-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதன், மே 25

தொழுகையின் முக்கியத்துவம் (எங்கும்...எந்த நிலையிலும்...எப்படியும்...!_

எங்கும் -- கிடைக்கும் சுத்தமான இடங்களில் எல்லாம், 

எந்த நிலையிலும் -- போர்சூழலோ, புரட்சி சமயமோ, முக்கிய விளையாட்டு இருக்கும்போதோ, மீன்பிடிக்க தூண்டில் போட்டிருக்கும்போதோ, பனிக்கட்டி மீதோ, குளிரிலோ, வெயிலிலோ, மழையியோ.... 
பாறையோ, பள்ளமோ, மேடோ, காடோ, ரோடோ, ரோட்டோர பிளாட்ஃபாரமோ, மைதானமா, ரயிலோ, பேருந்தோ, விமானமோ, கப்பலோ, கடலோ, பாலைவனமோ... என்றெல்லாம் பாராமல்...

எப்படியும்  -- உண்மையான இறையச்சம் கொண்ட முஸ்லிம்கள், தொழுகையை எக்காரணம் கொண்டும் விடுவதில்லை. ஆனாலும், இங்கே... சிலர் பள்ளிவாசல்களில் இடம் கிடைக்காவிட்டாலும், அல்லது அது எங்கு இருக்கிறது என்று தெரியாவிட்டாலும், அல்லது அங்கெல்லாம் போக அப்போதைய சூழ்நிலை இடம் தராமையாலும், நேரம் குறிக்கப்பட்ட கடமையான தொழுகையை விட்டுவிடாமல் எப்படியெல்லாம் நிறைவேற்றுகின்றனர் பாருங்களேன்..! இறைவனுக்கே எல்லாபுகழும்..!

 துருவப்பிரதேசம்..?
 ரயிலில்...
 பனிபெய்யும் கடுங்குளிர் காற்றினில்...
 விமானத்தினுள்...

 அரை இறுதிப்போட்டிக்கு முதல்நாள்... மொஹாலி...!

 டாக்ஸி இப்போ கொஞ்ச நேரத்துக்கு வராது

 இந்த இடம் கரெக்டா இருக்கா..?

 தொழுகை நேரம் என வந்து விட்டால்... தூண்டிலுக்கு சற்று இடைவேளை.

மதீனா: சாலையில் இடமில்லை. ஹாஜிகள்-தங்கள் பேருந்துகளின் கூரையில்...
 படிக்கட்டுகளில் கூட வரிசையாக...
 விமானத்தினுள்ளே இருக்கைகளின் இடுக்கினுள்...

 அடுத்து வரும் இந்த புகைப்படங்கள்... எகிப்திய புரட்சியின் போது...!
  
 இந்த சாலையோர தொழுகையாளி யார் என்று தெரிகிறதா? 
ஈரான் அதிபர், மஹ்மூத் அஹ்மதி நிஜாத்.

துக்கமோ-மகிழ்ச்சியோ, நோயோ-நலமோ, அவசரமோ-பொறுமையோ, புரட்சியோ-போரோ, பிரயாணமோ-ஓய்வோ, உடலில் உயிரும்... மூளையில் அறிவும் இருந்தால், எங்கும்... எந்த நிலையிலும்... எப்படியும்... நேரம் தவறாமல் தொழுதே ஆகவேண்டும்..! ஏனெனில்...

தொழுகை -- கடமை

நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே, என்னையே நீர் வணங்குவீராக! என்னை நினைவு கூறும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக! (அல்குர்ஆன் 20:14)

அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை வணங்க வேண்டும் மேலும் தொழுகையை நிலைநாட்டவேண்டும் மேலும் ஜகாத்தை வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)

நபி(ஸல்) தனது மரண வேளையில்கூட "தொழுகை! தொழுகை!" என கூறிக் கொண்டிருந்தார்கள். (அறிவிப்பவர் : உம்மு ஸலமா-ரலி, நூல் : இப்னுமாஜா)
 
(தொழுகை நேரங்கள் : F- ஃபஜ்ர்,  dL-லுஹர்,  A-அஸர்,  M-மஃரிப்,  I-இஷா)

தொழுகை -- நேரங்குறிக்கப்பட்ட கடமை
நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்கள் மீது கடமையாக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)
(பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்!  (அல்குர்ஆன் 2:239)
.
தொழுகையால் மனிதன் இவ்வுலகில் அடையும் பலன்
தொழுகையை நிலை நிறுத்துவீராக, நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும் அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன் 29:45)

உள்ளச்சத்தோடு தொழுதால்தான் வெற்றி
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (அல்குர்ஆன் 23.1-2)

பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்! எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல்குர்ஆன் 2:45)

.
தொழுகையால் மனிதன் மறுவுலகில் அடையும் பலன்
மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) சொந்தங்கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)

'யார் தொழுகையை பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் இருக்கும். யார் அதை பேணிக்கொள்ள வில்லையோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, அத்தாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது'
 என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் -ரலி, நூல்: அஹ்மத்)

தொழுகையை விட்டால்  அல்லது  கவனமின்றி ஏதோ சிந்தனையில் தொழுதால் ..?
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள் அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள் (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள் (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
(அல்குர்ஆன் 19:59)

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். (அல்குர்ஆன் 107:4-5)

தொழுகை பற்றிதான் மறுமை நாளில் முதல் விசாரணை
'மறுமையில் (செயல்களை குறித்து) முதல் விசாரணை தொழுகையைக் குறித்தே இருக்கும்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபுஹுரைரா-ரலி, நூல் : அபுதாவூத்) 

தனியாக அல்லாமல், ஜமாஅத்தாக  தொழுவது...
'ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.) 

முஸ்லிமிற்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் உள்ள வித்தியாசம் தொழுகை
அடியானுக்கும் இணைவைத்தலுக்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் -ரலி, நூல் : முஸ்லிம்)

நமக்கும் (இறைநிராகரிப்பாளராகிய) அவர்களுக்கும் மத்தியிலுள்ள உடன்படிக்கை தொழுகையாகும். யார் அதை விட்டு விடுவாரோ அவர் காஃபிராகி விட்டார் என நபி(ஸல்) கூறினார்கள். (நூற்கள் : நஸயீ, திர்மிதீ, அபுதாவூத்);

பிரார்த்திப்போம் சகோ.
இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! எங்கள் இரட்சகனே! எனக்கும் என் பெற்றோருக்கும் (மற்ற) விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் (மறுமை) நாளில் மன்னித்தருள்வாயாக! (அல்குர்ஆன் 14:40)

தொழுகையை நிலைநாட்டும்படி அல்லாஹ் எண்ணற்ற இடங்களில் அல்குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். அதில் சில வசனங்களையும், தொழுகையைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் சிலவற்றையும் நாம் நினைவுக்கு கொண்டு வருவோம்.  அல்லாஹ், மறுமைக்காக தினமும் உழைக்கும்  தொழுகையாளிகளை   ஈருலகிலும் வெற்றிபெறும்  நன்மக்களாக ஆக்கியருள்வானாக!