-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வியாழன், ஜூன் 16

பாங்கின் சிறப்புகள் !

கண்ணியத்துக்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ் தன்திருமறையில்..
தொழுகைக்கு நீங்கள் அழைக்கும் போது அதை 
அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர் அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்கு காரணம். (அல்குர்ஆன்: 5:58) 
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல்வரிசையில் நின்று(தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்.  (அபூஹூரைரா(ரலி) புகாரி 615,)

தொழுகையின் அழைப்பொலியாக விளங்கும் பாங்கு இஸ்லாமியச் சின்னங்களில் ஒன்றாகும். ஓரிறைக் கொள்கை, கோட்பாட்டை விளக்கும் வாசகங்களை தன்னகத்தே கொண்ட பாங்கு அன்றாடம் முழங்கப்படும் ஏகத்துவப் பிரகடனமாகும்..

அல்லாஹ்வின் நினைவை நிலைநாட்டுவதற்காக அடியார்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைத்திருக்கும் வளமான நினைவூட்டல். 
நிலையான நன்மைகளையும் வெற்றியையும் பெற்றுக் கொள்ள நித்தம் நித்தம் மனித இனத்துக்கு செய்யப்படும் இறைத்தூது தான் பாங்கு.

பாங்கு ஆரம்பமான வரலாறு

நான் காலையில் எழுந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். நான் கண்ட கனவை அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இக்கனவு உண்மையான கனவாகும். எனவே நீர் பிலாலுடன் எழுந்து நின்று (கனவில்) உமக்குக் கூறப்பட்ட வார்த்தைகளை அவருக்குச் சொல்வீராக! அவர் அதன் மூலம் அழைக்கட்டும். அவர் உம்மை விட உரத்த சப்தம் உடையவராக இருக்கிறார் என்று கூறினார்கள்.

முஸ்லிம்கள் மதினாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் தொழுகைகளுக்கென நேரங்களை நிர்ணயித்துக் கொண்டு ஒன்று கூடுபவர்களாக இருந்தனர். தொழுகைகளுக்கென எவரும் அழைப்புக் கொடுப்பதில்லை. இது விஷயமாக ஒரு நாள் அவர்கள் பேசிக் கொண்டனர். சிலர், கிறித்தவர்கள் போல் மணியோசை எழுப்பலாம் என்றனர். மற்றும் சிலர் யூதர்களைப் போல் குழலூதலாமே என்றனர். தொழுகைக்காக அழைக்க ஒருவரை நீங்கள் நியமிக்கலாமே என்று உமர்(ரலி) கூறினார். (இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த) நபி(ஸல்) அவர்கள் பிலாலே நீர் எழுந்து தொழுகைக்கு அழைப்புக் கொடுப்பீராக! இப்னு உமர் (ரலி) திர்மிதி 175 புகாரி
தொழுகைக்காக பிலால் (ரலி) யின் அழைப்போசையைச் செவியுற்ற உமர் (ரலி) தமது கீழாடை (தரையில்) இழுபட நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பயவன் மேல் ஆணையாக! பிலால் கூறியதை போலவே நானும் கனவில் கண்டேன் என்று கூறினார். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இது (அப்துல்லாஹ் பின் ஸைதுடைய கனவை) உறுதிப்படுத்துகிறது.எனநபி(ஸல்)கூறினார்கள்(அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) (திர்மிதி 174 புகாரி)

 (தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்தபோது) சிலர் நெருப்பை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம்என்றனர். அவையெல்லாம் யூத கிருஸ்தவ கலாச்சாரம் என்று கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால் (ரலி) ஏவப்பட்டார்கள். (அனஸ்(ரலி) புகாரி 603)

தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப் படும் போது பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஒடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, இதை நினைத்துப் ,பார் அதை நினைத்துப்பார் என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான். (அபூஹூரைரா(ரலி) புகாரி 608)

தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் ரவ்ஹா எனும் இடம் வரை அவன் (வெருண்டோடி) சென்று விடுவான். (ஜாபிர்(ரலி) முஸ்லிம் 632)
ரவ்ஹா எனும் இடம் மதினாவிலிருந்து முப்பத்தாறு மைல் தொலைவிலுள்ள ஓர் இடமாகும் (அபுசுப்யான் இதல்ஹா பின் நாஃபிஉ)

(ஒரு முறை) நான் முஆவியா பின் அபுசுப்யான்(ரலி) அவர்களோடு இருந்தேன். அப்போது அவர்களை தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், மறுமை நாளில் மக்களிடையே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள். என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள் (முஆவியா (ரலி) முஸ்லிம்: 631)

அபூ ஸயித்அல் குத்ரி (ரலி) என்னிடத்தில் நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்கு செல்வதிலும் ஆசைப்படுவதை நான் காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால், அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும் போது குரல் உயர்த்திச் சொல்வீராக!காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தை கேட்கின்ற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும், வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள். என நபி(ஸல்) அவர்கள் கூறநான் கேட்டிருக்கின்றேன் அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான்; (முஸ்லிம் 609)

நபி(ஸல்) அவர்கள் என்னை உட்காரச் செய்து பாங்குடைய வார்த்தைகளை ஒவ்வொன்றாக எனக்குச் சொல்லி தந்தார்கள். (அபூமஹ்தூரா (ரலி) திர்மிதி 176)
நபி (ஸல்) அவர்கள் எனக்கு பாங்கில் பத்தொன்பது வார்த்தைகளையும் இகாமத்தில் பதினேழு வார்த்தை களையும் கற்றுத் தந்தார்கள். (அபுமஹ்தூரா(ரலி) புகாரி , அஹ்மத், அபுதாவுத், நஸயி இப்னுமாஜா, தாரமி)

பாங்கு கூறும்முறையும் அதற்கு பதிலளிப்பதும்

நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) முறையைக் கற்றுத் தந்தார்கள்.

அல்லாஹூ அக்பர். அல்லாஹூ அக்பர். (அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மிகப் பெரியவன்). அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லல்லாஹ். அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லல்லாஹ். (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை என்று நான் உறுதிமொழி கூறுகிறேன். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழி கூறுகிறேன்). அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.(முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின என்று நான் உறுதிமொழி கூறுகிறேன். முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று நான் உறுதிமொழி கூறுகிறேன். பின்னர் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இரு முறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இரு முறையும் கூறினார்கள். (அபூமஹ்தூரா (ரலி) முஸ்லிம்: 623)

பாங்கு சொல்லப்படுவதை கேட்டால்

பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் கேட்டால் முஅத்தின் சொல்வதுபோல் நீங்களும் சொல்லுங்கள். (அபூ ஸயித்; அல் குத்ரி (ரலி) புகாரி 611)

தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் என்று சொல்லுங்கள்.பின்பு அவர் அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாயிலா இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள்.பின்பு அவர் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹமமதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால் நீங்கள்,  லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியில்லாமல் விலகிச் செல்லவோ ஆற்றல் புரியவோ முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள்; லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர்அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் என்று சொன்னால்  நீங்களும் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் என்று சொல்லுங்கள்.பின்பு அவர் லா லாஇஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று உளப்பூர்வமாக சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்.(உமர் பின் அல் கத்தாப் (ரலி) புகாரி: 629)

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் கூறுங்கள். ஏனெனில் என் மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால்; அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலா தேடுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்தில் உள்ள உயர் பதவியாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாக இருக்க விரும்புகின்றேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை கேட்பவருக்கு எனது பரிந்துரை அவசியத் கிடைக்கும் (அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) (புகாரி 628)

பாங்குக்குப்பின் செய்ய வேண்டியவை

பாங்கைக் கேட்டதும் யார் அல்லாஹூம்ம ரப்ப ஹாதிஹி தஃவதித் தாம்மத்தி வஸ்ஸலாத்தில் காயிமத்தி ஆத்தி முஹம்மதனில் வஸீலத்த வல்பழீலத்த வப்அஸூஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹூ (இறைவா! முழுமையான இந்த அழைப்புக்கு உரியவனே! நிலையான தொழுகைக்கும் உரியவனே! முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வஸீலாவையும் மதிப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு அவர்களை புகழ்மிக்க அந்தஸ்தில் எழுப்புவாயாக! என்று எவர்கூறுகின்றாரோ அவருக்கு மறுமை நாளில் (என்) பரிந்துரை உறுதி என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) திர்மிதி 195, புகாரி)

பாங்கைக் கேட்டதும் அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீகலஹூ வஅன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ. ரழீத்து பில்லாஹி ரப்பன் வபி முஹம்மதின் ரசூலா வபில் இஸ்லாமி தீனா (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரு மில்லை. அவன் ஏகன். அவனுக்கு நிகரில்லை. 

முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நான் நம்புகிறேன். அல்லாஹ்வை இரட்சகனாகவும் முஹம்மதை தூதராகவும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும் மனப்பூர்வமாக நான் ஏற்றுக் கொண்டேன்) என்று யார் கூறுகிறாரோ அவரது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 (ஸஅது பின் அபீ வக்காஸ்(ரலி) திர்மிதி 194)

பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையே பிரார்த்தனைகள் மறுக்கப்படுவதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (அனஸ்(ரலி) திர்மிதி)

பிரயாணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடத்தில் நீங்கள் இருவரும் பிரயாணம் புறப்பட்டுச் சென்றால் தொழுகை;காக பாங்கு சொல்லிப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மாலிக் பின் ஹூவைரிஸ் (புகாரி 630)

பாங்கை கொண்டு பாதுகாவல்

நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸூபுஹ் நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஸூபுஹ் நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் நபி(ஸல்)அவர்களின் வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நாங்கள் கைபரை  நோக்கிப் புறப்பட்டோம்.இரவு நேரத்தில் அந்த இடத்தை சென்றடைந்தோம். ஸூபுஹ் நேரம் வந்ததும் பாங்கு சப்தம் கேட்காததால் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறினார்கள். நான் அபதல்ஹாவுக்கு பின்னால் அவரது வாகனத்தில் ஏறிக் கொண்டேன். எனது பாதம் நபி(ஸல்) அவர்களது பாதத்தில் படும். அப்போது கைபர் வாசிகள் தங்ளது மண் வெட்டிகளையும், தானியம் அளக்கும் அளவைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், அல்லாஹ்வின் மீதானையாக! அதோ முஹம்மத். அவரது படை என்றனர். நபி(ஸல்) அவர்கள் அம்மக்களைக் கண்டதும் அல்லாஹூ அக்பர்! அல்லாஹூஅக்பர்) கைபர் வீழ்ந்தது. நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால் அவர்களது காலைப் பொழுது கெட்டதாயிருக்கும். (அனஸ்(ரலி) புகாரி 610)

யார் பாங்கு சொல்வது என்ற விஷயத்தில் சிலர் தர்க்கித்துக் கொண்டனர். அவர்களிடையில் ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) சீட்டுக் குலுக்கிப் போட்டர்கள். (புகாரி)

பாங்கு சொல்வதற்கு கூலி எதுவும் வாங்காத முஅத்தினை ஏற்படுத்திக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியது தான் என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கடைசியாக வலியுறுத்தியதாகும். (உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) புகாரி 193)

இஸ்லாமிய சமுதாயம் பாங்கு சொல்வதற்கு கூலி கேட்காத –வாங்காத முஅத்தின்கள் உருவாகும் நிலையை அந்தஸ்தை ஏற்படுத்த வேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இஸ்லாத்தில் பாங்கிற்கு இருக்கும் கண்ணியத்தை ,மகத்துவத்தை முஸ்லிம் சமுதாயம் உணராமல் அதைச் சொல்வதற்கும் முயலாமல், பாங்கை கேட்டால் அதற்கு பதில்கூறும் விபரமும் அறியாமல் , அதற்கு பின் கேட்கும் பிராத்தனையின் நன்மைகளையும் புரிந்து கொள்ளாமல் ஏதோ சம்பிரதாயங்கள் உலகில் நடந்து கொண்டிருக்கின்றன அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற மனப்போக்கில் நம்மில் பலர் வாழ்ந்து வருகின்றனர் இந்த அலட்சியப்போக்கை துடைத்தெறிந்துவிட்டு ஏகத்துவ அழைப்பாக இருக்கும் பாங்கின் கண்ணியத்தை நாம் காப்போமாக