குஜராத்தில் மோடியை புறகணித்த RSS தலைவர்கள்

குஜராத் மாநிலம் வடோரா நகர் அருகே உள்ள கயவரோஹன் என்ற இடத்தில் இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் முக்கிய அரசியல் கூட்டம் செப்டம்பர் 8,9 தேதிகளில் நடைபெற்றது. இதில் நாட்டில் நடக்கும் அரசியல், பொருளாதார, சமூக விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இதில் மோகன் பக்வத் உட்பட நாட்டின் அனைத்து பகுதி முக்கிய RSS தலைவர்கள் கலந்து கொண்டனர். எனினும் மோடியைச் சந்திப்பதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த RSS-ன் பத்திரிக்கை தொடர்பாளர் ப்ரதீப் ஜெயின், இது முழுக்க முழுக்க RSS கூட்டம் என்றும், வேறு யாரும் அழைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். எனினும் முதல்வர் மோடி அலுவலகத்திலிருந்து RSS தலைவர்களைச் சந்திப்பதற்காக நேரம் கேட்கப்பட்டதாகவும், எனினும் சந்திப்பிற்கான நேரம் RSS தலைவர்களால் ஒதுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று தனது அரசியல் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கும் மோடிக்கு, இது அரசியல் ரீதியான பின்னடைவாக கருதப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த RSS தலைவர் ஒருவர், குஜராத் முன்னாள் முதல்வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை விட்டு விலகிய முக்கிய தலைவரான கேசுபாய் பட்டேலுடன் மோடி சமரசம் செய்துகொள்ளுமாறு RSS கட்டளையிட்டதாகவும், இதற்கு மோடி மறுத்து விட்டதாகவும், இதனால் RSS அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் குஜராத் கலவரம் குறித்து விசாரணை முடிவுகள் அனைத்தும் மோடியை நோக்கி இருந்து வருவதால், இதிலிருந்து RSS விலகியிருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.