-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வியாழன், ஜூன் 9

தவ்ஹீத் நிகழ்ச்சிக்கு தடை விதித்த காவல்துறை மற்றும் ஒன்றிய அதிமுக செயலாளர் ஐ கண்டித்து ஆத்தூரில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆத்தூர் கிளை ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மருத்துவ உதவிகள், அவசர உயிர்காக்கும் இரத்ததானம், கல்வி உதவித்தொகை, மற்றும் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் கிளை சார்பாக நடைபெற்று வருகிறது.
ஆத்தூர் பள்ளிவாசல் தலைவரும், ஆழ்வை ஒன்றிய அதிமுக செயலாளர் சேக்தாவூத் என்பவர் பள்ளிவாசல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து ஏகத்துவவாதிகளுக்கு பல இடையுறுகளை ஏற்படுத்தினார்.
பள்ளிவாசலுக்குள் வரக்கூடாது என்று போர்டு வைத்தது, தனியாக ஜூம்ஆ நடத்துவதை தடைசெய்ய போலீசில் புகார் அளித்தது,பெண்கள் பயான் நடத்தவிடாமல் தடைசெய்தது, மாணவரணி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த விடாமல் தடைசெய்தது,நான் தலைவராக இருக்கும் வரை தவ்ஹீத் ஜமாஅத்தின்; எந்த செயல்பாடுகளும் ஊரில் இருக்கக்கூடாது என ஏகத்துவவாதிகளை அடக்கி ஒடுக்குவதில் அபூஜஹ்லை விஞ்சி நின்றார்.
தலைவராக இருப்பதற்கு கடுகளவு கூட தகுதியில்லாதவர் என்பதை அவருடைய கடந்த கால நிகழ்கால வாழ்வை நன்கு அறிந்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
ஆத்தூர் கிளை சார்பாக 5.6.2011 அன்று இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு நோட்டீஸ் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பட்டது.
இந்நிகழ்ச்சியை நடக்க விடாமல் தடுப்பதற்காக ஆத்தூர் பள்ளிவாசல் தலைவரும், ஆழ்வை ஒன்றிய அதிமுக செயலாளர் சேக்தாவூத் என்பவர் காவல் துறை உயர் அதிகாரிகளை தன்னுடைய அரசியல் பலத்தினால் பணிய வைத்து இந்நிகழ்ச்சி நடைபெறுவதை தடைசெய்து விட்டார்.
இந்நிகழ்ச்சி தடைசெய்வதற்கு முலகாரணமாக விளங்கிய ஆழ்வை ஒன்றிய அதிமுக செயலாளர் சேக்தாவூத்தை கண்டித்தும், அவருக்கு துணை போகும் காவல்துறையை கண்டித்தும் கடந்த 5.6.2011 அன்று ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.  சேக்தாவூத் பஞ்சாயத்து போர்டு தலைவராக இருக்கும் போது இஸ்லாத்திற்கு புறம்பாக செய்த காரியங்களை பட்டியலிட்டார்.
மாவட்ட தலைவர் அப்பாஸ் மாவட்ட செயலாளர் அக்தர் அய்யூப் பொருளாளர் இப்ராஹீம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிளையைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
அநியாயத்திற்கு துணை நிற்கும் ஆத்தூர் காவல்துறையை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
700க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டார்கள்.
from:tntj.net