கால சக்கரத்தை சூழலச் செய்யும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்:
இரவையும் பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவில் சான்றை ஒளியிளக்க செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம். [அல்குர்ஆன் 17:12]
புத்தாண்டு பிறக்கப் போகிறது. பல சாதனைகளையும் செய்து புததாண்டை அடையப்போகும் மகிழ்ச்சியில் தடபுடல் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் இனி நடைபெறும். புது வருடத்தை அடைந்ததற்காக பூரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வண்ணமாக பல கருத்துள்ள (?) எஸ்எம்எஸ்கள் மெயில்கள் பரிமாறப்படும். தொலைபேசி வாயிலாகவும் கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் வாயிலாகவும அன்பு வெளிப்படும்.
இந்த விழாக்கோலம் நம் சகோதரர்களையும் விட்டபாடில்லை...
இஸ்லாமிய வருட பிறப்பானாலும், ஆங்கில வருட பிறப்பானாலும் அல்லது பிறந்த நாளானாலும் கொண்டாடுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சுpந்தித்து பார்த்தால் அதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
உலகத்தில் ஏதாவது சாதனை செய்தோ அல்லது கஷ்டப் பட்டு எதையாவது அடைந்தாலோ அதில் கொண்டாடுவதற்கு அhத்தம் உள்ளது. முஸ்லிம்கள் கொண்டாடக்கூடிய இரு பெருநாட்களும் இவ்விதத்திலேயே அமைந்துள்ளன. ஒரு மாதம் இறைவனுக்காக தன்னுடைய பசியையும் தாகத்தையும் இச்சைகளையும் துறந்து இறையச்சம் என்ற உன்னதத்தை அடைந்தோம் என்பதற்காகத்தான் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்.
எல்லா தியாகங்களையும் செய்து தன்னுடைய வாழ்விலே மனித குலத்திற்கு முன்னுதாரணமாக உள்ள நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் செய்த தியாகங்களை நினைவூட்டும் விதமாகவும் நாமும் இறைவனுக்காக எவ்வித தியாகத்தையும் செய்யத்தயார் என வெளிகாட்டும் விதமாக இறைவன் சொன்ன வழியிலேயே அறுத்து பலியிட்டு ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
புத்தாண்டை அடைவதற்கு நம்முடைய உயிரை நம்முடைய கையிலா பிடித்து வைத்திருந்தோம் கொண்டாடுவதற்கு? புத்தாண்டு மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் வல்ல இறைவன் கொடுக்கும் வரம் அதை பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அதை கொண்டாடுவதில் எவ்வித அர்த்தமுமில்லை.
ஒரு தினம் கொண்டாடப்படுவதற்கு அறிவுப்பூர்வமான காரணங்கள் ஏதும் அடிப்படையாக இருக்குமேயானால் அதில் மனித சமுதாயத்திற்கு பலன்கள் கிடைத்திட வாய்ப்புண்டு. வெறும் கூத்து கும்மாளம் போதை ஆட்டங்கள் போன்ற கேளிக்கைகளால் ஒருதினம் அனுஷ்டிக்கப்படுகிறதென்றால் அதனால் பெரும் பயன் எதுவும் உலகிற்கு கிடைத்து விடுவதில்லை.
புதுவருடத்தை அடைந்து விட்டோம் என்பதாலும் அதில் வரக்கூடிய நாட்கள் சந்தோஷமாகவும் நல்லதாகவும் அமைய வேண்டும் என்பதாலும் அவ்வருடத்தின் முதல் தினத்தை கொண்டாடுவதாக மக்களில் சிலர் கூறுகின்றனர்.
நாட்களும் வருடங்களும் நல்லதாகவும் சந்தோஷமாகவும் அமைய வேண்டுமென்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதற்கான அனுகுமுறை வீண் கேளிக்கை ஆட்டங்கள் என்பது நியாய உணர்வுள்ள யாராலும் ஜீரணிக்க முடியாத விஷயமாக உள்ளது.
மனித வரலாற்றை கொஞ்சம் பின்னோக்கி ஆராய்ந்து பார்த்தால் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் கொண்டாடப்பட்டு வந்தன. பிறகு ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படியெல்லாம் அது பல மாற்றங்களுக்கு உட்பட்டு பலமாதிரியாக மருவி நம்முன் வந்து நிற்கிறது என்பதை அறியலாம்.
கி.மு. 2000ம் ஆண்டில் மெசபடோமியாவினர் இளவேனிற் காலத்தை (மார்ச் 25) புத்தாண்டாகக் கொண்டாடினர். எகிப்தியர்கள் மற்றும் பாரசீகர்களும் அப்படியே கொண்டாடினர்.
கிரேக்கர்கள் குளிர்காலத்தில் புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். ஆரம்ப ரோம காலண்மரிலும் மார்ச் ஒன்றாம் தேதி தான் புதவருடம். ஆதில் பத்து மாதங்கள் தான் இருந்தன. மார்ச் தான் முதல் மாதம். செப்டம்பர் 7வதுமாதம், அக்டோபர் 8வது மாதம், நவம்பர் 9, டிசம்பர் 10 என்ற விதத்தில் தான் இருந்தது.
அதன் பிறகு கி.மு 700க்குப் பின் வந்த ரோம இரண்டாம் மன்னன் நுமா பொன்டிலியஸ் என்பவர் தான் ஜனவரியையும், பிப்ரவரியையும் சேர்த்தார். இந்த காலண்டர் சந்திரனை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
பிறகு கி.பி. 46ல் ஜூலியஸ் சீசர் தான் சூரியனை அடிப்படையாகக் கொண்ட காலண்டரை உருவாக்கினார். இவர் தான் ஜானஸ்(துயரௌ) என்ற சூரியக்கடவுளின் பெயரால் ஜனவரியில் கொண்டாட்டத்தை உருவாக்கினார். இந்த ஜானஸ் என்ற கடவுளுக்கு இரண்டு முகங்கள் வைக்கப்பட்டன.
ஒருமுகத்துக்கு பழைய வருடம் என்றும் மற்றொரு முகத்துக்கு புதிய வருடம் என்றும் பெயரிடப்பட்டிருந்தன. இப்படி புத்தாண்டை அவர்கள் ஒரு வணக்கம் போன்று கொண்டாடியிருந்ததை இவ்வரலாற்றுக் குறிப்பிலிருந்து நாம் அறிய முடிகிறது. ரோமானியர்கள் தங்கள் ஆலுவலகங்களில் ஜனவரி 1ஐ விருந்து கேளிக்கைகளுடன் கொண்டாடியுள்ளனர். பிறகு பழைய வழக்கம் என்ற பெயரில் மக்களைத் திருப்திப் படுத்த மார்ச் மாதத்தில் புத்தாண்டைக் கொண்டாடியுள்ளனர்.
அந்தக் காலகட்டத்தில் கிருஸ்தவ ஐரோப்பாவில் டிசம்பர் 25 இயேசு பிறந்தநாள், மார்ச் 1ம் தேதி யnரெஉயைவழைn னயல அதாவது ஜிப்ரயில் மர்யமிடம் உணர்த்திய நாள், மார்ச் 25ந்தேதி ஈஸ்டர் கொண்டாட்டம் என்ற ரீதியில் அவர்களின் வழிமுறை இருந்திருக்கிறது.
இப்படி மூடநம்பிக்கைகளாலும் இணைவைப்பு என்ற பாவத்தினாலும் அரங்கேற்றப்பட்டிருக்கும் இந்தப் புத்தாண்டு கொண்டாடடங்கள் நமக்குத் தேவையா? நூம் அதை கொண்டாட அனுமதி உள்ளதா?
அதைக் கொண்டாடுவதன் மூலம் மார்க்கத்திற்கல்லவா நாம் மாறு செய்கிறோம்?
ஒரு கொண்டாட்டத்தின் மூலம் எதுவாக இருக்கிறதென்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
இஸ்லாம் கொண்டாடச் சொல்லும் தினங்களை எண்ணப் பார்த்தாயா? அவைகளில் முழுமையான இறைஅழைப்பும் நினைவுகூறும் மகத்தான இரட்சகனுக்குச் செய்யப்படக்கூடிய தியாகப் படிப்பினைகளும் மறுமைக்கு வழிகாட்டலும் அல்லவா நிறைந்துள்ளது. அவற்றில் அல்லவா மனித சமுதாயத்துக்கு பலன் இருக்கிறது.
இனறைய புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மனிதர்களின் மூளைசசலவையாய் இருக்கிறது. மனிதர்களுக்கு பயன்மிக்க வழி காட்டலும் வளமான பின்னனியில்லாமலும் இருக்கிறது.
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்:
இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தா செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வண்ஙகுவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்யுங்கள் (அல்குர்ஆன்: 41:37)
.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் ஒருவர் ஒரு சமூகத்தினரை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவரே! (அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அஹ்மது 4968)
எனவே நன்மைகளாய் காட்டப்படும் இப்படிப்பட்ட கலாச்சார சூழ்ச்சிகளில் சிக்கி அல்லாஹ் நமக்கு தந்திருக்கும் தனித்தன்மையை இழந்து விடாதவாறு அல்லாஹ்வின் பேரருளை பெற முயற்சிப்போமாக!