ரஸ்மின் M.I.Sc
மன்ஸில் என்ற புத்தகத்தின் ஆரம்பத்திலேயே அதில் உள்ளவைகளுக்கு ஆதாரமாக ஒரு ஹதீஸைப் போட்டிருப்பார்கள் அந்த ஹதீஸை(?)யும் அதன் தரத்தைப் பற்றியும் இப்போது பார்ப்போம்.
المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص (4 / 458)
8269 أخبرنا أحمد بن يعقوب الثقفي ثنا يوسف بن يعقوب القاضي ثنا محمد بن أبي بكر المقدمي حدثني عمرو بن علي المقدمي عن أبي جناب عن عبد الله بن عيسى عن عبد الرحمن بن أبي ليلى حدثني أبي بن كعب رضي الله عنه قال : كنت عند النبي صلى الله عليه و سلم فجاء أعرابي فقال : يا نبي الله إن لي أخا و به وجع قال : و ما وجعه ؟ قال : به لمم قال : فأتني به فأتاه به فوضعه بين يديه فعوذه النبي صلى الله عليه و سلم بفاتحة الكتاب و أربع و آيات من آخر سورة البقرة و هاتين الآيتين { و إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم } البقرة و آية الكرسي و آية من آل عمران { شهد الله أنه لا إله إلا هو } و آية من الأعراف { إن ربكم الله الذي خلق السموات و الأرض } و آخر سورة المؤمنين { فتعالى الله الملك الحق } و آية من سورة الجن { و أنه تعالى جد ربنا ما اتخذ صاحبة و لا ولدا } و عشر آيات من أول الصافات و ثلاث آيات من آخر سور الحشر و { قل هو الله أحد } و المعوذتين فقام الرجل كأنه لم يشك شيئا قط
قد احتج الشيخان رضي الله عنهما برواة هذا الحديث كلهم عن آخرهم غير أبي جناب الكلبي و الحديث محفوظ صحيح و لم يخرجاه
تعليق الذهبي قي التلخيص : الحديث منكر
ஹஜ்ரத் மவ்லானா ஷா முஹம்மது யுசுப் ஸாஹிப் நவ்வரல்லாஹுமர்ஹதஹு அவர்கள் தமது ஹயாத்துஸ் ஸஹாபா என்ற கிதாபின்மூன்றாம் பாகம் 374ம் பக்கத்தில் இமாம் அஹ்மத், ஹாகிம்,திர்மிதி ஆகியோரின் அறிவிப்பின் வாயிலாக இம்மன்ஸிலின்சிறப்பை விளக்கியுள்ளார்கள். ஹஜ்ரத் உபை பின் கஅப் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் நபி (ஸல்) அவர்களின் அருகில்இருந்த போது ஒரு கிராமவாசி அங்கு வந்து நாயகமே எனக்கு ஒருசகோதரர் இருக்கிறார் அவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது எனக்கூறினார். அவருடைய நோய் என்ன? என நபியவர்கள்வினவியதற்கு அவர் ஒரு வகையான பைத்தியம் என்றார். அப்போதுநபி (ஸல்) அவர்கள் தங்களின் சமூகத்திற்கு அவரை அழைத்து வரச்செய்து அவர் முன்னிலையில் அவுது பில்லாஹி ஓதி, சூரத்துல்பாத்திஹா, சூரத்துல் பகராவின் ஆரம்பத்திலுள்ள நான்குஆயத்துக்கள், வஇலாஹுகும் இலாஹுன்(வ்)வாஹிது என்ற ஆயத்,ஆயத்துல் குர்ஸி, சூரத்துல் பகராவின் கடைசியில் உள்ள மூன்றுஆயத்துக்கள், ஷஹிதல்லாஹு அன்னஹு என்ற ஆயத், சூராமுஃமினீனின் இறுதியில் உள்ள ஃபதஆலல்லாஹுல் மலிக்குல் ஹக்என்ற ஆயத், சூரா ஜின்னில் உள்ள வஅன்னஹு தஆலா ஜத்துரப்பினா என்ற ஆயத், சூரா வஸ்ஸாப்பாத்தில் உள்ள முதல் பத்துஆயத்துக்கள், சூரா ஹஷ்ருடைய கடைசி மூன்று ஆயத்துக்கள், சூராகுர்ஹுவல்லாஹு அஹது, சூரா குல் அஊது பிரப்பில் பலக், சூராகுல் அஊது பிரப்பின்னாஸ் ஆகியவற்றை ஓதினார்கள். உடனே அந்தமனிதர் எழுந்து சென்றார். அவருக்கு நோய் ஏதேனும் இருந்ததாகஎண்ணுவதற்குக் கூட இடமில்லாதவாறு அவர் ஆகிவிட்டார்.
நூல் : கன்ஜ், பாகம் - 01 பக்கம் : 112
கன்ஜ் என்ற நூலில் இருப்பதாகப் போடப்பட்டுள்ள மேற்கண்ட செய்தி ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை பதிவு செய்த இமாம் ஹாகிம் அவர்கள், "அபூஜனாப் அல்கல்பீ” என்பவரைத் தவிர மற்ற அனைத்து அறிவிப்பாளர்களையும் இமாம் புகாரி, முஸ்லிம் இருவரும் ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.இந்த செய்தி “பாதுகாக்கப்பட்ட ஆதாரப்பூர்வமானதாகும்'' என்று அந்த செய்தியின் கீழே கூறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் ஹாகிம் அவர்கள் ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று கூறுவதில் கவனக் குறைவாக நடந்து கொள்பவர், இவரின் இது போன்ற கருத்துக்களை ஆய்வு செய்த பிறகே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ்கலை அறிஞர்களின் தெளிவான முடிவாகும்.
எனவேதான் இவரின் இந்த நூலை ஆய்வு செய்த இமாம் தஹபீ அவர்கள் அவர் ஆதாரப்பூர்வமானது என்று சொன்ன ஏராளமான செய்திகளை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். இந்த செய்தியையும் ஆய்வு செய்த இமாம் தஹபீ அவர்கள் இந்த செய்தி மறுக்கப்படவேண்டியது என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இந்த செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக “அபூ ஜனாப்” என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதன் விவரம் இதோ:
قال ابن سعد كان ضعيفا في الحديث ... وقال علي بن المديني كان يحيى بن سعيد يتكلم فيه وفي أبيه وقال البخاري وأبو حاتم كان يحيى القطان يضعفه ... وقال عمرو بن علي متروك الحديث وقال ابراهيم الجوزجاني يضعف حديثه وقال يعقوب ابن سفيان ضعيف... وقال النسائي ليس بالقوي وقال في موضع آخر ليس بالثقة يدلس... وقال ابن عمار ضعيف - تهذيب التهذيب - (11 / 177)
இப்னு ஸஅத் அவர்கள் இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இவரை விமர்சனம் செய்துள்ளார்கள் என்று அலீ பின் அல்மதீனி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று அம்ர் பின் அலீ கூறியுள்ளார்கள். இப்ராஹீம் அல்ஜவ்ஸஜானீ அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். யஃகூப் பின் சுஃப்யான் அவர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். இமாம் நஸாயீ அவர்கள் இவர் நம்பகமானவர் இல்லை என்றும் இருட்டடிப்பு செய்பவர் என்று கூறியுள்ளார்கள். இப்னு அம்மார் அவர்களும் இவரை பலவீனமானவர் என்றே கூறியுள்ளார்கள்.
(நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :11, பக்கம் :177)
எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்து செயல்படுத்த முடியாது.
ஆனால் பொதுவாக குர்ஆனின் சில அத்தியாயங்களுக்கு நபியவர்கள் சில சிறப்புக்களை கூறியுள்ளார்கள் அந்த அத்தியாயங்களையும் அதன் சிறப்புக்களையும் ஒவ்வொன்றாக அடுத்த இதழில் இருந்து நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்.......