-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வியாழன், டிசம்பர் 29

பொதுத் தேர்வுக்கான பயிற்சி!

12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப் பட்டு விட்டன (மார்ச் 8). இன்றைய சமுக சூழல் ஒரு மாணவனின் அறிவாற்றலை அவன் பெறும் மதிப்பெண்களை கொண்டு தீர்மானிக்கிறது. ஒவ்வொரு மதிப்பெண்ணும் ஒரு மாணவனின் ஒட்டு மொத்த வாழ்க்கை சூழலையும் இல்லை என்றால் குறைந்தபட்சம் பல ஆண்டுகளுக்காவது தீர்மானிக்க கூடியதாக உள்ளது.  பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் அந்த மாணவன் தன் கல்விக்காக வருங்காலங்களில் செலவிட போகும் பணத்தை அவன் தந்தையோ தாயோ படப்போகும் சிரமத்தைத் தீர்மானிக்கிறது.
இச்சூழ்நிலையில் மாணவர்கள் கல்வியின் ஆற்றலை உணர வேண்டும். மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதிக மதிப்பெண்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். என்ன படித்தாலும் மதிப்பெண் வரவில்லை எனும்; குரலை பல இடங்களில் கேட்டிருப்போம். படிப்பது ஒரு முறை என்றால் அதைப் பரிட்சையில் வெளிப்படுத்துவது மற்றொரு முறை.
தேர்வில் எப்படி எழுதினால் அதிக மதிப்பெண்களைப் பெறலாம் என்பதற்கான குறிப்புகளும் சில நுனுக்கங்களும் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றை வீட்டிலேயே பயிற்சி செய்து பார்ப்பதன் மூலம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற இயலும்.

 படித்ததை எல்லாம் வெளிப்படுத்துவதற்கல்ல தேர்வு. தேவையானவற்றை தெளிவாக உணர்த்துவது தான் நல்ல விடைகள்.

அதிகமாக எழுதினால்தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் எனும் தவறான மனப்பான்மை மாணவர்களிடம் காணப்படுகிறது. அதிக பக்கங்கள் அதிக மதிப்பெண்களை பெற்று தராது. 

வினாத்தாளை வாங்கியவுடன் சிலர் பதில் எழுத ஆரம்பித்து விடுவார்கள். முழுவதுமாக எழுதி முடித்தவுடன் வினாவை மறுபடியும் வாசித்தால் அவர்கள் எழுதிய பதிலுக்கும் வினாவிற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியும். வினாவின் தொடக்கத்தை மட்டும் படித்து விட்டு எழுதியதால் இது போன்ற பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே வினாத்தாளை முழுவதுமாக வாசிக்க வேண்டும்.

பத்து நிமிடங்கள் எந்த வினாவிற்கும் பதில் எழுதாமல் நன்கு தெரிந்த வினாக்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்

எல்லாத் கேள்விகளுக்கும் விடை தெரியும் என்றால் அவற்றில் நன்கு தெரிந்த பதிலை முதலில் எழுதுவது நல்லது. திருத்துபவர் மனதில் முதலில் ஏற்படுத்தும் தாக்கம் சிறந்த தாக்கமாக அமையும். எனவே நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுதுவது நல்லது.

நன்றாக தெரிந்த வினாவிற்கு தேவைக்கு அதிகமாக எழுதி தேர்வின் பாதி நேரத்தை வீணடித்து விடக்கூடாது. ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம் ஒதுக்க வேண்டும்.(எ.கா. 3 மணி நேரம் பரீட்சை என்றால் 10 நிமிடம் கேள்வித்தாளை முழுவதுமாக ஒரு பார்வை பார்க்க: 5 நிமிடம் தெரிந்த விடைகளை தேர்ந்தெடுத்து விரிசைப்படுத்த: அடுத்து ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம் ஒதுக்கி எழுத வேண்டும்.)

பொதுத் தேர்வுக்கு முன் பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கூறிய முறையை பயிற்சி செய்து கொள்ளவும். அழகிய முறையில் எவ்வாறு தேர்வு எழுதுவது என்பதையும் காண்போம்.

தேர்வில் அழகாக மற்றும் தெளிவாக எழுதுவதன் மூலமாக திருத்துபவரின் சிரமம் குறைகிறது. அவர் சிரமம் குறைந்தால் நம் மதிப்பெண் அதிகரிக்கும்.

தேர்வுத்தாளை திருத்துபவர் எல்லா பலவீனங்களும் கொண்ட மனிதன் என்பதால் அழகாக இல்லை என்றாலும் குறைந்த பட்சம் தெளிவாக எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. எழுத்தைக் கொண்டே ஒருவருடைய மனப்பான்மையை ஒரு வகையில் யூகிக்க முடிகிறது என்று கூறுகிறார்கள். அதிக அடித்தல் திருத்தலுடன் எழுதுவது ஒருவருடைய நிலையற்ற மனப்பான்மையை எளிதில் காட்டி விடும்.

அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவற்கு பெரும் சாதனை செய்ய வேண்டியதில்லை. பொதுத்தேர்வு தொடங்க இன்னும் நாட்கள் உள்ள இந்த தருணத்தில் வெறும் படிக்க மட்டும் செய்யாமல் படித்ததை சிரமம் பார்க்காமல் எழுதிப் பார்த்து விடுவது நாம் பரிட்சையில் செய்யும் பல தவறுகளை நமக்கு அடையாளம் காட்டி விடும். பயிற்சித் தேர்விலும் பொதுத் தேர்விலும் கீழ்கண்ட முறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக சிறந்த முடிவுகளைப் பெற முடியும்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் வரிக்கும் இடையில் போதுமான இடைவெளி விட்டு எழுதவும்.

ஒரு பகுதியில் உள்ள முக்கியமானக் கருத்துக்களை அடிக் கோடிட்டு காட்டவும்.

வண்ண எழுதுகோல்கள் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. ஏனெனில் முட்டாள்தனமான வண்ணங்களை அடிக்கோடிட உபயோகிப்பது திருத்துபவரின் எரிச்சலை கூட்டும். நம் மதிப்பெண்ணைக் குறைக்கும். எனவே சற்று கூடுதல் கருமையான பென்சில்களை உபயோகிப்பது நல்லது. 

அறிவியல் பாடங்களில் வரையும் படங்களை அழகாக வரைவதுடன் அனைத்துப் பாகங்களையும் கட்டாயம் குறித்துக் காட்டுங்கள். முடிந்தால் நகல் எடுத்தது போல் வரைவது நல்லது. (இதற்காக அதிக நேரத்தை விணாக்க வேண்டாம்). 

முதல் கேள்வியில் அழகாக எழுதத் தொடங்கி செல்ல செல்ல கோழிக் கிறுக்கலாக மாறி விட கூடாது. ஒவ்வொரு கேள்விக்கும் சரியான அளவு நேரம் ஒதுக்கி எழுதுவதன் மூலமாக தேர்வில் கடைசி நிமிடத்தில் நடைபெறும் இது போன்ற தவறுகளைத் திருத்தி கொள்ளலாம். கடைசி நிமிடம் வரை படிப்பதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

எவ்வாறு கேள்வித்தாளை வாங்கியவுடன் எழுத ஆரம்பிக்க கூடாதோ அதைப் போலவே கடைசி வினாடி வரை எழுதவும் கூடாது. குறைந்தது 5 நிமிடங்களுக்கு முன்னதாக எழுதி முடித்துவிட்டு கீழ்க்கண்டவற்றை சரி பார்க்கவும்.

ஒவ்வொரு பதிலுக்குமான கேள்வியின் எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என சரி பார்க்கவும். இது மிக மிக முக்கியம்.

ஒவ்வொரு பதிலிலும் முக்கியமான புள்ளிகள் அடிக்கோடிடபபட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

சூத்திரங்கள் பெட்டிக்குள் எழுதப்பட்டுள்ளதா என்பதை சரி பர்க்கவும்.

மிக முக்கியமான ஒன்றை கவனத்தில் கொள்ளவும். எக்காரணம் கொண்டும் 786, நாகூர் ஆண்டவர் துனை, பிஸ்மில்லாஹ் முருகன் துனை போன்ற வாசகங்களை விடைதாளில் எழுத வேண்டாம். இது முதல் பார்வையிலேயே உங்கள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தலாம். திருத்துபவர் மாற்று நம்பிக்கையாளராகவோ அல்லது இறை நம்பிக்கை அற்றவராகவோ இருக்கும் பட்சத்தில் இவை எதிர் மறை விளைவுகளை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே பக்தியை எழுத்தில் காட்டாமல் மனதில் நினைத்து எழுத தொடங்கி விடுவது நல்லது. (786, நாகூர் ஆண்டவர் துனை என்பதெல்லாம் இஸ்லாத்திற்கெதிரானது)

எல்லாவற்றிக்கும் மேலாக கடின உழைப்பும் அதிகமாக பயிற்சி செய்து தேர்வுகளை எழுதுவதும் உங்களின் மதிப்பெண்ணைக் கூட்ட உதவும். 

நன்றி: உணர்வு வார இதழ்