-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளி, மே 27

தமுமுக தோற்கடித்த முஸ்லிம் வேட்பாளர்கள்:


முஸ்லிம் பிரதினுத்துவம்  வேண்டும் எனவும், தேர்தலில் போட்டியிட்டு முஸ்லிம்களை பெருவாரியாக வெற்றி பெற செய்துள்ளோம் என்றும், முஸ்லிம்களின் மானத்தை காக்க வந்து விட்டோம் எனவும் மார் தட்டிக்கொள்ளும் இந்த கும்பல், தங்களின் சுயநலம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்துள்ளது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கும் வகையில், இவர்கள் களத்தில் இறங்கி தோற்கடித்த முஸ்லிம் வேட்ப்பாளர்களின் பட்டியலை இங்கு தருவது உபயோகமாக இருக்கும்.


1. அப்துல் பாசித் - முஸ்லிம் லீக் - வாணியம்பாடி - (வெற்றி பெற்றவர்: சம்பத் குமார்)
2. ஷேக் தாவூத் - முஸ்லிம் லீக் - நாகப்பட்டினம் - (வெற்றி பெற்றவர் : ஜெயபால்)
3. அல்தாப் ஹுசைன் - முஸ்லிம் லீக் - துறைமுகம் - (வெற்றி பெற்றவர்: பழ. கருப்பையா)
4. ஹசன் முகமது அலி ஜின்னா - திமுக- ஆயிரம் விளக்கு - (வெற்றி பெற்றவர்: வளர்மதி)
5. உபையதுல்லா - திமுக - தஞ்சாவூர் - (வெற்றி பெற்றவர்: எம். ரங்கசாமி)
6. கௌஸ் பாஷா - திமுக - மதுரை மத்திய தொகுதி - (வெற்றி பெற்றவர்: சுந்தர் ராஜன் )
7. சையது - காங்கிரஸ் - கிருஷ்ணகிரி - (வெற்றி பெற்றவர்:முனுசாமி)
8. முஹம்மத் யூசுப் - வி.சி - உளுந்தூர்பேட்டை - (வெற்றி பெற்றவர்: குமரகுரு)

குஜராத்தில் ஊழல் மலிந்து கிடக்கின்றது , அடுத்த கட்ட போராட்டம் குஜராத்தில் ஆரம்பம் – அண்ணா ஹசாரே


மே 26: நிலம் கையகப்படுத்துவது உள்பட நில விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சமூக நல ஆர்வலர் அண்ணா ஹஸாரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்வேறு சமூகக் குழுக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் அண்ணா ஹஸாரே கூறியதாவது: குஜராத்தில் ஊழல் மலிந்துள்ளது என்பது உரையாடல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
முதல்வர் நரேந்திர மோடிக்கு இரண்டு வேண்டுகோள்கள் விடுக்கிறேன். ஒன்று, மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்.
இரண்டு, கிராமங்களில் உள்ள நிலங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அடுத்து, தொழிற்சாலைகளுக்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதை குஜராத்திலிருந்துதான் துவக்க வேண்டியிருக்கும் என கருதுகிறேன் என்றார் ஹஸாரே.
இந்தக் கலந்துரையாடல்களில் சமூக நல ஆர்வலர்கள் சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கேஜ்ரிவால், மல்லிகா சாராபாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-தினமணி 27-5-2011
from : tntj.net

முத்துக்குளிக்க வாரீகளா..?


நான் தூத்துக்குடியில் பணிபுரிந்த சமயம், அங்கே எனக்கு முத்துக்குளிப்பவர்கள் சிலர் நண்பர்களாயினர். அவர்கள் மூலம் அறிந்து கொண்டதாவது... முத்துக்குளிப்பவர் முதலில் அதிகநேரம் நீருக்கடியில் மூச்சை தம் கட்ட பழகிக்கொள்ள வேண்டும். பின்னர் தன்னுடலுடன் ஒரு கயிற்றை
கட்டிக்கொண்டு படகிலிருந்து கடலில்
குதிக்க வேண்டும். கயிற்றின் மறுமுனை படகில் இருப்பவரின் கையில் இருக்கும்.
நீரின் அடியில் தரையில் எவ்வளவு விரைவாக முத்துச்சிப்பிகளை சேகரிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைய சேகரிக்க வேண்டும். கடலில் குதித்தவர் எவ்வளவு நேரம் மூச்சை தம் கட்டுவார்
என்று கடல் நீர்ப்பரப்பில் படகில் கயிற்றை பிடித்து இருப்பவருக்கு நன்கு தெரியும்.
அந்த நேரம் வந்தவுடன் மேலே
படுவேகமாக கயிற்றை இழுத்து தூக்கி விடுவார். (கயிற்றை கட்டிக்கொள்ள
காரணம்: அவ்வளவு சிப்பிகளின் வெயிட்டை தூக்கிக்கொண்டு நீந்தி மேலே ஏறி வருவது
கடினம்..!)

கயிற்றை கையில் பிடித்திருப்பவருக்கும் முத்து கிடைத்தால் பங்கு உண்டு என்பதால்,
"நம்ம பங்காளி உள்ளே இருக்க இருக்க நமக்கு லாபம்தானே" என்று கயிற்றை இழுக்காமல்
விட்டு வைத்திருப்பவராக இருக்ககூடாது அல்லவா..? இது ஒரு ரிஸ்க்கான வேலை.
உயிர் பிரச்சினை. எனவே, அந்த கயிற்றை பிடித்திருப்பவர் தன் மச்சினனாக மட்டுமே
இருப்பார். அதாவது, குதித்தவரின் மனைவியின் சகோதரன்..! 'தன் சகோதரி விதவை
ஆகக்கூடாது' என்று, சுயநலன் பார்க்காமல் மச்சான் உயிரை காப்பாற்றுவானாம்
மச்சினன் என்பதால்..! வேறு யாரையும் நம்பி முத்துக்குளிப்பவர்கள் கடலினுள்ளே
குதிப்பது கிடையாதாம்..!  

பிற்காலத்தில்,  ஆக்சிஜன் சிலிண்டர்கள் கட்டினால்... இன்னும் அதிக நேரம் சிப்பிகளை சேகரிக்கலாம். இதனால், இன்னும் வெயிட் ஏறும். இதனாலும், கட்டி தூக்க கயிறும் 
அவசியம். எனவே, மச்சினனும் அவசியம்.

இப்போது... சேகரித்த சிப்பிகளை உடைத்துப்பார்த்தால்... 400 கிலோ சிப்பிகளில் ஒன்றோ
அல்லது  இரண்டோதான் முத்துக்கள் கிடைக்குமாம். 

ஆக, இந்த அனைத்து சிப்பிகளிலும் முத்துக்கள் இருந்தால்...? முத்துக்கள்
இருந்தால்...? இருந்தால்...? எப்பூ....................டி இருக்கும்........?


இதற்குத்தான் வந்தது நவீன தொழில்நுட்பம்..! அது பற்றி அறியும் முன், சிப்பிகளில்
முத்துக்கள் எப்படி உருவாகின்றன என்று பார்த்து விடுவோம்...?


வியாழன், மே 26

கொட்டி கிடக்கிறதா சவூதியில்?, வெளிநாட்டு வாழ்வு


 ரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை.


எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி 
இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் 
என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து.அயல்நாட்டு 
நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் 
பணமாக இருக்கும்.

அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90 களுக்கு மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை வேலைகளில் ஈடுபடுவதை 
சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.

90க்கு மேல் வந்தவர்கள் படிப்பின் அவசியத்தை அனுபவப்பூர்வமாக உணர 
ஆரம்பித்தார்கள் சமூகத்திலும் இந்த காலகட்டத்திற்கு பிறகுதான் நிறைய 
விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டது. இவர்கள் தங்களுடைய பிள்ளைகளை இவர்களின் இளமையை விற்று படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சில விதிவிலக்கானவர்கள் சரியாக படித்து சரியான வேலைகளில் இருந்தாலும் 
அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை என்பதையும் மறுக்க 
முடியாது.

சரி விஷயத்துக்கு வருவோம் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா? 


30, 35 வருஷமாக சவூதியில் இருந்து சம்பாதித்து சந்தோஷமாக இருந்தீங்களா என்று இங்குள்ள முதியோர்களிடம் கேள்வியை வைத்துப் பாருங்கள்? இரண்டு குமரிகளைக் 
கட்டி கொடுத்தேன், பசங்களை 10 வது படிக்க வச்சு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்துட்டேன், வீடு கட்டினேன் என்று கேள்வியைத் திசைத்திருப்பி பதில் சொல்வார்கள். ஆனால் அவர் இழந்த இளமைக்கால வாழ்க்கை, மரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவர் பெற்றுக் கொண்ட வியாதிகள் இவை பற்றி பேசமாட்டார். தாங்கள் தோற்கவில்லை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.


இவர்கள் செய்த சாதனைகள் அதாங்க குமர்களை  கட்டிக் கொடுத்தது,பிள்ளைகளை வெளிநாடு கூட்டி வந்தது வீடு கட்டுனது இது போன்ற சாதனைகளை செய்ய 90 மேல் வந்தவர்கள் முழி பிதுங்கி நாக்கு தள்ள சம்பாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் சாதிக்க தாமதமாவதற்கு காரணம் அனைவரும் அறிந்ததே விலைவாசி உயர்வு.
70 80களில் வந்தவர்கள் சம்பளமும் 800 அல்லது 1000 ரியால் 90 களில் கடைநிலை வேலைகளுக்கு வந்தவர்களுக்கும் அதே 800 அல்லது 1000 தான்.

80 களில் வந்தவர்களுக்கு நாணய மதிப்பில் 1000(அன்றைய இந்திய நாணய மதிப்பு 15000) ரியால் பிரமாதமான சம்பளம் தான் அவர்களால் எதோ மிச்சம் பிடித்து வீடு கட்ட
முடிந்தது. 90 களில் வந்தவர்கள் வரவுக்கும் செலவுக்கும் ஊர் பயணம் போறதுக்கும்
சரியாக இருக்கிறது.

இதை விட பாவப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.


2010 களுக்கு மேல் வளைகுடா நாடுகளுக்கு 500 ரியால் 800 ரியால் சம்பளத்திற்க்காக
படிப்பை பாதியில் விட்டு விட்டு வருபவர்கள் இவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது இன்றைய விலைவாசி என்ன?


ஊரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கடைநிலை வேலை சம்பளம்கூட உயர்கிறது. உதாரணத்திற்கு 2002 ல் நான் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது 2500 ரூபாய் சம்பளம். என் மனைவி அதற்குள் செலவழித்து 300 ரூபாய் மிச்சம் பிடிப்பார். இப்போது 
அதே ஜவுளிக்கடை வேலைக்கு 8500 ரூபாய் சம்பளம் ஊரிலேயே கிடைக்கிறது. அந்த 
8500 ரூபாய் இப்போது குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

ஆனால் ஊரில் விலைவாசி கூடி விட்டது என்பதற்காக வளைகுடா நாடுகளில்
சம்பளத்தை கூட்ட மாட்டார்கள் .இங்கே அதே 500 அல்லது 800 ரியால் சம்பளம்தான்
500,800 (இந்திய மதிப்பிற்கு 6000,அல்லது 9600) சம்பளத்திற்கு புதிதாக நிறைய பேர்
இங்கு வேலைக்கு வருகிறார்கள். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா?


சவூதியில் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்கள் ஒரு சிலரின் சம்பள விவரங்களும் அவர்களுடைய வேலைகளும்.







இவர் பங்களாதேஷ் தொழிலாளி 500 ரியால் சம்பளம். வேலை இந்த மாடியின் 
எட்டு தளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சவூதி மணல் காற்றின் 
தூசியைப் பற்றி இங்கு வேலை செய்பவர்களுக்கு தெரியும்.




இவர் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஃபாஸ்ட்ஃபுட் சான்ட்வீச் கடையில் 
வேலை. சவூதி வெயிலில் அதுவும் நெருப்புக்குள் வேலை. சம்பளம் 800 (இ.9200)ரியால்.




இவர்கள் தழிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள். மண்டைய பிளக்கிற 
அரபு நாட்டு வெயிலில் ரோடு போடும் வேலை.
சம்பளம் 1000(இ.11500) ரியால். ஒரு நாள் இந்த வெயிலில் இவர்கள் தார் 
போடும்போது அருகில் நின்று பாருங்கள் அலுவலகத்தில் ஏசி காற்று 
காரணமாக வியர்வை வராமல் வியாதி வர வாய்ப்பு இருப்பவர்கள் 
மொத்த வியர்வைகளையும் வெளியாகி ஆரோக்கியம் பெற வாய்ப்பு கிடைக்கும்.



இவர் கேரளாவை சேர்ந்த தொழிலாளி அடுப்பு சூட்டில் வேலை.சரியான கூட்டம் வருகின்ற கடை பம்பரமாக சுழல்வார்கள்.சம்பளம் 1200(இ.13800) ரியால்.

இறுதியாக 


இப்போதும் 10th, 12th படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இதுபோன்ற 
கடைநிலை வேலைகளுக்கு தயவுசெய்து வராதீர்கள். உங்களையும் 
நீங்கள் சார்ந்திருக்கிற சமூகத்தையும் அழிவிற்கு இழுத்து செல்கிறீர்கள். 
அப்படி வருவதாக இருந்தால் சரியான முறையில் படித்து அதற்கேற்ற 
வேலைக்கு வாருங்கள். இப்படி வருபவர்கள் குடும்பத்தையும் அழைத்து 
வரலாம். கடைநிலை வேலை செய்யும் லேபர்களுக்கு குடும்பத்தை 
அழைத்துவர விசா அனுமதி கிடையாது என்பதை மனதில் இருத்தி 
கொள்ளுங்கள்.

நரேந்திரமோடி &  ஜெ..! (மெளனம் ஆன நம் உணர்வுகள்)



செல்வி.ஜெயலலிதா, தன்னை ஒரு அப்பட்டமான "பாஸிச வெறி
கொண்ட,       ஆர்.எஸ்.எஸ்.          அபிமான,          தீவிர ஹிந்துத்வா
அரசியல்வாதி" என அவ்வப்போது அடையாளம் காட்டிக்கொள்ள
கிடைக்கும் வாய்ப்புகளை என்றுமே தவற விட்டது   இல்லை...! 
அதுதான் ஜெ..!


முதன் முதலில்,அன்று தமிழ்நாட்டுக்கு யாரென்றே தெரியாத
'அத்வானி' என்பவர் பாபர் மசூதியை இடிக்க வேண்டி
'கரசேவை'க்காக அடியாள் தேடியபோது,                 அன்று
எதிர்க்கூட்டணியில் இருந்தாலும் தன் கட்சித்தொண்டர்களை
தாமாகவே 'கொலைச்சேவைக்கு' அனுப்பி
வைத்தார் ஜெ..!


பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப்பின் "if Ram temple is not possible here.. then where..?"
என்று பாஜக அல்லாத கட்சியின் ஒரே தலைவராய்
பேட்டியளித்து அத்வானிக்கே அன்று இன்ப அதிர்ச்சி கொடுத்து
ஹார்ட்அட்டாக்
வர வைக்க முனைந்தார்... ஜெ..!


பாபர் மஸ்ஜிதை இடித்த 'கும்பல்' என்று பாஜகவை எல்லோரும்
ஒதுக்கி வைத்திருந்த நிலையில், தமிழகத்தில் பாஜக என்ற
ஒரு கட்சி இருப்பதே நிறைய பேருக்கு தெரியாத நிலையில்,
முதன்முதலாக அதற்கு சிகப்புக்கம்பள  வரவேற்பு தந்து,
1998-ல் அக்கட்சியுடன் கூட்டணி போட்டு "தூய்மைப்படுத்தி"
ஐந்து நாடாளுமன்ற சீட்டுக்களையும் அள்ளித்தந்து,
தன் காவி கலரை காட்டி அனைவருக்கும் அதிர்ச்சி
அளித்தார், ஜெ..!

புதன், மே 25

தொழுகையின் முக்கியத்துவம் (எங்கும்...எந்த நிலையிலும்...எப்படியும்...!_


எங்கும் -- கிடைக்கும் சுத்தமான இடங்களில் எல்லாம், 

எந்த நிலையிலும் -- போர்சூழலோ, புரட்சி சமயமோ, முக்கிய விளையாட்டு இருக்கும்போதோ, மீன்பிடிக்க தூண்டில் போட்டிருக்கும்போதோ, பனிக்கட்டி மீதோ, குளிரிலோ, வெயிலிலோ, மழையியோ.... 
பாறையோ, பள்ளமோ, மேடோ, காடோ, ரோடோ, ரோட்டோர பிளாட்ஃபாரமோ, மைதானமா, ரயிலோ, பேருந்தோ, விமானமோ, கப்பலோ, கடலோ, பாலைவனமோ... என்றெல்லாம் பாராமல்...


எப்படியும்  -- உண்மையான இறையச்சம் கொண்ட முஸ்லிம்கள், தொழுகையை எக்காரணம் கொண்டும் விடுவதில்லை. ஆனாலும், இங்கே... சிலர் பள்ளிவாசல்களில் இடம் கிடைக்காவிட்டாலும், அல்லது அது எங்கு இருக்கிறது என்று தெரியாவிட்டாலும், அல்லது அங்கெல்லாம் போக அப்போதைய சூழ்நிலை இடம் தராமையாலும், நேரம் குறிக்கப்பட்ட கடமையான தொழுகையை விட்டுவிடாமல் எப்படியெல்லாம் நிறைவேற்றுகின்றனர் பாருங்களேன்..! இறைவனுக்கே எல்லாபுகழும்..!


 துருவப்பிரதேசம்..?
 ரயிலில்...
 பனிபெய்யும் கடுங்குளிர் காற்றினில்...
 விமானத்தினுள்...


 அரை இறுதிப்போட்டிக்கு முதல்நாள்... மொஹாலி...!


 டாக்ஸி இப்போ கொஞ்ச நேரத்துக்கு வராது

 இந்த இடம் கரெக்டா இருக்கா..?


 தொழுகை நேரம் என வந்து விட்டால்... தூண்டிலுக்கு சற்று இடைவேளை.




மதீனா: சாலையில் இடமில்லை. ஹாஜிகள்-தங்கள் பேருந்துகளின் கூரையில்...
 படிக்கட்டுகளில் கூட வரிசையாக...
 விமானத்தினுள்ளே இருக்கைகளின் இடுக்கினுள்...



 அடுத்து வரும் இந்த புகைப்படங்கள்... எகிப்திய புரட்சியின் போது...!
  







 இந்த சாலையோர தொழுகையாளி யார் என்று தெரிகிறதா? 
ஈரான் அதிபர், மஹ்மூத் அஹ்மதி நிஜாத்.

 
துக்கமோ-மகிழ்ச்சியோ, நோயோ-நலமோ, அவசரமோ-பொறுமையோ, புரட்சியோ-போரோ, பிரயாணமோ-ஓய்வோ, உடலில் உயிரும்... மூளையில் அறிவும் இருந்தால், எங்கும்... எந்த நிலையிலும்... எப்படியும்... நேரம் தவறாமல் தொழுதே ஆகவேண்டும்..! ஏனெனில்...