வியாழன், ஜூன் 30
சுவர் ஏறி குதித்து விமானத்தில் ஏற முயன்றவர்!
திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலை இலங்கை செல்லும் ஏர்லங்கா, மிகின்லங்கா விமானங்களும், திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர்-ஏசியா விமானமும் புறப்பட்டு செல்வதற்குத் தயாராக நின்று கொண்டு இருந்தன. இந்த விமானங்களில் செல்லும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்காக சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு வாலிபர் அரக்கப் பரக்க ஓடி வந்து ஏர்-ஏசியா விமானத்தில் ஏற முயன்றார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த வாலிபரை விமான நிலைய ஓடுதள பாதையிலிருந்து தூக்கி அப்புறப்படுத்தினர்.
பிடிபட்ட அந்த வாலிபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் புதுக்கோட்டை மாவட்டம் கரையாம்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் என்று தெரிய வந்தது.
சிறுவயது முதலே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஆனால் விமானத்தில் பயணம் செய்யும் அளவு வசதியில்லாததால் விமான நிலைய சுற்று சுவர் ஏறி குதித்து விமானத்தில் ஏற முயன்றதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் கியூ பிரிவு மற்றும் தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்போது ஒரு வாலிபர் அரக்கப் பரக்க ஓடி வந்து ஏர்-ஏசியா விமானத்தில் ஏற முயன்றார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த வாலிபரை விமான நிலைய ஓடுதள பாதையிலிருந்து தூக்கி அப்புறப்படுத்தினர்.
பிடிபட்ட அந்த வாலிபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் புதுக்கோட்டை மாவட்டம் கரையாம்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் என்று தெரிய வந்தது.
சிறுவயது முதலே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஆனால் விமானத்தில் பயணம் செய்யும் அளவு வசதியில்லாததால் விமான நிலைய சுற்று சுவர் ஏறி குதித்து விமானத்தில் ஏற முயன்றதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் கியூ பிரிவு மற்றும் தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
from: inneram.com
மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை !

வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சவூதி அரசுக்கு தாருல் உலூம் சமர்பித்துள்ள மனுவில் “ இஸ்லாத்தை மறுக்கும் அஹமதியாக்கள் முஸ்லீம்களை போல் ஹஜ்ஜுக்கு வருவதால் அவர்கள் உண்மையான முஸ்லீம்களை குழப்பி வழி கெடுக்கின்றனர் என்றும் அவர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிர்ஸா குலாம் அஹ்மது என்பவரை பின்பற்றுபவரே அஹ்மதியாக்கள் அல்லது காதியானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். முஸ்லீம்களின் மத நம்பிக்கை படி முஹம்மதை இறைவனின் இறுதி தூதராகவும் இருதி காலத்தில் இமாம் மஹதி வருவார் என்றும் நம்புகின்றனர். ஆனால் காதியானிகள் மிர்ஸா குலாமை மஹதி என்றும் முஹம்மதுக்கு பின் மிர்ஸா குலாமையும் நபியாக நம்புவதால் பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்ரிஸ்டர் அருகே உள்ள காதியான் எனும் ஊரில் தலைமையகத்தை வைத்துள்ள அஹமதியாக்களின் ஆன்மிக குரு கிலாபத்துல் மஸிஹ் மிர்ஸா மஸ்ரார் அஹ்மது லண்டனில் வசிக்கிறார். 1979-ல் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் அஹமதியாக்கள் முஸ்லீம்கள் அல்லர் என்று எடுத்த தீர்மானத்தை நினைவூட்டி ஹஜ் உம்ரா வருபவர்கள் அதற்கான விண்ணப்பத்தில் முஹம்மதை கடைசி இறை தூதராக ஏற்று கொள்கிறேன் என்று கையொப்பமிட வேண்டும் என்றும் சவூதி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இஸ்லாத்தை ஏற்ற முதல் முஸ்லீம் வரகா பின் நவ்ஃபல் (ரலி).
(1997 மார்ச் மாத அல்ஜன்னத் பத்திரிக்கையில் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான சகோதரர் எம்.ஐ. சுலைமான் அவர்களினால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு வெளியிடுகிறோம். Rasmin M.I.Sc)
ஹிராக் குகையில் திருமறை வசனங்களை ஓதிக்காட்டிய ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பார்த்துப் பயந்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் தமது துணைவியார் கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிவிட்டு,
தனக்கு ஏதும் நிகழ்ந்து விடுமோ என தான் உறுதியாக அஞ்சுவதாகக் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள் உங்களை அல்லாஹ் ஒரு போதும் இழிவுபடுத்த மாட்டான் ஏனெனில் தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள், (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள், வரியவர்களுக்கு உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள், உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள் என்றார்கள்.
பின்னர் நபியவர்களை வரகாவிடம் அழைத்துச் சென்றார்கள் வரகா அறியாமைக் காலத்திலேயே கிருத்தவ மதத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும், இன்ஜீல் வேதத்தை ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவிற்கு எழுதுகிறவராகவும், கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள் என் தந்தையின் சகோதரர் மகனே! உம் சகோதரர் மகன் கூறுவதைக் கேளுங்கள்! என்றார்கள். அப்போது வரகா நபியவர்களிடம் என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்? எனக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள்.
அதைக் கேட்டதும் வரகா நபி (ஸல்) அவர்களிடம், வந்த இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உமது சமூகத்தினர்கள் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே! என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
அப்போது நபியவர்கள் மக்கள் என்னை வெளியேற்றவரா போகிறார்கள்? என்று கேட்டார்கள் அதற்கவர் ஆம் நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும், (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப் படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்கு பலமான உதவி செய்வேன். என்று கூறினார். அதன் பின் வரகா நீண்ட நாள் வாழாமல் மரணித்து விட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (சிறிது காலம்) நின்று விட்டது.
(புகாரி 3,6982 முஸ்லிம்)
தாம் இறைத் தூதர் என்று வரகா அவர்கள் உறுதிப் படுத்தியதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு இறை செய்தி (சிறிது காலம்) தடைப்பட்டது என்று மேற்கூறிய செய்தி குறிப்பிடுகிறது.
எத்தனை நாட்கள் வஹீ வராமல் இருந்தது என்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள். மூன்று வருடங்கள் என்று சிலரும், ஆறு மாதங்கள் என்று சிலரும்,சில நாட்கள் என்று இன்னும் சிலரும் குறிப்பிடுகின்றனர். இவர்கள் குறிப்பிடும் இந்தக் காலக் கணக்கிற்கு எந்தச் சான்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இல்லை.
வரகா பின் நவ்ஃபல் இஸ்லாத்தை ஏற்றாரா?
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் என்பதை உறுதிப் படுத்திய வராக அவர்கள் முஸ்லிமா? இல்லையா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர் தொடர்பாக வந்துள்ள நபி மொழிகளை காண்போம்.
1. கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வரகா இப்னு நவ்ஃபல் அவர்களைப் பற்றிக் கேட்ட பொது "அவர் வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டவராக கண்டேன். அவர் நரகவாதியாக இருந்திருந்தால் அவர் மீது வெள்ளை ஆடை இருந்திருக்காது" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மத்
2. வரகாவை பற்றி கதீஜா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் கேட்டார்கள். "உங்களை அவர் உண்மைப் படுத்தினார் ஆனால் (இம்மார்கத்தை நீங்கள்) வெளிப்படுத்துவதற்கு முன் இறந்து விட்டாரே!" அதற்கு "கணவில் எனக்கு அவர் காட்டப்பட்டார். அவர் மீது வெள்ளை நிற ஆடை இருந்தது. அவர் நரகவாதியாக இருந்தால் அவர் மீது வேறு ஆடை இருந்திருக்கும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதி
3. வரகா பின் நவ்ஃபல் அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது "அவர் மீது வெள்ளை நிற ஆடை இருக்கக் கண்டேன். அவரை சுவர்க்கத்தில் கண்டேன். அவர் மீது பட்டாடை இருந்தது" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : அபு யஃலா
4. வரகா அவர்கள் இறந்த போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (வரகாவிற்கு) ஜன்னத்தில் (சுவர்கத்தில்) ஒரு கோட்டையைக் கண்டேன். அவர் மீது பட்டாடை இருந்தது. (ஏனெனில்) அவர் நான் கொண்டு வந்ததை நம்பினார். உண்மைப்படுத்தினார்.
அறிவிப்பவர் : அம்ர் பின் ஸர்ஹபீல்
நூற்கள் பைஹகீ ஆபு நுஐம் (தலாயிலுன் நுப்வா)
5. "வரகாவை ஏசாதீர்கள் அவருக்காக ஒன்றோ, இரண்டோ சுவர்கத்தைப் பார்த்தேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி)
நூற்கள் : பஸ்ஸார் இப்னு அஸாகீர்
மேற்கண்ட ஹதீஸ்களில் முதல் நான்கு செய்திகள் பலவீனமானவையாகும். ஐந்தாவது ஹதீஸ் இடம் பெரும் நூற்களில் இப்னு அஸாகீர் நூலின் அறிவிப்பாளர் வரிசை பலமானதாகும் என்று இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (அல்பிதாயா)
இப்னு அஸாகீரில் இடம் பெரும் ஹதீஸின் அடிப்படையில் வரகா அவர்களை முஸ்லீம், சுவர்க்கவாதி என்று முடிவு செய்யலாம். மேலும் புகாரியின் (3, 6982) அறிவிப்பில்,
"உமது சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!" என்று அங்களாய்த்துக் கொண்டார்.
"(நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்க பலமான உதவி செய்வேன்." என்று கூறினார்.
இந்த வாசகங்கள் வரகா அவர்கள் நபி (ஸல்) அவரக்ள் கொண்டு வந்த இறைச் செய்தியின் மீது ஆழமாக நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.
ஈமான் என்பது இறைச் செய்தியையும், இறைத் தூதரையும் மனதால் நம்புவதுதான். இதை வரகா அவர்கள் ஏற்றுள்ளதினால் அவரை முஸ்லீம் என்று சொல்வதே சரியானதாகும்.
இதன் அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்ற முதல் நபர் என்ற பெருமையை வரகா (ரலி) அவர்கள் பெருகிறார்கள்.
தப்ரீ, இப்னு கானிஃ, இப்னு ஸகன் போன்ற அறிஞர்கள் வரகா அவர்களை நபித் தோழர்கள் என்றே கூறுகிறார்கள். (அல் இஸாபா)
Labels:
ஆய்வுகள்
புதன், ஜூன் 29
மனைவியின் ஆலோசனையும் மதிக்கத் தக்கதே !
RASMIN M.I.Sc
நமது வாழ்க்கையில் நாம் நாளும் பல தவிர்க்க முடியாத பிரச்சினைகளை நமது வாழ்வில் சத்திக்க நேரிடுகிறது.
அந்தப் பிரச்சினைகளின் போது அவற்றை தீர்த்துக் கொள்ள முடியாமல்,அல்லது தெரியாமல் நாம் கஷ்டப் படும் போது தீர்வுகளை நமக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கிறோம். ஆனால் நம்பில் பலர் மனைவியிடம் தவிர மற்ற அனைவரிடமும் தங்கள் சிக்கள்களுக்கான தீர்வுகளை கேட்பார்கள்.
பெண்களிடம் ஆலோசனைகளை கேட்க்கக் கூடாது, கேட்பது அபசகுனம்,அதனால் நடக்க இருக்கும் காரியங்கள் நடக்காமல் போய்விடும் போன்ற எண்ணங்கள் ஆண்கள் மனங்களில் குடி கொண்டுள்ளது.
இது போன்றவர்கள் நபியவர்களின் வாழ்வில் இருந்து நிறையவே படிப்பினை பெற வேண்டியுள்ளது. ஏன் என்றால் நபியவர்களே தங்கள் மணைவியரிடத்தில் தனக்குத் தேவையான ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது.
அப்படியிருக்க நாம் ஏன் பெண்களிடம் நமக்கு தேவையான சிறந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளக் கூடாது?
நபியவர்கள் உம்ராச் செய்வதற்காக தங்கள் சகாபாக்களை அழைத்துக் கொண்டு வந்த நேரம் எதிரிகள் அதற்கு நபியவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.
அந்நேரம் நபியவர்கள் எதிரிகளுடன் ஹுதைபிய்யா என்ற ஒப்பந்தத்தை போடுகிறார்கள். அப்போது நடந்த ஒரு நிகழ்வைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் உம்ராச் செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.
இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "எழுந்திருங்கள்! அறுத்துப் பலியிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!'' என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள்.
அப்போது உம்மு ஸலமா (ரலி) யோசனை வழங்குகின்றார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து. அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்'' என்று உம்மு ஸலமா (ரலி) கூறினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து. ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவைர நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி 2732
இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் புத்திக் கூர்மை மிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.
இப்படிப்பட்ட பாராட்டத்தக்க ஒரு யோசனை சொன்னவர் ஒரு பெண்தான் ஆணல்ல.
மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா (ரலி)யின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.
நபியவர்களிடம் விருந்தாளியாக ஒருவர் வந்த நேரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பாருங்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காக) தமது மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், "எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தனர். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரை சேர்த்துக் கொள்பவர் யார்?'' அல்லது "இவருக்கு விருந்தளிப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "நான் (விருந்தளிக்கின்றேன்)'' என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு தமது மனைவியிடம் சென்றார்.
"அல்லாஹ்வின் தூதருடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று (தம் மனைவியிடம்) கூறினார். அதற்கு அவருடைய மனைவி, "நம்மிடம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், "உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று கூறினார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக வைத்து,விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார்.
பிறகு (இருக்கும் உணவை விருந்தாளியை உண்ணச் செய்து விட்டு) அவரும் அவரது மனைவியும் உண்பது போல் அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான்'' அல்லது "வியப்படைந்தான்'' என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், "தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்'' எனும் (59:9)வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3798
ஜாடிக்கு ஏற்ற மூடி என்று சொல்வதைப் போல் நபியின் மனைவியரும்,நபித் தோழர்களின் மனைவியரும் குடும்ப வாழ்வில் சிறப்பான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டதையும், தேவையான சந்தர்ப்பங்களில் கணவனுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியதையும், கணவன் சொல் பேச்சைக் கேட்டு நடந்ததையும் மேற்கண்ட செய்திகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.
இது போன்று எல்லாப் பிரச்சனைகளுக்கும் மனைவியரின் அணுகுமுறைகள் மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அமைந்திருக்குமானால் இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றி கிடைப்பதற்கு இது காரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Labels:
பெண்கள்
செவ்வாய், ஜூன் 28
மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் – சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்!
கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.
உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இன்று (28/06/2011) சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)