-->
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இந்த இணையதளம் vasutntj.blogspot.com என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வியாழன், மே 19

ஜகாத் பணத்தை இஸ்லாமிய மாநாட்டுக்கு வழங்கலாமா?

கேள்வி :ஜகாத்தாகக் கொடுக்க வேண்டிய பணத்தை பள்ளிவாசல் பராமரிப்பு, இஸ்லாமிய மாநாடு, சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு வழங்கலாமா?

பதில் : அல்லாஹ் கடமையக்கிய ஜகாத்தை, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தான் செலவழிக்க வேண்டும் என்று திருமறை குறிப்பிடுகின்றது.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் வின் கடமை. அல்லாஹ்அறிந்தவன்; ஞானமிக்கவன். அல்குர்ஆன் 9:60

(ஜகாத் எனும்) தர்மங்கள் பரம ஏழைகள், ஏழைகள், ஜகாத் வசூல் செய்பவர்கள், இஸ்லாத்தின் பால் அவர்களின் (புதிதாக இஸ்லாத்தை தழுவ உள்ள) உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு, அடிமைகளை விடுதலை செய்வதற்கு, கடன்பட்டிருப்போருக்கு, அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவையாகும். (இது) அல்லாஹ் விதித்தகடமையாகும். அல்லாஹ் நன்கு அறிபவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.  அல்குர்ஆன் 9:60

1. யாசிப்பவர்கள், 
2. ஏழைகள், 
3. ஜகாத்தை வசூல் செய்பவர்கள், 
4.உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய இஸ்லாத்தை நேசிக்கும் மாற்று மதத்தவர்கள் 
5. அடிமைகள் (விடுதலை செய்ய), 
6. கடன்பட்டிருப்பவர்கள், 
7. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்கள், 
8. வழிப்போக்கர்கள் 
இந்த எட்டு சாரார்களுக்கு மட்டுமே ஜகாத் பணம் செலவிடப்பட வேண்டும். இந்த எட்டு வகையில் சாராத எவர்களுக்கும் ஜகாத் பணம் செலவிடக்கூடாது.

பள்ளிவாசல், மதரஸா, மாநாட்டுச் செலவுகள் இவற்றிற்கெல்லாம் ஜகாத் பணத்தைக் கண்டிப்பாகச் செலவழிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் இறைக் கட்டளையை மறுத்தவராகக் கருதப்படுவார். இதுபோன்ற நற்காரியங்களுக்கு சாதாரணமாக (ஜகாத் அல்லாமல்) இதர தர்மங்களை வழங்கலாம்! அதற்குரிய நன்மை கிட்டும்!