கேள்வி - எனது தந்தை முதரில் என் பெரிய தாயாரைத் திருமணம் செய்து, அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்ற நிலையில் என் தாயாரை (முதல் மனைவியின் உடன்பிறந்த சகோதரியை) திருமணம் செய்துள்ளார். இத்திருமணம் ஹராம் என்று தெரிந்தும் நடந்துள்ளது. இதுகுறித்து பலமுறை எடுத்துச் சொல்ரியும், முதல் மனைவியை (பெரிய தாயாரை) தலாக் விட்டு விட்டதாகப் பொய் கூறி, இரண்டு பேருடனும் குடும்பம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் நாங்கள் எங்கள் பெற்றோருடன் சேர்ந்து வாழலாமா? தற்பொழுது அவர்கள் திருந்தி வாழ வழியுண்டா?
பதில் - இரண்டு சகோதரிகளை ஒரு சேர மணம் முடிப்பது திருக்குர்ஆனின் 4:23 வசனத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு திருமணம் முடித்து விட்டவர்கள் திருந்தி வாழ்வதற்கான ஒரே வழி இரண்டு பேரில் ஒருவரைத் தலாக் விடுவது தான். அதைச் செய்யாத வரையில் உங்கள் தாய், தந்தை மற்றும் பெரிய தாயார் ஆகிய மூவருமே தவறில் தான் இருக்கின்றார்கள்.
உங்கள் தாய் தந்தையர் தவறில் இருந்தாலும் அவர்களோடு இணங்கி வாழ்வதால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் என் தாயார் என்னிடம் வந்திருந்தார். அப்போது அவர் இணை வைப்பவராக இருந்தார். நான் அல்லாஹ்வின் தூதரிடத்தில், ''என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடமும் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?'' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''ஆம், நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி), நூல்: புகாரி 2620
மிகப் பெரும் பாவமான ஷிர்க்கில் அஸ்மா (ரலி) அவர்களின் தாயார் இருந்த போது கூட அவருடன் உறவைப் பேணி நடந்து கொள்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளிக்கின்றார்கள். அல்லாஹ்வும் தனது திருமறையில் இவ்வுலகில் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான்.
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன். (அல்குர்ஆன்31:15)
எனவே தாய், தந்தையர் தவறில் இருந்தாலும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து, இணங்கி வாழ்வது தான் பிள்ளைகள் மீது கடமையாகும்.