-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

செவ்வாய், செப்டம்பர் 18

நூறு பேர்(The 100) புத்தக அறிமுகம்

"100 பேர்" நூல் முதலில் வெளிவந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டன
(இதன் தமிழ் முதல் பதிப்பு1998).இந்த புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 
வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று நாம் கான்பது அதனுடைய தமிழ் 
மொழிபெயர்ப்பு.

The100 தமிழக்கம
நூலாசிரியர்ஹெச்.ஹார்ட்
பதிப்பாசிரியர்
மணவை முஸ்தபா
இந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 
100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது அவர்கள் ஒவ்வொருவரும் மனித வரலாற்றிலும்.மற்ற மனிதனின் அன்றாட வாழ்விலும் 
ஏற்ப்படுத்திய பாதிப்பின் மொத்த அளவினை கொண்டு அவர்களின் வரிசை முறை அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் உலகின் மாபெரும் புகழ் வாய்ந்த100 நபர்களில் முதலிடத்தை 
முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்து முழு ஐரோப்பாவையும் திரும்பி பார்க்க வைத்தார்.சரியான செய்தியைக் கொண்டு சேர்த்தார்.இந்நூல் ஆசிரியர் கிறிஸ்துவர் 
என்பது கவனிக்கப்படவேண்டிய விடயம்.
இங்கு கணொளியாக ஆங்கில புத்தகத்தின் விளக்கம்
இனி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முதலிடத்திற்கு வருவதற்கு காரணமேன்ன 
என்பதை நூலாசிரியர் தனது முதல் அத்தியாயத்தில் சொல்வதை பார்ப்போம்.
முஹம்மது நபி (570-632)

இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு 
பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் 
தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும்;மற்றும் சிலர் “ஏன் 
அப்படி” 
என்று வினாவும் தொடுக்கலாம்: ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் 
ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே ஆவார்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும்
மதங்களில் 
ஒன்றை நிறுவி,அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். 
அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு பின்னரும் அவர்களின் தாக்கம் சக்திமிக்கதும்,எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக 
இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம்
பேற செய்திருப்பது,எடுத்த எடுப்பில் புதுமையாக தோன்றலாம். இந்த முடிவுக்கு
இரண்டு 
காரணங்கள் உண்டு.

ஒன்று:
கிரிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது 
அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவர்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட 
அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரனமாக இருந்தாலும், அதன் 
இறையமையிலை (THEOLOGY) உருவாக்கியதில் முதனமையானவரும், அதன்பால், 
மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும்,புதிய ஏற்பாட்டின் பெரும் 
பகுதியின் ஆசிரியருமான துய பவுல்தான்.(St.PAUL)

ஆனால் இஸ்லாத்தின் இறையமையியல் (THEOLOGY) அதன் அரநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அசமயத்தை 
மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் 
அவர்கள் மூலாதாரமான பொருப்பினை மேற்க்கொண்டிருந்தார்கள். மேலும், 
இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய 
திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தான்.

முஹம்மது நபி வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும்,கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன: அவர்கள் காலமான 
சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன.எனவே, 
முஹம்மது நபியின் கருத்துகளும்,போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை.

ஆனால் ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும் 
(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, 
முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக
முஹம்மது 
நபி உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவவத்தின் மீது ஏசுநாதரும்,தூய பவுலும் ஒருங்கினைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட
முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே 
சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் 
ஏசுநாதருக்கு இருந்த 
செல்வாக்கைப் போன்றே முஹம்மதுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது:

மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல்,முஹம்மது நபி சமயத்தலைவராக 
மட்டுமின்றி, 
உலகியல் துறைகளிலும் தலைவாரக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் 
வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.