-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வியாழன், ஜூன் 30

சுவர் ஏறி குதித்து விமானத்தில் ஏற முயன்றவர்!

விமானநிலையத்தின் சுற்றுச் சுவர்மீது ஏறிக் குதித்து, புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏற முயன்ற வாலிபவரை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலை இலங்கை செல்லும் ஏர்லங்கா, மிகின்லங்கா விமானங்களும், திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர்-ஏசியா விமானமும் புறப்பட்டு செல்வதற்குத் தயாராக நின்று கொண்டு இருந்தன. இந்த விமானங்களில் செல்லும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்காக சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு வாலிபர் அரக்கப் பரக்க ஓடி வந்து ஏர்-ஏசியா விமானத்தில் ஏற முயன்றார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த வாலிபரை விமான நிலைய ஓடுதள பாதையிலிருந்து தூக்கி அப்புறப்படுத்தினர்.

பிடிபட்ட அந்த வாலிபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் புதுக்கோட்டை மாவட்டம் கரையாம்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் என்று தெரிய வந்தது.

சிறுவயது முதலே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஆனால் விமானத்தில் பயணம் செய்யும் அளவு வசதியில்லாததால் விமான நிலைய சுற்று சுவர் ஏறி குதித்து விமானத்தில் ஏற முயன்றதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் கியூ பிரிவு மற்றும் தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
from: inneram.com