-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளி, மே 20

மமகட்சியின் மண்டைக் கனம்

மமகட்சியின் மண்டைக் கனம்

இரண்டு நாடாளுமன்றத் தொகுதி கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக திமுக கூட்டணியை விட்டு விலகி அதிமுகவில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை பெற்ற போதே ம.ம.கட்சி முழுத்தோல்வி அடைந்துவிட்டது மூன்று சீட்டு கலாச்சாரத்தை மாற்றுவோம் என்று ஜம்பம் அடித்து கட்சியை ஆரம்பித்து அதே மூணு சீட்டுக்கு சரணாகதி அடைந்த போதே ம.ம.க தோற்றுவிட்டது மூன்றிலும் ம.ம.க வெற்றி பெற்றாலும் இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை.

ஜெயலலிதா ஆதரவு அலை சுனாமி போல் வீசிய நேரத்திலும் மூன்றில் போட்டியிட்டு ஒன்றில் தோல்வி அடைந்துள்ளனர் என்பதில் இருந்தே இவர்களின் செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.

ம.ம.க தோற்ற திருவல்லிக்கேணி தொகுதி அதிமுக கோட்டையாகும் ஏற்கனவே திமுகவின் மூளையாக செயல்பட்ட நாகநாதனை அதிமுகவின் பதர் சயித் தோற்கடித்தார். அதிமுகவின் கோட்டையில் மமக அல்லாத வேறு யாராவது நிறுத்தப்பட்டு இருந்தால் அந்த அலையில் கட்டாயம் கரை சேர்ந்திருப்பார்கள்.

இதற்கு முன்னர் முஸ்லீம் லீக், தேசிய லீக் ஆகிய கட்சிகள் மூன்று இடங்களிலும் அதற்கு மேலேயும் பெற்று வெற்றியும் பெற்று உள்ளன. முஸ்லீம் இயக்கத்துக்கு இதுவரை சட்டமன்ற உறுப்பினர்களே இல்லை என்பது போலவும் முதல் முறையாக இப்போதுதான் முஸ்லீம் இயக்கம் இரண்டு இடத்தில் வென்றது போலவும் ஆட்டம் போட்டால் இவர்களுக்கு அளவுக்கு மீறிய மனநோய் உள்ளது என்றுதான் பொருள்.

சமுதாயத்தின் மானத்தைக் காக்கப் புறப்பட்டு மூணே சீட்டுக்கு அடிபணியும் நிலைக்கு கீழே இறங்கியதற்காக இவர்கள் வெட்கப்பட வேண்டும்.

இந்த தேர்தலில் திமுக எதிர்ப்பு அலை அல்லது அதிமுக ஆதரவு அலை அடித்துள்ளது. பெரும் தலைகள் எல்லாம் உருண்டுள்ளன அதே சமயம் அதிமுக அணியில் அற்பமானவர்கள் கூட அமோக வெற்றி பெற்றுள்ளார்கள். ஒரு கழுதையை ஆம்பூரிலும் இராமநாதபுரத்திலும் நிறுத்தினாலும் வெற்றி பெறும் என்ற அளவுக்கு அதிமுக அலை வீசியதால் இரண்டு பேர் வெற்றி பெற்றனர். இதை உணராமல் ஏதோ தங்களுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பது போல் படம் காட்டுவது தம்மை தாமே ஏமாற்றிக்கொள்வதாகும்.

ஜவாஹிருல்லாஹ் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இதற்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் மமகட்சியில் சலிமுல்லாகான் போட்டியிட்டார். அந்த தேர்தலில் சலிமுல்லாகானுக்கு ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள் கிடைத்த ஓட்டுகள் 6712 மட்டுமே. இது தான் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் மமகவுக்கு உள்ள ஓட்டுக்கள். இதுவும் கூட கார்த்திக் கிருஷ்ணசாமி பாப்புலர் பிரண்ட் உள்ளிட்ட 19 அமைப்புகளின் ஆதரவுடன் கிடைத்த ஓட்டுகளாகும்.

மமக பல்வேறு கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து நான்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது.
மயிலாடுதுறையில்
மமகட்சி ஜவாஹிருல்லாஹ் வாங்கிய ஓட்டு 19816
இதை 6 சட்டமன்றத் தொகுதிக்கும் வகுத்துப் பார்த்தால்
ஒரு சட்டசபைக்கு 3300 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

தென் சென்னையில்
மமகட்சி ஹைதர் அலி வாங்கிய ஓட்டு 13160

ஒரு சட்டசபைக்கு 2200 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

இராமநாதபுரத்தில்
மமகட்சி சலிமுல்லாஹ் கான் வாங்கிய ஓட்டு 21430

ஒரு சட்டசபைக்கு 3500 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

பொள்ளாச்சியில்
மமகட்சி உமர் வாங்கிய ஓட்டு 13933

அதாவது இவர்களுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக இவர்கள் நம்பிக் களத்தில் இறங்கிய தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதில் அதிகபட்சம் 3500 வாக்குகள்தான் கிடைத்துள்ளது இதில் 19 கட்சிகளின் ஆதரவு வேறு.

இவர்களைப் போல அரசியல் ஆசையில் முதன் முதலாக SDPI கட்சியினர் தமிழகத்தில் 7 சட்டசபைத் தொகுதிகளைத் தேர்வு செய்து போட்டியிட்டனர்.

SDPI வாங்கிய ஓட்டுக்கள் விபரம் வருமாறு.

  • சென்னை துறைமுகம் 2237
  • திருப்பூர் தெற்கு 2645
  • பாளையங்கோட்டை 7032
  • கடையநல்லுார் 6649
  • இராமநாதபுரம் 2731
  • பூம்புகார் 2984
  • தொண்டாமுத்துார் 4519

அதாவது SDPI மமகட்சி சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாங்கிய ஓட்டுகளை விட இன்னொரு மடங்கு அல்லது அதைவிடவும் அதிகமான வாக்குகளை வாங்கியுள்ளனர்.

SDPI க்கு இருக்கும் செல்வாக்கில் பாதி அளவுக்கு கூட இல்லாத மமக அடித்துச் செல்லப்பட்ட அலை மூலம் கரையேறிவிட்டு மாபெரும் நீச்சல் வீரர் போல் தம்பட்டம் அடிப்பதில் இருந்து இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பது உறுதியாகிறது.

எங்கள் ஆட்சி வந்துவிட்டது இனி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு தக்க பாடம் கற்பிப்போம் என்று கள்ள மிரட்டல் வேறு விடுக்கின்றனர்.

ஏற்கனவே திமுகவுடன் கூட்டு சேர்ந்து இவர்கள் வாரியத்தைப் பெற்றாலும் இன்ன பிற வசதிகளைப் பெற்றாலும் நமக்கு எதிராக எண்ணற்ற அயோக்கியத்தனங்களை ஆளும் கட்சி ஆதரவுடன் அரங்கேற்றிய போதும் இந்த ஜமாஅத்தை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போலீஸ் படையுடன் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலைக் கைப்பற்ற வந்து பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட்டம் எடுத்தது ஒரு உதாரணம்.

அதிமுக ஆட்சியின் துணையுடன் தவ்ஹீத் ஜமாஅத்தை மிரட்டலாம் என்று நினைத்தால் அது ஒருக்காலும் நடக்காது. வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு ஆட்டம் போடலாம் என்று நினைத்து மோதி பார்த்தால் அதே வழியில் அவர்களை எதிர் கொள்ளும் துணிவும் பலமும் இந்த ஜமாஅத்துக்கு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி-உணர்வு