-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வியாழன், ஜனவரி 5

சூரத்துன்னாஸ் விளக்கம்!

  கண்ணியத்திற்குரிய அல்லாஹ் தன் திருமறையில்:

(முஹம்மதே) மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும் மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர். (அல்குர்ஆன்: 114: 1-6)
இந்த அத்தியாயத்தின் சிறப்புகள் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பெரிதாக்கி பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் சென்றால் குல்ஹூவல்லாஹூ அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தமது முகத்தையும் தம் இரு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள் அவர்கள் நோயுற்ற போது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள். (ஆயிஷா(ரலி) புகாரி 5748, 6319, 5018)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அல்முஅவ்விதாத் (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதி தம் மீது ஊதிக் கொள்வார்கள். அவர்களது (இறப்பிற்கு முன்) நோய் கடுமையானபோது நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடலின் மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள்ள சுபிட்சத்தை நாடியே அவ்வாறு செய்தேன் (ஆயிஷா(ரலி) புகாரி 5016)

நபி(ஸல்) அவர்கள் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் நீ சொல் என்று சொன்னார்கள். அதற்கு அவர் நான் எதைச் சொல்ல என்று கேட்டேன். குல்ஹூவல்லாஹூ அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின் னாஸ், ஆகிய பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களை ஓதுவீராக! என்று சொல்லி, நபி(ஸல்) அவர்கள் அவைகளை ஓதினார்கள். பிறகு மக்கள் இவற்றை ஒதி பாதுகாப்புத் தேடுவதை விட வேறெதனையும் பாதுகாப்பு தேடுவதற்குப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள்.(உக்பா பின் ஆமிர் (ரலி) நஸயி: 5336,5334) 

இறங்கிய காரணம்:

 இந்த இரண்டு அத்தியாயங்களும் இறங்கியதற்கான காரணத்தைப் பார்த்தால் நபியவர்களின் மீது சூனியம் வைக்கப்பட்டதாகவும் அப்போது தான் ஜிப்ரயில் இந்த இரண்டு சூராக்களையும் அருளியதாகவும் நபியவர்களுக்கு எதிராக யூதன் ஒருவன் ஒரு நூல் பதினோரு முடிச்சு போட்டு சூனியம் வைத்ததாகவும் ஜிப்ரயில் இந்த அத்தியாயங்களின் ஒவ்வொரு வசனமாக ஓதும் போதும் ஒவ்வொரு முடிச்சு அவிழ்ந்ததாகவும் அது தான் இவ்வசனம் இறங்க காரணம் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தச் செய்தியை இமாம் பைஹகி அவர்கள் தமது தலாயிலுந் நுபுவ்வா என்ற நூலில் பதிவுசெய்துள்ளார். இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவித்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் செய்தி சரியானதாக இல்லை. ஏனெனில் புகாரியின் விரிவுரையான ஃபத்ஹூல் பாரியில் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இதைத் தவறு என்று சுட்டிக்காட்டி பதிவு செய்கிறார். இந்தச் செய்தியை இப்னு அப்பாஸ்(ரலி) யிடமிருந்து இப்னு ஸஅத் என்பவர் அறிவிக்கிறார். ஆனால் இந்த இப்னு ஸஆத் என்பவருக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) க்கும் இடையில் துண்டிப்பு (முன்கதிஃ) இருக்கிறது. அதாவது இப்னு ஸஅதுக்கும் இப்னு அப்பாஸ் (ரலி)க்கும் தொடர்பே இல்லை. இப்னு அப்பாஸ் காலத்தில் இப்னு ஸஅத் வாழவே இல்லை. எனவே நபியவர்களின் மீது சூனியம் வைக்கப்பட்டதற்காகத் தான் இந்த இரண்டு சூராக்களும் இறங்கியது என்பது பலவீனமாகிறது. (இப்னு கஸீர் பாகம் 4 பக்கம் 575: பத்ஹூல்பாரி பாகம் 10 பக்கம் 225: தல்ஹீஸூல் ஹபீர் பாகம் 4 பக்கம் 40)

சூராவின் விரிவுரை:

(குல்அஊது பிரப்பின்னாஸ்)மனிதர்களின் கடவுளிடத்தில் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் நபியே நீர் சொல்வீராக! இந்த வசனத்தின் மூலம் இறைவன் நமக்குச் சொல்லும் செய்தி, இறைவனின் தூதர்களாக இருந்தாலும் அவர் களாகவே தங்களை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் இறைவன் பிரார்த்திப்பதின் மூலம் பாதுகாவல் தேடச் சொல்லுகிறான். 

வெறுமனே பாதுகாப்புத் தேடச் சொல்லாமல் இறைவனின் மூன்று பண்புகளைக் கூறுவதின் மூலம் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டுத் தான் பாதுகாவல் தேடச் சொல்லுகிறான்

ரப் என்றால் படைத்து பரிபாலிப்பவன். அதாவது மனிதனைப் படைத்ததோடு நின்றுவிடாமல் அவனைப் பராமரிக்கவும் செய்கிறான். உதாரணத்திற்கு ரப் என்ற வார்த்தையை விளங்கிக் கொள்வதாக இருந்தால் ஏதேனும் செடி கொடிகளை நட்டுவைத்து விட்டு, பிறகு அதற்குத் தண்ணீர் பாய்ச்சி. களையெடுத்து பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு உரம், மருந்துகளைப் பயன்படுத்தி செடிகளை பராமரித்து பாதுகாத்து வருபவனுக்குப் பெயர் ரப் என்று சொல்லப்படும். அதுபோல் அல்லாஹ் மனிதகுலத்தைப் படைத்து பராமரிக்கிறான் என்று சொல்லுகிறான்.

(மலிக்கின்னாஸ்) மனிதர்களின் அரசன்;: மாலிக் என்றால் அரசன்,உடைமையாளன் சொந்தக்காரன் என்று சொல்லலாம். இதை விளங்கிக் கொள்வதற்கு மேற்சொன்ன உதாரணத்தையே விளக்கத்திற்கு எடுக்கலாம். செடிகொடிகளை நட்டு பராமரிப்பவர் சில வேளை தானே அதற்கு சொந்தக்காரனாக உடமை யாளனாக இருப்பான். சிலவேளை செடி கொடிகளுக்கும் அவற்றை நட்டுவைக்கிற இடத்திற்கும் உடைமையாளராக இருக்கிற தன்னல்லாத முதலாளிக்காக அவைகளைப் பராமரிக்கும் வேலையைச் செய்வான். இப்படி பிறருக்காக பராமரிக்கும்போது பராமரிப்பவன் உழவனாக இருந்தாலும் அதற்கு அவனால் உடைமை கொண்டாட முடியாது.

இதுபோன்று இறைவனை விளங்கிடக்கூடாது என்பதற்காக தான் பிரப்பின்னாஸூக்கு அடுத்ததாக மலிக்கின்னாஸைச் சொல்லி, மனிதனைப் படைப்பதும், பராமரிப்பதும் பிறர் சொந்தம் கொண்டாடுவதற்கோ உடைமையாக்கிக் கொள்வதற்கோ இல்லை என்பதை நிலைநாட்டுகிறான்.அவன் தானாகவே தான் இதை யெல்லாம் செய்கிறான். 

யார் சொல்லியும் இதைச் செய்யவில்லை. அவனே மனிதர்களுக்குரிய முழு உடைமையாளன் என்பதை நம்ப வேண்டும் என்பதற்காகவும் இந்த மலிக்கின்னாஸ்.

இதை இன்னும் நன்றாக விளங்கிக் கொள்ள, வீடு கட்டும் பணியைச் செய்யும் கொத்தனாரை உதாரணமாக சொல்லலாம். ஒருவர் ஒரு வீட்டைக் கட்டும் பணியைச் செய்கிறார்.அதனால் அந்த வீட்டைக் கட்டுகிற கொத்தனார் தனக்கு சொந்தம் கொண்டாட முடியாது. வீட்டுக்குச் சொந்தக்காரன் இன்னொருவனாக இருப்பான். ஆனால் அல்லாஹ்வின் பராமரித்தல் இத்தகையது அல்ல. யாருடைய கட்டளையுமின்றி தானாகவே மனிதகுலத்தைப் பராமரித்து வருகிறான். யாருக்காகவும் இறைவன் வேலை செய்யவில்லை. தானாகவே செய்கிறான். அதனால்தான

இறைவன் மனிதர்களுக்கு உடைமையாளனாகவும் இருக்கிறான் என்பதை நமக்குச் சொல்லி தருகிறான்.

(இலாஹின்னாஸ்)மனிதர்கள் வணங்குவதற்கு தகுதியான (கடவுள்)வன்.நாம் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக நம்பியிருக்கிற லாஇலாஹ இல்லல்லாஹூ(வணங்குவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்பதில் உள்ள வாசகத்தைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். இலாஹ் என்றால் வணக்கத்திற்கு தகுதியானவன். மனிதர்களின் அனைத்து வணக்கத்திற்கும் உரியவன். சொந்தம் கொண்டாடுகிற தகுதியுள்ளவன் என்று விளங்க வேண்டும்.

ஆக இறைவன் தனக்கு சொந்தமான மூன்று பண்புகளின் மூலம் தன்னைப் புகழ்ந்து பாராட்டிய பிறகு தன்னிடம் பாதுகாப்புத் தேடச் சொல்கிறான். இப்படி இறைவனைப் புகழ்ந்து பாராட்டிவிட்டு பிரார்த்தனை செய்வதை இறைவன் நேசிக்கிறான் என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

(மின் ஷர்ரில் வஸ்வாஸில்கன்னாஸ்) மறைந்திருந்து தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிற தீங்கிலிருந்து அல்லதீ யுவஸ்விஸூ ஃபீ சுதூரின்னாஸ்) மனிதர்களின் உள்ளங்களில் கெட்ட எண்ணங்களை எற்படுத்துகிறவன்.

வஸ்வாஸ் என்பதற்கு இல்லாததை இருப்பதாக காட்டுவது, மாயை, பொய்,  எதார்த்தத்திற்கு மாற்றமானது. அதாவது அறிவில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுதல் தவறானதை சரியாகக் காட்டுதல் ஆகிய கருத்தைச் கொள்ளலாம்.மனிதனின் உள்ளத்திற்கு தவறானதை சரியாகக் காட்டுவதும் சரியானதை தவறாகக் காட்டுவதற்கும் வஸ்வாஸ் என்று சொல்லப்படும்.இப்படி கெடுப்பவர்கள் ஷைத்தான்களில் மட்டும் இருக்க மாட்டார்கள்.மனிதர்களிலும் இருப்பதாகக் குர்ஆன் சொல்கிறது.

(மினல் ஜின்னத்தி வன்னாஸ்)(இத்தகையவர்கள்) ஜின் களிலும் மனிதர்களிலும் உள்ளனர்.எனவே நாம் சரியாக நடக்க வேண்டுமெனில் நமது உள்ளத்தைப் பாதுகாப்பது முக்கியம். அதனால் தான் இறைவன் நமது உள்ளம் சரியாக வேலை செய்யாமல் வஸ்வாஸூக்கு ஆட்பட்டு சரியானதை தவறு என்றும் தவறானதை சரியென்றும் காட்டும்போது வழி தவறி விடக் கூடும் என்பதினால்தான் இறைவன் வஸ்வாஸிலிருந்து பாதுகாப்புத் தேடச் சொல்லுகிறான். முழுமையாக உள்ளத்தைப் பாதுகாக்க படைத்த இறைவனை தவிர வேறு யாராலும் முடியாது.

இதற்கு (வஸ்வாஸூக்கு) உதாரணம் சொல்வதாக இருந்தால் சிலர் உளுச் செய்யும்போது ஒன்றிரண்டு தடவைக்கும் அதிகமாக கைகளைக் கழுவிக் கொண்டே யிருப்பார்கள். காலை தேய்த்துக் கொண்டேயிருப்பார்கள். இதெல்லாம் வஸ்வாஸில் உள்ளது தான். 

அதே போன்று ஒன்று இரண்டு தடவை அழுக்குத் தேய்த்து சோப்போ ஷாம்போ போட்டுக் குளிக்கலாம். இது குற்றமில்லை. ஆனால் சிலர் இல்லாத அழுக்கைத் தேய்த்துக் கொண்டேயிருப்பார்கள். பல தடவை சோப்புப் போட்டுக் குளித்தாலும் அவனது மனது திருப்தியடையாது. இதுவெல்லாம் கூட வஸ்வாஸூ தான்.பேய் பிசாசு என்பதே உலகில் கிடையாது. அது தவறான மூடநம்பிக்கை. ஆனால் இல்லாத பேய் பிசாசுகளை அங்கே பார்த்தேன். இங்கே பார்த்தேன் என்று சொல்வதும் கூட வஸ்வாஸ் தான்.

இப்படி வஸ்வாஸை ஏற்படுத்தக்கூடிய மனிதனிடமிருந்தும் ஷைத்தான்களிடமிருந்தும் பாதுகாப்பத் தேடுவதைத் தான் அல்லாஹ் சொல்லுகிறான்.

ஷைத்தானும் ஜின்னும்: காய்ச்சலில் இருந்து பாதுகாப்புத் தேட வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். காய்ச்சலில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்கு முன் 

காய்ச்சல் என்றால் என்னவென்று தெரிந்து வைத்திருப்பது அவசியமாகி விடும். ஏனெனில் அப்போது தான் அதற்கான மருத்துவத்தைச் சரியாக செய்து முழுமையாக குணமடைய முடியும். அதுபோன்று ஜின்களிடமிருந்தும் மனிதர்களிட மிருந்தும் பாதுகாப்புத் தேட இறைவன் நமக்கு வலியுறுத்து கின்றான். இந்த வசனத்தில் வருகிற ஜின்கள் ஷைத்தான்களா? அல்லது ஜின்களா? எனவே ஜின்கள் யார்? ஷைத்தான்கள் யார்? என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டால் தான் பாதுகாப்புத் தேடுவதற்கு சரியாக இருக்கும்.

அல்லாஹ் படைத்த படைப்புகளில் மனிதர்கள் ஒரு இனம் அதேபோன்று ஜின்களும் அவனது படைப்பில் உள்ளவர்கள் தாம். இவர்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டவர்கள். மனிதர்களின் கண்களுக்குப் புலப்பட மாட்டார்கள். ஆடு மாடுகளைப் போன்ற கால்நடைகளுக்கு பகுத்தறிவை அல்லாஹ் கொடுக்கவில்லை. ஆனால் ஜின்களுக்கு பகுத்தறிவை வழங்கியுள்ளான். மனிதர்களுக்கு இறைவன் சட்டதிட்டங்களைக் கொடுத்திருப்பதைப் போன்று ஜின்களுக்கும் சட்டதிட்டங்கள் உண்டு. அடிப்படை நம்பிக் கைகள் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகள் ஹலால், ஹராம் போன்ற சட்டங்கள் ஜின்களுக்குமுண்டு. 

உள்ளம் என்பது அல்லாஹ் வழங்கியிருக்கும் அற்புதமான அருட்கொடைகளில் ஒன்று. உள்ளம் என்பது ஈமானின் நிலைகளமாக இருக்கிறது. அதைக் கொண்டே மனிதர்களின் தராதரம் நிர்ணயம் ஆகிறது. எவ்விஷயத்தில் உள்ளார்ந்த ஈடுபாடு மனிதனுக்கிருக்கிறதோ அதுவே முழுமையாக அவனிடமிருந்து செயல்வடிவம் பெறுகிறது. அது நன்மையாக இருக்கும் பட்சத்தில் நன்மையாகவும், தீமையான விஷயமாக இருக்கும்பட்சத்தில் தீமையாகவும் வெளிப்படுகிறது.

இந்த உள்ளத்தின் மூலமே படைத்த இறைவனுக்கும் மனிதனுக்குமிடையேயான தொடர்புகள் மிகச் சரியாக கணிக்கப்படுகின்றன. மார்க்க விஷயமானாலும் சரி அதுவல்லாத மற்ற காரியங்களானாலும் சரி மனிதன் எதில் உண்மையாளனாக இருக்கிறான், எதில் வஞ்சகத்தன்மை கொண்டிருக்கிறான் என்பது அவனது உள்ளத்தைக் கொண்டே அமையும். மனிதர்களை வேண்டுமானால் உள்ளத்தை மறைத்து ஏமாற்றிவிட முடியும். ஆனால் அல்லாஹ்விடமோ? ஏமாற்ற முடியாது. அல்லாஹ்வோ அகத்தையும் புறத்தையும் அறிந்தவனாக இருக்கிறான். ஆகவே மனிதன் உள்ளத்தை பாதுகாப்பது அவசியம். அதற்கான வழிமுறையில்ஒன்று தான் சூரத்துன்னாஸ்! 

நன்றி: தீன்குலப் பெண்மணி  