களை (துவக்கத்தில்) பின்பற்று வோராய் இருந்திருக்கிறார்கள்.
அவரைப் பின்பற்றுகிறவர்கள் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா? என்றும் உம்மிடம் கேட்டேன். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறைநம்பிக்கை, நினைவு பெறும் வரை அப்படித்தான் (வளர்ந்து கொண்டே) இருக்கும்.
அவரின்மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கின்றனரா? என்று உம்மிடம் கேட்டேன். நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். அப்படித்தான்இதயத்தில் நுழைந்த இறை நம்பிக்கையின் எழில் (உறுதியானது).
அவர்(எப்போதேனும்)வாக்கு மீறியதுண்டா? என உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றீர். (இறைவனின்)திருத்தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீற மாட்டார்கள்.
அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்? என்று உம்மிடம் கேட்டேன். அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாததென்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் சிலைவணக்கங்களிலிருந்து அவர் உங்களைத் தடுப்பதாகவும் தொழுகை, உண்மை, கற்புநெறி ஆகியவற்றை உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர்.
நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் (ஒரு காலத்தில்) என்னுடைய இரண்டு பாதங்களுக்குமுள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார். (இப்படிப்பட்ட) ஓர் அறிந்திருந்தேன். ஆனால் அவர் (அரபிகளாகிய) உங்களிலிருந்து தாம் தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை. அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன். (இப்போது) நான் அவரருகே இருந்தால் அவரின் பாதங்களைக் கழுவி விடுவேன். (இப்னு அப்பாஸ்(ரலி)(புகாரி :7)
ஹெர்குலிஸ் மன்னர் கூறியதுபோல் நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் கிடைத்த பின் 23 ஆண்டுகளில் இந்த சத்தியக் கொள்கையை நிலைநிறுத்தியது மட்டுமல்லாமல் எந்தக் கொள்கையை மக்களிடம் சொல்லியதற்காக தான் பிறந்து, வளர்ந்த நாட்டை விட்டு துரத்தப்பட்டு, அண்டை நாடான மதினாவில் குடியேற்றப்பட்டார்களோ, அந்த நாட்டையே இந்த சத்திய கொள்கையின் மூலம் வென்று வாகை சூடியதன் மூலம் சத்தியம் வென்றது.
இன்றைய காலகட்டத்திலும் இந்த சத்தியம் தன்னிட முள்ள வேதத்தின் வாயிலாகவும் நபிவழிகளாலும் மக்களை வென்றெடுத்த வண்ணம் இருப்பதை நாம் காணலாம்.
நீண்டகாலமாக சர்வதேச அளவில் இஸ்லாமிய எதிரிகள் எந்தெந்த மாதிரியெல்லாமோ சூழ்ச்சிகள் செய்து இஸ்லாத்தை விட்டு மக்களை அப்புறப்படுத்திய போதிலும் குர்ஆன் ஹதீஸை ஞாபகப்படுத்துவதன் மூலம் சத்தியம் நொடியில் அம்மக்களை வென்றெடுத்து அரவணைக்கிறது.
தீவிரவாதம், எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் பெண்ணடிமைக்கு வித்திடும் மதம் என்றெல்லாம் இந்த சத்தியம் தூற்றப்பட்டு களங்கப்படுத்தப்பட்ட போதும் வீரியமிக்க அதன் எழுச்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அசத்தியவாதிகளிடம் அதிகமான முறையில் ஆட்சியதி காரங்களும் வல்லரசுகளும் இருந்தபோதும் இந்த சத்தியத்தை அவர்களால் முழுக்கவும் அழிக்க முடிவதில்லை.
இஸ்லாத்தின் பெயராலேயே உள்ள எத்தனையோ அமைப்புகள் மக்களை மூளைச்சலவை செய்து வைத்த போதும் ஏகத்துவச் சிந்தனைகளால் இந்த சத்தியம் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் மறுமலர்ச்சி எந்த அரசியல் தலைவனாலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத புரட்சிகர மாறுதல்களாகும்.
தர்காவும்,மவ்லித் பாடல்களும், சந்தனக்கூடும், கொடியேற்றமுமே இஸ்லாம் என்று ஆண்டாண்டு காலமாக ஊறித் திளைக்க வைக்கப்பட்டபோதும் குர்ஆனும் ஸஹீனான ஹதீஸூமே நம் உயிர் மூச்சு என்னும் எண்ண ஓட்டத்துக்கு செயல்முறைகளுக்கு மக்களை வென்றெடுக்கும் அதிசயத்தை சத்தியம் இன்றைக்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
இவ்வுலகில் மட்டுமல்லாமல் மறுமையிலும் மக்களை ஈடேற்றம் பெறச் செய்யும் இறுதி வெற்றிக்கு ஆற்றல் பெற்றது இந்த சத்தியக் கொள்கையே! அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக!